• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-12 17:23:53    
பெய்சிங் பாராலிம்பிக்கின் அமைப்புப் பணிக்கான பாராட்டு

cri

இன்று, பெய்சிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடர்ந்து நடைபெறுகிறது. முழு விளையாட்டுப் போட்டியும் பாதியளவைத் தாண்டியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர், நடப்புப் போட்டியின் அமைப்புப் பணியை வெகுவாக பாராட்டுகின்றனர்.

விளையாட்டுப் போட்டி பாதியளவை தாண்டியதுடன், BMX எனும் சிறுசக்கர மிதிவண்டிப் போட்டி, குதிரையேற்றக்கலை போட்டி முதலியவை நிறைவடைந்தன. பல்வேறு நாடுகளின் பிரதிநிதிக் குழுக்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு தரமான சிறந்த சேவையை வழங்க, பெய்சிங் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளின் விருந்தினர்களும், அமைப்புப் பணியின் நுணுக்கங்களை அனுபவித்து பாராட்டினர். அவர்களது பாராட்டுக்கள், மக்களிடம் மிக உண்மையான பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வெளிக்காட்டுகின்றன.

பெய்சிங் பாராலிம்பிக், அவரது மனதில் ஆழப்பதிந்ததாக தென் கொரியாவின் புகழ்பெற்ற வில்வித்தை விளையாட்டு வீரர் லீ ஹோங் கோ தெரிவித்தார். அவர் கூறியதாவது

நான் 2000 மற்றும் 2004ம் ஆண்டு பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டேன். ஆனால், பெய்சிங் பாராலிம்பிக் போட்டி மிகவும் சிறந்ததாக உள்ளது. இதில் மிகவும் மனநிறைவு அடைகிறேன் என்றார் லீ ஹோங் கோ.

விளையாட்டு அரங்குகள் மற்றும் பாராலிம்பிக் கிராமத்தின் தடையற்ற சிறப்பு வசதிகள், சிறந்த சேவை ஆகியவற்றுக்கு வெகுவான பாராட்டுக்கள் கிடைத்துள்ளன. பாராலிம்பிக் கிராமத்திலான வசதிகளும் சேவையும் தலைசிறந்ததாக உள்ளன என்று பெய்சிங்கிற்கு 3வது முறையாக வருகை தந்த பல்கேரியாவின் பாராலிம்பிக் பிரதிநிதிக் குழுவின் தலைவர் இலியா லாலோவ் கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது

பெய்சிங் பாராலிம்பி்க விளையாட்டுப் போட்டிக்கான வசதிகளின் அளவு எனது மனதில் ஆழப்பதிந்துள்ளது. நடப்புப் போட்டிக்கான அமைப்பாளர்கள் மாற்று திறன் உடையோர் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கிய அரங்குகளும், வசிப்பிடச் சூழலும் மிகவும் சிறந்ததாக இருக்கின்றன. அவை, நான் அனுபவித்த மிகச் சிறந்த பாராலிம்பி்க் கிராமாகவும் மிகச் சிறந்த அமைப்புப் பணியாகவும் உள்ளன என்று லாலோவ் கருத்து தெரிவித்தார்.

இலங்கை பாராலிம்பிக் பிரதிநிதிக்குழுவின் தலைவர் ரஜிவ் விக்ரமசிங்கே, சீன உணவுவகைகளில் மிகவும் கவனம் செலுத்தினார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது

இங்கே, நாங்கள் உண்மையான சீன உணவுவகைகளை உட்கொண் சாப்பிட்டோம். உணவுப்பொருட்கள் பசியை தூண்டுபவையாக உள்ளன. அவை எப்படி சிறப்பாக தயாரிக்கப்பட்டன என்பது தெரியவில்லை என்றார் ரஜிவ்.

முகத்தில் எப்போதும் புன்னகை நிறைந்த தன்னார்வத் தொண்டர்களை, விளையாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களும் உயர்வாக பாராட்டினர். பாராலிம்பிக் விளையாட்டுப்போட்டிக்கான தன்னார்வத் தொண்டர்களின் புன்னகையை கண்டு, ரஜிவ் மகிழ்ச்சியடைந்தார். அவர் கூறியதாவது

இவ்வளவு ஆர்வமும் விருந்தோம்பலும் நிறைந்த தன்னார்வத் தொண்டர்களை, நான் இதற்கு முன் கண்டதில்லை. அவர்கள் சிறந்த சேவையை வழங்குவதால், பெய்சிங்கில் தங்கியிருக்கின்ற அன்னியர்கள் ஆறுதலாக, மகிழ்ச்சியாக இருந்தனர் என்று ரஜிவ் கூறினார்.

நடப்புப் போட்டியின் போது, மொத்தம் 6000க்கு அதிகமான சீனா மற்றும் வெளிநாடுகளின் செய்தியாளர்கள் இப்போட்டியை அறிவிக்கின்றனர். இந்த எண்ணிக்கை, பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வரலாற்றில் மிக அதிகமாகும் என்று தெரிய வருகிறது. கென்ய வானொலி நிறுவனத்தின் விளையாட்டுப் பிரிவின் இயக்குநர் ஏலிநா சிபுனா ஷிவேகா அம்மையார் எமது செய்தியாளருக்கு பேட்டி அளிக்கையில், பெய்சிங் பாராலிம்பிக் அமைப்புப் பணியை சிறப்புடன் இருப்பதாக உறுதிப்படுத்தினார். அவர் மேலும் கூறியதாவது

செய்தியாளருக்கான அலுவலத்தில் இருக்கும் போது அல்லது போட்டிகளின் துவக்கத்திற்காக காத்திருத்த போது, ஒவ்வொரு நாளும் பிற்பகல், இலவச தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்படும். இதனால், பல்வேறு நாடுகளின் செய்தியாளர் உயர் பயனுள்ள வசதிகளை அனுபவித்து மகிழ்ச்சியுடன் பணிபுரிந்தனர் என்று ஏலிநா அம்மையார் கூறினார்.

இது வரை, சமாளிக்கப்பட முடியாத பிரச்சினை ஏதும் காணப்படவில்லை என்று ஜெர்மன் தொலைக்காட்சி நிலையத்தைச் சேர்ந்த செய்தியாளர் அமைப்புப் பணி பற்றி குறிப்பிடுகையில் கூறினார்.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியுடன் ஒப்பிடுகையில், பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான மக்களின் ஆர்வம் சம நிலையில் காணப்படுகிறது. இப்போட்டி மீதான மக்களின் அக்கறை குறையவில்லை. மாறாக, மாற்று திறன் உடையோர் விளையாட்டு வீரர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்த எழுச்சிக்கு, பார்வையாளர்கள் மதிப்பு அளிக்கின்றனர்.