• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-12 10:57:12    
செவிபுலன் ஆற்ற கேட்கும் திறனற்ற இளம் பெண்

cri
27 வயதான Ao Xing Qin என்னும் இளம் பெண், ஒரு கிராமப்புற ஆசிரியர் ஆவார். அவர் செவிபுலன் அற்றவர். இருந்த போதிலும், அவரது முயற்சியுடன், கிராமத்தில் துவக்கப் பள்ளியின் மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று, காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளின் எதிர்காலம் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், Chong Qing நகரின் Rong Chang மாவட்டத்தில் உள்ள Qing Liu வட்டத்தின் ஒரு துவக்க பள்ளியில், Ao Xing Qin கற்று கொடுத்தார். அப்போது, மாணவர்கள் வாசிப்பதை அவரால் தெளிவாக கேட்க முடியவில்லை. தற்போது, செவிடருக்கான செவிப்புலக் கருவியின் உதவியாலும், அவரால் தெளிவாக கேட்க முடியவில்லை. ஆனால், அவரால் தங்கு தடையின்றி பேச முடியும். இது வியப்புக்குரியது. அவர் கூறியதாவது:
"தற்போது எமது கேட்கும் திறன் மோசமானது. நான் இந்நிலைமையை மாற்ற முடியாது. இது பற்றிய எனது மனப்பான்மையை மட்டுமே மாற்ற முடியும்" என்றார், அவர்.
தற்போது, இந்த கிராமப்புற பள்ளியிலிருந்து அவர் விலகிவிட்டார். அவர் கற்றுக்கொடுத்த மாணவர்கள் வளர்ந்து வருகின்றனர். அவர்கள் இன்னமும் தமது ஆசிரியரை நினைவில் வைத்திருக்கின்றனர்.

குழந்தைப் பருவத்தில் Ao Xing Qinவின் உடல் நலமாக இருந்தது. ஆனால், இடைநிலை பள்ளியில் கற்றுக் கொண்ட போது, அவர் காது கேளாதவராக மாறினார். ஆசிரியர்கள் பாடம் எடுக்கின்ற போது அவரால் தெளிவாக கேட்க முடியவில்லை என்பதால், இதர மாணவர்களை விட, அவர் மேலதிக நேரம் செலவழித்து, சுயமாக கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. மிகவும் நன்றாக கற்றுதேர்ந்தார். அதன் விளைவாக, தேர்வு மூலம் Rong Chang மாவட்டத்தின் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் அவர் சேர்க்கப்பட்டார்.
மூன்று ஆண்டுகள் அவர் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பாடுபட்டு கல்வி பயின்று வந்தார். படிப்பை முடித்த பின், அவர் தமது ஊர் திரும்பி, கிராமப்புற பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்தார். சிறு வயதிலிருந்தே ஆசிரியராக வேலை செய்வதே, அவரது விருப்பமாக இருந்தது. ஆனால், அவரின் கேட்கும் திறன் படிப்படியாக குறைந்து விட்டது.
அது தான் அவரது வாழ்க்கை என்று அடிபணிய அவர் விரும்பவில்லை. தமக்கே ஏற்றதான கற்பித்தல் வழிமுறையை அவர் கண்டுபிடித்தார். வகுப்பில், கரும்பலகையில் எழுதுவதன் மூலம், மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கத் தன்னால்

இயன்றதனைத்தையும் செய்தார். மாணவர்களுடன் உரையாடும் போது, அவர்களுக்கு அருகில் சென்று, அவர்களின் உதடு அசைவுகளுக்கேற்ப பேசியதைப் புரிந்து கொண்டார். படிப்படியாக, மற்றவர்களின் உதட்டை கவனித்து, அவர்கள் பேசுகின்ற வாக்கியங்களின் பொருளை Ao Xing Qin புரிந்து கொள்ள தொடங்கினார்.
இப்பள்ளியில் பாடம் கற்பித்த முதலாவது ஆண்டு, அவரது மாணவர்களின் சராசரி மதிப்பெண், வகுப்புகளில் மிக உயர்வு. மேலும் அவர் கற்றுக்கொடுக்க துவங்கிய பின்னர் ஆண்டுதோறும் தலைசிறந்த ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.