• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-11 14:24:52    
பெய்ஜிங்கிலுள்ள 798 கலை மண்டலம்

cri
798 கலை மண்டலம், பெய்ஜிங்கின் வடக்கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ளது. இதனைப் பார்வையிடுகின்ற பயணிகள், பலவித கலை உணர்வுகளையும், கலை மீதான புரிந்துணர்வையும் கருத்துக்களையும் பெற்ற செல்கின்றனர்.

இந்தக் கலை மண்டலம், நகர மையத்திலிருந்து கொஞ்சம் தொலைவில் இருந்த போதிலும், அதனை ஒட்டி செல்லுகின்ற பேருந்து நெறிகள் மிகவும் அதிகம், எனவே பேருந்து மூலம் அங்கு செல்வது வசதியாக இருக்கிறது. கலை மண்டலத்தில் ஒழுங்கான வீதிகளையும், வேறுபட்ட வடிவிலான கட்டிடங்களையும், பல்வேறு நாடுகளின் சுற்றுலாப் பயணிகளையும் பார்க்க முடிகிறது. பிரான்ஸ் நாட்டுப் பயணிகள் பெய்ஜிங் வந்த போது, பெருஞ்சுவர், தியென் தன் பூங்கா, 798 கலை மண்டலம் ஆகியவற்றைக் கண்டிப்பாக பார்க்க விரும்புகின்றனர். இதற்கு காரணம் என்ன?இந்தக் கலை மண்டலத்தை, பாலிஸ் நகரில் மிகவும் புகழ்பெற்ற கலை வீதியுடன் இணைந்து பார்ப்பது, அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. எனவே, இக்கலை மண்டலத்தை அவர்கள் பார்க்க தவறுவதில்லை.

பல்வகை ஓவியக்கடை, வடிவமைப்பு அலுவலகம், கலை கண்காட்சியகம், கலைஞர் பணியகம், கடை, புத்தகக் கடை, உணவு மற்றும் மதுவகம், தேனீரகம் முதலிய பண்பாட்டு கலை இடங்கள் 798 கலை மண்டலத்தில் நிறைந்துள்ளன. இதிலுள்ள ஒவ்வொரு பொருட்களும், கலையுடன் தொடர்பு கொண்டுள்ளன. இது, சீனப் பண்பாட்டுக் கலை கண்காட்சி மையமாக மாறியுள்ளது. 798 கலை மண்டலம், நாள்தோறும் வேறுபட்ட கலை வடிவங்களில் மக்களுக்கு தமது தனிச்சிறப்பியல்புடைய கலை சூழ்நிலையை எடுத்துக்காட்டி வருகிறது.
அண்மையில் இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள், நிறைந்து காணப்படும் ஒலிம்பிக் எழுச்சி சூழ்நிலையை உணர்ந்துகொள்ளலாம். பாதையின் இரு பக்கங்களிலும், பெய்ஜிங் ஒலிம்பிக்கை உயர்வாக போற்றும் கலைக் கண்காட்சியின் விளம்பரங்களைக் காணலாம். பாலம் என்னும் கலை இடத்தில், இக்கண்காட்சி நடைபெறுகின்றது.

சீனாவின் புகழ்பெற்ற ஓவியர் வூ குவான்சூங் உள்ளிட்ட பல ஓவியர்களின் படைப்புகளும், சில தலைச்சிறந்த இளைய கலைஞர்களின் படைப்புக்களும், இக்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. பணியாளர் ஹோ ஹுவான் அம்மையார் கூறியதாவது:
பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்பு குழு விருதையும் அதிகாரத்தையும் வழங்கிய ஒரேயோரு சீன நவக்கால கலைப் படைப்பு கண்காட்சி, இதுவாகும். இதில், சுமார் 15 கலைஞர்கள் கலந்துகொண்டனர் என்றார் அவர்.
798 கலை மண்டலத்தில், நாள்தோறும் பல கலை கண்காட்சிகள் நடைபெற்று வருகின்றன. 2006ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் 798 கலை விழா நடைபெற்று வருகின்றது.

798 கலை மண்டலம் குறித்து, அமெரிக்காவின் மின்னசொட்டா மாநிலத்தின் பயணி BATTY FALLY தமது உணர்வை வெளிப்படுத்தினார்.
சீனாவின் அழகான நவீனக் கலைப்பொருட்களைப் பார்த்த போது, வியப்பு அடைந்தேன். சில படைப்புகள் பரவாயில்லை. இவைகளை படைத்த கலைஞர்களின் பெயர்கள் எனக்கு தெரியாது இருந்த போதிலும், இந்தக் கலைப்பொருட்களில், சீன நவீன கலை, சுறுச்சுறுப்பாக வளர்வதைக் காண முடிந்தது என்றார் அவர்.