தற்போது 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் பல்வேறு ஆயத்த பணிகள் திட்டப்படி ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 10ம் நாள் வரை, இதில் கலந்து கொள்ளும் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் மொத்த எண்ணிக்கை 221 ஆகும்.
இன்று பெய்சிங் மாற்று திறலுடையோர் விளையாட்டுப் போட்டியின் முக்கிய செய்தி மையத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியன் விவகார ஒருங்கிணைப்புப் பிரிவின் துணைத் தலைவர் சென் ஷியன்சின் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறியதாவது
திட்டமிட்டபடி வகுக்கப்பட்ட பணி இலக்கின் படி, 200 நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் இதில் கலந்து கொள்ளும். தற்போது இந்த இலக்கு அடைந்துள்ளது. மேலும், 90க்கு அதிகமான நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் பொருட்காட்சி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன. 10க்கும் அதிகமான நாடுகள் தங்களது காட்சியகத்துக்கான வடிவமைப்புத் திட்டங்களை வெளியிட்டுள்ளன என்றார் சென் ஷியன்சின்.
தவிர, சீட்டு விவகாரம் பற்றிய பொதுத் திட்டம் மற்றும் நுழைவுச் சீட்டு வடிவமைப்புப் பணிகள் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டன. குழு நுழைவுச் சீட்டுக்கான விற்பனைப் பணி இத்திங்கள் இறுதியில் துவங்கும் என்றும் அவர் கூறினார்.
|