• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-11 18:11:26    
உலகத்தை மனமுருகச் செய்த விளையாட்டு வீரர்கள்

cri

இன்று, 2008ம் ஆண்டு பொய்சிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 5வது நாளாகும். கடந்த சில நாட்களாக, இந்த போட்டியில் பங்கேற்ற வீரர்கள் இயன்ற அனைத்தையும் செய்து, தொடர்ந்து தலைசிறந்த சாதனையை உருவாக்கி, தங்களுக்கும் தங்களது நாடுகளுக்கும் பெருமை சேர்த்தனர். பெய்சிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் பெற்றிகள் உள்ளன. இது மட்டுமல்ல, அவர்கள் வெளிக்காட்டிய நியாயமான போட்டி முறையும் மனவுறுதியோடு இயன்ற அளவு மேற்கொண்ட முயற்சியின் எழுச்சியும், உலக மக்களின் மேலதிக கவனத்தை ஈர்த்துள்ளன. அவர்களது எழுச்சியும் மனவுறுதியும், நம் அனைவரையும் ஊக்கப்படுத்துவதோடு, உலகம் முழுவதிலும் ஓர் உலகம் ஒரு கனவு என்ற முழக்கத்தின் உண்மையை முழுமையாக விளக்கியுள்ளது.

உடலில் உள்ள குறைபாடுகளுக்கு ஏற்ப, பல பிரிவுகிளில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. நேற்றிரவு நடைபெற்ற F-10நிலை மகளிர் ஒற்றையர் மேசை பந்துப் போட்டியில், ஒரு கையை மட்டும் கொண்ட போலந்தின் விளையாட்டு வீராங்கனை நடாலியா பார்டிகா அவரது கனவை நனவாக்கினார். ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட மிகச் சிலரில் ஒருவராக, நேற்றிரவு அவர் சீன விளையாட்டு வீராங்கனையை தோற்கடித்து, தங்கப் பதக்கம் பெற்றார். முன்பு நிறைவடைந்த பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், அவர் தனது குழுவினருடன் போலந்தின் மேசைப் பந்து மகளிர் குழுவுக்கு அதன் வரலாற்றில் மிகச் சிறந்த சாதனையை உருவாக்கினார். பெய்சிங்கிலான கோடைக்காலம் குறித்து, நடாலியாவுக்கு வருத்தம் ஏதும் இல்லை. அவரது எதிர்காலம் பற்றி, அவர் மேலும் உயர்வான இலக்கைக் கொண்டார். அவர் இது பற்றி கூறியதாவது

தற்போது, எனது கனவுகளில் ஒரு சில மட்டும் தான் நனவாக்கப்பட்டன. ஏனென்றால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் குழுப் போட்டியில் கலந்து கொண்டேன. மகளிர் ஒன்றையர் பிரிவுப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறவில்லை. இதனால், சில குறை நிலவுகிறது. இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தனிநபர் மற்றும் குழுப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். அப்போது, எனது கனவு முழுமையாக நனவாக்கப்படும். அதே வேளையில், போட்டியில் பதக்கம் பெற வேண்டும் என்ற புதிய கனவு எனக்கு உருவாகும் என்று நடாலியா கூறினார்.

போட்டியில் இயன்ற அனைத்தையும் செய்த அவரது எழுச்சி, அதிக மக்களை அதிசயிக்க வைத்துள்ளது. அவர், செய்தி ஊடகங்கள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை அதிகமாக கவர்ந்தார்.

போட்டியின் சாதனையை தவிர, ஊனமுற்றோர் வீரர்கள் போட்டியில் காட்டிய விளையாட்டு எழுச்சியும், மதிப்பான அம்சமாகும். 8ம் நாள் நடைபெற்ற 400 மீட்டர் மகளிர் சுதந்தர பாணி நீச்சல் இறுதிப் போட்டியில், 7 விளையாட்டு வீராங்கனைகள் 50மீட்டரை கடந்த பின் இடையில் நிறுத்தி, மீண்டும் போட்டியை துவக்கினனர். இது, செவிப்புலனை இழந்ததால் ஊதுகுழலின் ஒலியை கேட்க முடியாத ஆஸ்திரேலிய விளையாட்டு வீராங்கனைக்காக மறுபடி செய்யப்பட்ட என்பது குறிப்பிடதக்கது.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், உடலளவில் சவால் விடுக்கப்பட்ட வீரர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் முயற்சியுடன் செய்த எழுச்சி வெளிக்காட்டப்பட்டது. இது மட்டுமல்ல, அவர்கள் விளையாட்டுக்கள் மூலம் தன் ஆற்றலை மேலும் வெளிப்படுத்தி தமது சாதனையை தாமே தாங்கடுவதில் வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் பெருமையையும் கண்டுபிடித்தனர் என்று முழு உலகமும் புரிந்து கொண்டனர் என்பது மேலும் சிறப்பாக குறிப்பிடத்தக்கது. இத்தாலி பாராலிம்பிக் கமிட்டியின் தலைவர் லூகா பான்கல்லி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்த 4000க்கு அதிகமான உடலளவில் சவால் விடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள், பாராலிம்பி்க் என்ற முக்கிய விளையாட்டு அரங்கில் தங்களது இருப்பையும் சாதனையையும் வெளிக்காட்டுகின்றனர். இதன் மூலம், அவர்கள் தாழ்வு உணர்வு கொள்ள மாட்டார்கள். மாறாக, ஒலிம்பிக்கில் பங்கேற்ற மற்ற சாதாரண விளையாட்டு வீரர்களை போலவே சம மகிழ்ச்சியையும் வெற்றியையும் அவர்கள் உணர்ந்து கொண்டனர். தவிர, பாராலிம்பிக்கில் அவர்கள் பங்கேற்றதன் மூலம், உலகில் விளையாட்டுக்கள் தரும் மகிழ்ச்சியை அனுபவிக்காத ஊனமுற்ற சகோதரர்கள், விளையாட்டுக்கள் அவர்களின் வாழ்க்கைக்கு மேலதிக மகிழ்ச்சி தருவதை புரிந்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புவதாக பான்கல்லி தெரிவித்தார்.

பெய்சிங் பாராலிம்பிக் விளையாட்டு வீரர்கள், தங்களது அறிவு, திறமை மற்றும் மனவுறுதி மூலம், சாதாரண மக்கள் அனுபவிக்காக, அவர்களால் தாங்க முடியாத தடைகளைச் சமாளித்துள்ளனர். இவற்றின் மூலம், தங்களது உள்ளார்ந்த ஆற்றல், சீரான பண்பு ஆகியவற்றை அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். சமூகம் அவர்களுக்கு அன்பு மற்றும் வாய்ப்பை வழங்கினால் தான், அவர்கள் மற்ற மக்களை போல் இயல்பாக சமூகத்துக்கு தங்களது பங்கை ஆற்றலாம் என்று இது நமக்கு உணர்த்துகிறது.