வலிமையான நீ என்ற பாடலைக் கேட்டு இரசியுங்கள். இப்பாடல், மலேசிய பாடகர் a niu வால் பாடப்படுகின்றது. இப்பாடலில், சீனாவின் பாரம்பரிய அரங்கு கலையான நகைச்சுவை உரையாடல் பயன்படுத்தப்படுகின்றது. விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிப்பது, இப்பாடலின் நோக்கமாகும்.
நாம் எல்லோரும், கையோடு கை கோர்த்து,
கூட்டாகப் பாடுபட்டு
கூட்டாக இன்ப வாழ்வை பெறுவோம்.
வலிமையாக இருக்க விரும்புகின்றோம்.
என்ற பொருளை, இப்பாடலின் தொடக்கத்திலுள்ள நகைச்சுவை உரையாடல் வெளிப்படுத்துகின்றது. இவ்வுரையாடல், கேட்பவர்களின் கவனத்தை ஈர்த்து, பாடலின் முக்கிய உள்ளடக்கத்தை வெளிப்படுத்துகின்றது.
|