அண்மையில், சில வெளிநாடுகளின் அரசியல் தலைவர்களும், மக்களும், சர்வதேச நிறுவனங்களை சேர்ந்தோறும், பெய்சிங் பாராலிம்பிக் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பல்வேறு ஏற்பாட்டுப் பணிகளை வெகுவாக பாராட்டினர். அனைத்துலக உடல் மாற்று திறனுடையோரின் இலட்சியத்துக்கு சீனா மாபெரும் பங்காற்றியது என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
சீனாவில் பயணம் மேற்கொண்டு வரும் வங்காளதேச இடைக்கால அமைச்சரவையின் தலைமை அமைச்சர் Fakhruddin Ahmed நேற்று செய்தியாளருக்குப் பேட்டி அளித்த போது, மிகச் சிறந்த பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி அவரின் மனதில் ஆழப்பதிந்துள்ளது என்று கூறினார். தாம் மேற்கொண்டு வரும் பயணத்தையும், கலந்து கொண்டு வரும் பெய்சிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவையும் மிகவும் எதிர்பார்க்கினஅறதாகவும் அவர் தெரிவித்தார்.
பெய்சிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தலைசிறந்த ஏற்பாட்டுப் பணி, உலகில் மாற்று திறனுடையோர் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது என்று அமெரிக்காவின் அரசு சாரா அமைப்பான உலக மாற்று திறனுடையோர் சம்மேளனத்தின் தலைவர் George B.Kerford கூறினார்.
பெய்சிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் மாற்று திறனுடையோர் அரங்கேற்றிய கலைநிகழ்ச்சிகள் மிகச் சிறுப்பானவை. இது, மாற்று திறனுடையோருக்கான சீன மக்களின் சிறப்பு கவனத்தை வெளிப்படுத்தியது என்று பிரேசிலின் மூத்த செய்தியாளர் Magalhaes தெரிவித்தார்.
|