• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-11 16:04:25    
2008 சீனத் தேசிய பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு பொருட்காட்சி துவங்கியது

cri

3 நாட்கள் நீடிக்கும் 2008 சீனத் தேசிய பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு பொருட்காட்சி செப்டம்பர் இன்று பெய்சிங்கில் துவங்கியது. பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் பண்பாட்டு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். சீன ஊனமுற்றோர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் Wang Xinxian, சர்வதேச ஊனமுற்றோர் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் Philip Craven ஆகியோர் துவக்க விழாவில் கல்ந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.

ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, பிரிட்டன், ஸ்வீடன் உள்ளிட்ட 16 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 170க்கு மேலான தொடர்புடைய நிறுவனங்கள் இப்பொருட்காட்சியில் கலந்து கொண்டன. ஊனமுற்றோருக்கு உதவும் வசதிகள், உடல் நல மீட்புக்கான சாதனங்கள் மற்றும் தடையில்லாமல் செல்ல உதவும் வசதிகள் முதலியவை இப்பொருட்காட்சியில் பார்வைக்கு வைக்கப்படும்.

நடப்புப் பொருட்காட்சி பொது மக்களுக்கு இலவச அனுமதி கொண்டது. ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் இப்பொருட்காட்சிக்கு வருகை தருவர் என்று தெரிய வருகின்றது.