பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா மிகச் சிறப்பாக அமைந்தது மட்டுமல்ல, உபசரிப்பு நாடான சீனா அனைத்து விதங்களிலும் பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேங்களின் ஊனமுற்ற விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துவது மக்களின் மனதில் ஆழப்பதிந்துள்ளது. சிங்கப்பூரின் lianhe zaobao செய்தி ஏடு இன்று வெளியிட்ட தலையங்கத்தில் இவ்வாறு கூறியுள்ளது.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியுடன் ஒப்பிடுகையில், ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சீனா கவனம் செலுத்தும் அளவில் எந்து வேறுபாடும்இல்லை. சில துறைகளில் மேலும் மனித நேய இயல்பு வாய்ந்த ஏற்பாடுகளை செய்தது என்று இக்கட்டுரை கூறியது.
ஊனமுற்றோர் ஒலிம்பிக் கிராமத்திலும் ஒலிம்பிக் திடல்கள் மற்றும் அரங்குகளிலும் அமைந்துள்ள தடையில்லாமல் செல்லும் சிறப்பு வசதிகள், சிறப்பு நட்பு தொண்டர் அணி முதலியவை, தனிமனித மதிப்புக்கும் மாண்புக்கும் சீனா வெகுவாக கவனம் செலுத்துவதை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளன என்றும் இக்கட்டுரை கூறியது.
|