• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-10 10:09:18    
குவான் பாவ் இடையிலான நட்பு

cri
இது நட்பை பற்றி கூறப்படும் ஒரு சொற்றொடர் அல்லது சொல்லடை. இதன் பின்னணியிலான கதை அறிந்துகொள்வோம்.
போரிடும் நாடுகள் காலத்தில் வாழ்ந்த குவான் ஷுங் என்பவர் ச்சி நாட்டின் மிகவும் புகழ் பெற்ற ஒரு தலைமை அமைச்சர். அவரது நிர்வாகத்தின் கீழ் ச்சி நாடு குறிப்பிடத்தக்க காலம் வரை மிக வலிமை பொருந்திய நாடாக, அனைத்து நாடுகளையும் தன் கீழ் கொண்டு வந்த, ஏகாதிபத்திய வல்லரசாக இருந்தது எனலாம்.
குவான் ஷுங்கும் பாவ்ஷு யாவும் சிறுவயது முதலே நண்பர்கள். பொதுவாக எதையாவது வாங்கச் சென்றாலோ அல்லது வர்த்தகம் செய்தாலோ, குவாங் ஷுங் எப்போதும் லாபத்தில் தன்னுடைய பங்குக்கு அதிகமாகவே எடுத்துக்கொள்வான். ஆனால் அதை பற்றி பாவ்ஷு குறைகூறவில்லை. கொஞ்சம் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த குவாங் ஷுங், தனது வயதான தாயை பராமரிக்கும் கடமை கொண்டிருந்தான் என்பதை உணர்ந்த பாவ்ஷு அவனுக்கு கூடுமானவரை உதவ முயன்றான். தான் எடுத்த நகர்வுகளெல்லாம் வெற்றியின்றி முடிந்ததை கண்டு குவான்ஷுங் மனம் தளர்ந்து விடக்கூடாது என்பதால், பாவ்ஷு தவறு அவனிடமில்லை, வாய்ப்பும் சூழலும் பொருந்தாததால் வந்ததே இந்த தோல்விகள் என்று அவனை தேற்றினான். குவான்ஷுங் பலமுறை அரசு அதிகாரியாவதற்காக முயன்று தோற்றபோதெல்லாம் பாவ்ஷு அவனுக்கு பக்கபலமாய், ஆதரவுத்தோளாய் இருந்து அவனை தேற்றினான்.
பின்னாளில் குவான்ஷுங் இளவரசன் ச்சியுவிடம் பணிபுரிந்தபோது, பாவ்ஷு இலவரசன் ஷியாவ்போவிடம் பணிபுரிந்தான். சேவையாற்றிய இருவரும் நண்பர்கள் என்றாலும், அவர்கள் சேவை புரிந்த இளவரசர்கள் இருவரும் முடிக்காக முட்டிக்கொண்டவர்கள். ஆட்சியை பிடிப்பதற்காய், அரியாசனம் ஏறுவதற்காய் போட்டியிட்டவர்கள். போட்டியில் இளவரசன் ஷியாவ்போ வென்று முடிசூட்டினான். மணிமகுடம் சூட்ட தடையாயிருந்து தன்னிடம் தோற்ற இளவரசன் ச்சியுவை கொன்ற ஷியாவ்போ, அவனிடம் சேவை புரிந்த குவான்ஷுங்கை சிறையிலடைத்தான்.
நண்பன் சிறையில் வாடுவதை கண்ட பாவ்ஷு, அரசனிடம் சென்று நண்பனுக்காக குரல்கொடுத்தான். குவான்ஷுங் அரசியல் விவகாரங்களில் தேர்ந்தவன் என்பதால், அரசனிடம் அவனுக்காக பரிந்து பேசினான்.
அரசே நீங்கள் அனைத்து நாடுகளையும் உங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவரவேண்டுமாயின் குவான் ஷுங்கை நீங்கள் உங்களது தலைமையமைச்சராக அமர்த்திக்கொள்ளவேண்டும் என்று நண்பனுக்காக வாதாடினான் பாவ்ஷு. அரசனும் பாவ்ஷுவின் கருத்தை ஏற்றவனாய், சிறையிலிருந்த குவான்ஷுங்கை தனது தலைமையமைச்சராக நியமித்தான். சிறையில் ஒருநாள் சீர்மிகு பதவியில் மறுநாள் என்பதாக குவான்ஷுங்கின் தகுநிலை மாறியது. அவனுக்காக பரிந்து பேசிய பாவ்ஷுவை விட குவான்ஷுங் பெரிய பதவியில் அமர்ந்தான். பாவ்ஷு சொன்னது போலவே, குவான்ஷுங்கின் மதிநுட்பத்தால் ஏழே ஆண்டுகளில் ச்சி நாடு ஏகாதிபத்திய வல்லரசாக மாறியது.
ஆக பின்னாளில் ஆழமான நட்பையும், புரிந்துணர்வையும் குறிப்பிட Guan Bao zhi jiao, குவான் பாவ் இடையிலான நட்பு என்ற சொல்லடையை மக்கள் பயன்படுத்தினர்.