• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-11 15:21:57    
கம்பியில்லா இணைய வசதி

cri
கம்பியில்லா இணைய வசதி

பெய்சிங் மாநகர் முழுவதும் கம்பியில்லா இணைய வசதி மிக விரைவாக வழங்கப்படவுள்ளது என்று sina.com இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. கம்பியில்லா பெய்ஜிங் திட்டத்தை செயல்படுத்திவரும் sina.com செய்தித்தொடர்பு நிறுவனம், இச்சேவையை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போது இலவசமாக வழங்கவுள்ளது. அது தன்னுடைய திட்டத்தை மூன்று கட்டங்களாக செயல்படுத்தும். ஜூன் 25 ஆம் நாள் முதல் சோதனை முறையில் தனது முதல் கட்டத்தை தொடங்கி 100 சதுர கிலோமீட்டர் சுற்றளவுக்குள் கம்பியில்லா இணையச் சேவை வழங்கும். 2009 இல் தனது இரண்டாவது கட்டத்தையும், 2010 த்தில் மூன்றாவது கட்ட நடவடிக்கைகளை நிறைவுசெய்து கம்பியில்லா பெய்ஜிங் திட்டத்தை பெய்ஜிங் மாநகரம் முழுவதும் நடைமுறைப்படுத்தவுள்ளது. மக்கள் பயன்படுத்தும் மடிக்கணினிகள், கையடக்க கணினிகள், வெய்ஃபைய் என்ற உயர்தர கம்பியி்ல்லா தொழில்நுட்பத்தை பெற்றுள்ள செல்லிடபேசிகள் ஆகியவற்றிற்கு இந்த சேவை வழங்கப்பட முடியும். இதற்கு 150 சமிக்ஞை கோபுரங்களையும், 9,000 கம்பியில்லா வசதி பெறும் பொது மையங்களையும் அமைத்து 2009 ஆம் ஆண்டிற்குள் பெய்ஜிங் மாநகரின் 90 விழுக்காட்டுக்கு மேற்பட்ட தெருக்களில் கம்பியில்லா இணையச் சேவையை வழங்கவுள்ளது.