• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-09 19:18:58    
அற்புத்தம் ஏற்படுத்தும் கலை நிகழ்ச்சி

cri

நான்கு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஏதென்ஸ் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முடிவு விழாவில் சீன ஊனமுற்றவர்கள் அரங்கேற்றிய ஆயிரம் கைகள் கொண்ட தேவி என்ற கலைநிகழ்ச்சியால் சீன ஊனமுற்றவர் கலை குழு பலரின் மனதில் ஆழப் பதிந்துள்ளது. கலை குழுவுறுப்பினர்கள் ஊனமுற்றோர் ஒலிம்பிக் துறையுடன் இணைந்தவர்களாவர். செப்டம்பர் 6ம் நாள் நடைபெற்ற பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் இக்கலைக் குழுவுறுப்பினர்கள் அரங்கேற்றிய கலை நிகழ்ச்சிகள் மீண்டும் மக்களை அதிசயிக்கச் செய்துள்ளனர். அந்த விழாவில் 109 செவிப்புலனற்றவர்களும் சிச்சுவான் வென்ச்சுவான் கடும் நிலநடுக்கத்தில் உயிர் தப்பிய சிறுமி லீ இயெவும் அரங்கேற்றிய "என்றுமே நிற்காத நடன காலடி" என்ற கலை நிகழ்ச்சி தனக்கு மாபெரும் ஆற்றல் வழங்கியது. உள்ளார்ந்த உணர்வை வெளிப்படுத்த மொழி பற்றாக்குறை என்று பெய்ஜிங் மாநகரவாசி செல்வி மா யூ ச்சியா வர்ணித்தார். அவர் இது பற்றி கூறியதாவது

மனமுருகிப் போனேன். அவர்கள் கேட்கும் திறனற்ற நிலையில் ஆசிரியர்களின் சைகை வழிக்காட்டலில் 109 பேர் ஒருவர் போல் ஆடிக் காட்டிய உணர்வு அவ்வளவு கம்பீரமானது. மனிதருக்கு உள்ளார்ந்த ஆற்றல் கட்டற்ற நிலையில் உள்ளதை அவர்களின் அரங்கேற்றம் உணரச் செய்துள்ளது என்று அவர் கூறினார். துவக்க விழாவில் விழிப்புலனற்ற பாடகி யான் ஹை ற்ஹோ சீன மற்றும் ஆங்கில மொழியில் "வான்" என்ற பாடலை பாடினார். விழிப்புலனற்ற பியோனோ இசைக்கலைஞர் கிங் யூன் குவே "நான்கு பருவ காலங்கள்" என்னும் நிகழ்ச்சியில் வாசித்த இசை ஆகியவை மக்களின் மனதில் ஆழப் பதிந்துவிட்டன. அவர்கள் சீன ஊனமுற்ற கலைக் குழுவைச் சேர்ந்தோர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கலைக் குழு கடந்த 80ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது. தற்போது 150க்கும் அதிகமான கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் சீனாவின் பல்வேறு இடங்களை சேர்ந்தவராவர். அவர்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று அங்கே வாழும் மக்களுக்கு தலைசிறந்த கலை நிகழ்ச்சிகளை நடத்தித் தந்துள்ளனர். கடந்த 20க்கும் அதிகமான ஆண்டுகளில் அவர்கள் 60க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் கலைப் பயணம் செய்தனர். 2007ம் ஆண்டு மட்டும் அவர்கள் 150 முறை கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். துவக்க விழாவில் வான் என்ற பாடலை பாடிய யான் ஹை ற்ஹோ 2001ம் ஆண்டு கலைக் குழுவில் சேர்ந்து 7 ஆண்டுகளாகிவிட்டது. சீன மொழியில் இந்த பாடலை பாடுவதில் அவருக்கு இன்னல் ஏதுவும் இல்லை. ஆனால் ஆங்கிலத்தில் பாடும் போது அவர் மாபெரும் முயற்சி செய்ய நேரிடும். இது பற்றி அவர் கூறியதாவது.

எனக்கு ஆங்கில மொழி தெரியாது. மற்றவரின் பாடலொலியை கேட்டு அவரை போன்று பாட பாடுபட்டேன். ஆகவே செவியாற்றலின் படி நான் ஒவ்வொரு சொல்லையும் உச்சரிப்பையும் சரியாக உச்சரித்து பாட பாடுபட்டேன் என்றார் அவர். அதிகம் வெளிப்படையாக பேச விரும்பாத யான் ஹை ற்ஹோ அவருடைய வாழ்க்கையின் ஆன்மாவை கண்டுபிடித்தார். அதுதான் இசையாகும். சீன ஊனமுற்ற கலைக் குழு பெரிய குடும்பம் போல் இருக்கின்றது. மூத்தவரின் வயது 34. மிக இளையவரின் வயது 10. ஆனால் அவர்கள் ஒரு குடும்பமாக பழகுகின்றனர். குழுவின் தலைவரும் கலை கண்காணிப்பாளருமான தை லி குவா சைகை மூலம் நமது செய்தியாளர்களிடம் அவர்களின் விருப்பத்தை தெரிவித்தார். குழுவின் துணைத் தலைவர் லீ லின் அவருடைய கருத்தை வர்ணித்தார்.

நாங்கள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மூலம் சிறப்பு வடிவத்தில் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்ற விரும்புகின்றோம். ஊனமுற்றவர்களின் ஆர்வத்தையும் ஊனமுற்ற குழந்தைகள் அனைவரின் சார்பில் இரண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு இறை வேண்டலையும் தெரிவிக்கின்றோம் என்று லீ லின் தை லி குவாவின் கருத்தை தெரிவித்தார். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்காக பயிற்சிப் பிரிவின் ஆலோசகர் திரு ச்சௌ ச்சி குவா நீண்டகாலமாக ஊனமுற்றவருக்கான பணியில் ஈடுபட்டுள்ளார். இத்துறை பற்றி நமது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.

நமது வாழ்க்கையில் பல இன்னல்களை நாம் சந்தித்தாலும் ஊனமுற்றவர்கள் சந்தித்த இன்னல்களை ஒப்பிட்டு பார்க்கும் போது அவை எதுவும் பெரியதல்ல. அவர்கள் வாழ்க்கை முழுவதிலும் அவர்களின் ஊனத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் அடிபணிய வில்லை. மனவுறுதியை இழக்க வில்லை. அவர்களுக்கு உதவும் போது எங்கள் உணர்வுக்கு நன்மை விளையும் என்றார் அவர்.