• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-12 10:10:36    
கிரேக்கம் பிரதிநிதிக் குழுவின் செய்தித் தொடர்பாளரின் பாராட்டு 2

cri
ஊனமுற்றோர் ஒலிம்பிக் கிராமத்தின் எழில் மிக்க தோற்றத்தால் நான் வியப்படைந்து விட்டேன். எழில் மிக்க கட்டிடங்களையும் வசதியான போக்குவரத்து வசதியையும் இது கொண்டுள்ளது. இதில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர் என்றார் அவர்.
கிரோக்கம் ஊனமுற்றோர் விளையாட்டுப் பிரதிநிதிக் குழுவின் செய்தித் தொடர்பாளரான Kostaris, சர்வதேச வானொலி மையத்திலும் முக்கிய செய்தி மையத்திலும் பெரும் பகுதி நேரம் செலவிட்டுள்ளார். நடப்பு ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் செய்தி ஊடக சேவை பற்றி தனது கருத்துக்களை அவர் தெரிவித்தார்.

செய்தி ஊடக சேவை உயர் வரையறையைக் கொள்கின்றது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, செய்தி ஊடக சேவைக்கு ஊழியர் அனைவரும் மனநிறைவு தெரிவித்தனர். பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி போன்ற நிலையை செய்தி ஊடக சேவை பணி எட்டுவதாக நான் நம்புகின்றேன் என்றார் அவர்.
ஏதென்ஸ் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பெற்ற அனுபவங்கள் குறித்து, பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பெய்சிங் மாநகருக்கு மாற்றத்தை வழங்கும் என்று Kostaris கூறினார். தற்போது, பெய்சிங்கின் பல கட்டிடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவை வசதிகள் தடையன்றி செல்லும் வசதிகளை அதிகரித்துள்ளன. பெய்சிங்கில் வாழ்கின்ற ஊனமுற்றோருக்கு இவை பல வசதிகளை வழங்கி, அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும். ஏதென்ஸ் போல், பெய்சிங் நீண்டகால வரலாற்றையும் பண்பாட்டையும் கொள்கின்றது. குறுகிய

காலத்தில், நகர வசதிகள் மற்றும் கட்டிடங்கள் முழுவதும் தடையன்றி செல்லும் வசதிகளை நனவாக்குவது கடினம். ஆனால், பெய்சிங் தொடர்ந்து வளர்க்கின்றது.
ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மூலம், பெய்சிங் நகரவாசிகள் ஊனமுற்றோரின் சேவைப் பணியில் கவனம் செலுத்துவார்கள் என்று Kostaris கருதுகின்றார்.
எங்கள் அனுபவத்தைப் பார்க்கும் போது, மக்கள் சிந்தனையில் ஏற்படும் மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்தது. பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மூலம், பெய்சிங் நகரவாசிகள் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டிகளை நேரடியாக உணரலாம். ஊனமுற்றோர்களுக்கிடையில் நடைபெற்ற உயர் நிலையான போட்டிகளை மக்கள் அனைவரும் கண்டு இரசிக்கலாம். அத்துடன், ஊனமுற்றோர் பற்றிய அவர்களின் கருத்துக்களில் மாற்றம் ஏற்படலாம். நாங்கள், ஊனமுற்றோர்

விளையாட்டு வீரர்களை அவர்கள் இருப்பது போல் ஏற்றுக்கொண்டு, மதிப்பு கொடுக்கின்றோம். சீன ஊனமுற்றோர் பணி உள்ளிட்ட உலக ஊனமுற்றோர் பணியை பொறுத்த வரை, 2008ம் ஆண்டு பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சிந்தனை அளவில் ஒரு மாபெரும் மாற்றமாகும். ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியையும் ஊனமுற்றோரையும் சீன மக்கள் அனைவரும் பார்க்கின்ற போது, ஊனமுற்றோருக்கான இலட்சிய கருத்துக்களில் அவர்கள் மாற்றம் காண்பார்கள். ஊனமுற்ற குழந்தைகளின் மாதிரியாக ஊனமுற்றோர் விளையாட்டு வீரரகள் மாறுகின்றனர் என்றார் அவர்.