நேற்று பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டியின் 5வது நாளாகும். அன்று, 44 தங்கப் பதக்கங்கள் பெறப்பட்டன. மேசை பந்து மற்றும் தடகள போட்டிகளின் சிறந்த சாதனைகள் மூலம், சீனப் பிரதிநிதிக்குழு, 33 தங்கப் பதக்கங்கள் உள்பட்ட மொத்தம் 96 பதக்கங்களை பெற்றுள்ளது. தங்கப் பதக்கம் மற்றும் பதக்க வரிசையில் சீனப் பிரதிநிதிக்குழு முன்னணியில் இருக்கின்றது. 27 மற்றும் 18 தங்கப் பதக்கங்களை கொண்டு முறையே பிரிட்டன் மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிக் குழு, 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளது.
இன்று, பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டியின் ஆறாவது நாளாகும். 45 தங்கப் பதக்கங்களுக்கு போட்டிகள் நடைபெறும். தடகள போட்டிகள், நீச்சல் மற்றும் சாலையில் மிதிவண்டி போட்டிகளில், தங்கப் பதக்கங்கள் முக்கியமாக வெல்லப்படவுள்ளன.
|