• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-10 10:14:58    
போட்டிக்கு கிரேக்கம் பிரதிநிதிக் குழுவின் செய்தித் தொடர்பாளரின் பாராட்டு 1

cri
பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு கிரேக்கம் பிரதிநிதிக் குழுவின் செய்தித் தொடர்பாளரின் பாராட்டு பற்றி தொடர்ந்து தங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.
கிரேக்க ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டு பிரதிநிதிக் குழுவின் செய்தித் தொடர்பாளர் Kostaris, ஊனமுற்றோர் ஒலிம்பிக் கிராமத்தில் எமது செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். கிரேக்க பிரதிநிதிக் குழுவின் நிலைமையை அவர் விவரித்தார். அத்துடன், பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்தப் பணிகளை Kostaris வெகுவாக பாராட்டினார்.

கிரேக்க ஊனமுற்றோர் ஒலிம்பிக் அமைப்புக் குழு அனுப்பிய 69 ஊனமுற்றோர் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 123 பேர் இடம்பெறும் பிரதிநிதிக்குழு, 2008ம் ஆண்டு பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்கின்றார்கள். இதில் இடம் பெறும் 11 போட்டிகளில் அவர்கள் கலந்துகொள்வார்கள் என்று Kostaris கூறினார்.
எங்களைப் பொறுத்த வரை, நடப்பு பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு ஆயத்தம் செய்யும் வகையில், தலைசிறந்த அணியை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்றார் அவர்.
கிரேக்க பிரதிநிதிக் குழுவின் மேம்பாட்டுள்ள போட்டி தடகள போட்டிகளாகும். இவ்வணியிலுள்ள 31 ஊனமுற்ற விளையாட்டு வீரர்கள் தடகளப் போட்டியில் கலந்துகொள்கின்றார்கள். இதில் சுமார் 10 அல்லது 15 வீரர்கள் பதக்கங்களைப் பெறக் கூடும். தடகளப் போட்டியில் கிரேக்க வீரர்கள் மேலதிக பதக்கங்களைப் பெற கிரேக்கம் விரும்புகின்றது. கிரேக்க பிரதிநிதிக் குழு மேம்பாடான இதர போட்டி நீச்சலாகும்.

இப்பிரதிநிதிக் குழுவின் கொடியை ஏந்தியவரான நீச்சல் வீரர் Taiganidis ஏதென்ஸ் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 2 தங்கம் பதக்கங்களையும் 2 வெள்ளி பதக்கங்களையும் பெற்றிருக்கின்றார். அவரிடம், கிரேக்கம் பிரதிநிதிக் குழு அதிக எதிர்பார்பு கொண்டுள்ளது. கிரேக்க ஊனமுற்றோர் விளையாட்டுப் பிரதிநிதிக் குழுவில் கிரேக்கத்தின் பல்வேறு துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர் என்று Kostaris கூறினார்.
சிட்னி ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட போது, நாங்கள் 42 பேரை விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பினோம். அவர்கள் 5 போட்டிகளில் கலந்துகொண்டார்கள். கிரேக்க பிரதிநிதிக் குழு தலைசிறந்த வீரர்களை கொண்டிருப்பதற்கு நாங்கள் பகிழ்ச்சி அடைகின்றோம். இதிலுள்ள பல வீரர்கள் பதக்கங்களைப் பெறக் கூடும். பிரதிநிதிக் குழு உள்ளிட்ட முழு கிரேக்கத்தை பொறுத்த வரை, இது முக்கியத்துவம் வாய்ந்தது என்றார் அவர்.

இவ்வாண்டு மார்ச் திங்களில், Kostaris பெய்சிங்கிற்கு வந்து, பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு நடத்திய சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
கடந்த 6 திங்களில், பெய்சிங்கில் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு பல பணிகளை நனவாக்கியுள்ளது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்து, போட்டிகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர். ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டிகளில் சேவைபுரியும் தன்னார்வத் தொண்டர்களின் புன்சிரிப்பு, நாங்கள் சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வை தருகின்றது என்றார் அவர்.பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் கிராமத்தை Kostaris வெகுவாக பாராட்டினார். ஊனமுற்றோர் ஒலிம்பிக் கிராமம் எழிலும் வசதியும் மிகுந்ததாகும். ஊனமுற்றோர்களுக்கு தேவையான மனித இயல்பு வாய்ந்த வசதிகளைக் கொள்கின்றது. ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்கின்ற வீரர்களின் வாழ்க்கை மேலும் அதிக இன்பமாக மாறும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.