• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-16 15:19:56    
நேயர்களின் கருத்துக்கள்

cri
கலை: ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
க்ளீட்டஸ்: உடலில் ஏற்பட்ட ஊனத்திற்கும், ஏன் நல்ல உடலமைப்பு கொண்ட பலருக்கும் சவால் விடும் திறமைகளை நம் ஊனமுற்ற உடன் பிறப்புக்கள் வெளிப்படுத்திக்கொண்டிருப்பதை கண்டு உலகே வியந்துகொண்டிருக்கிறது.
கலை: இரு வகை ஒலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்தும் முயற்சியில் வெற்றி நடைபோடும் சீனாவுக்கு கடிதம், மின்னஞ்சல், தொலைபேசி ஆகியவை மூலம் வாழ்த்து கூறி பாராட்டிய அன்பு நேயர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
க்ளீட்டஸ்:.. பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா உலகத்திற்கு காண்பிக்கப்பட்ட பின் பல பல நேயர்கள் தொலை பேசி மூலம் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளர். அவர்களில் மூவரின் கருத்தை தேர்வு செய்து வழங்குகின்றோம்.

கலையரசி....முதலில் திருச்சி அன்னா நகர் வி.தி.இரவிச்சந்திரன் தெரிவித்த வாழ்த்துரையை கேளுங்கள்.
க்ளீட்டஸ்:....அடுத்து பெரம்பலூர் சு கலைவாணன் ராதிகா தெரிவித்த வாழ்த்துரையை கேளுங்கள்.
கலை.....அடுத்து கேவை மாவட்ட தென்பொன்முடி தெ.நா. மணிகண்டன் தெரிவித்த வாழ்த்துரையை கேளுங்கள்.
கடிதப்பகுதி
கலை: இலங்கை, கினிகத்தேனை எம். பி. மூர்த்தி ஒலிம்பிக் விளையாட்டுச் செய்திகள் பற்றி எழுதிய கடிதம். ஒலிம்பிக் விளையாட்டுச் செய்திகளில், பெய்ஜிங் ஒலிம்பிக் தீபத்தொடரோட்டத்தில் பங்குபெற்ற சில தீபமேந்தும் நபர்களை பற்றிய அறிமுகம் சிறப்பாக இருந்தது. தீபம் ஏந்தியது குறித்த அவர்களது உணர்வு, அனுபவம் மற்றும் எண்ணங்களை பேட்டியின் மூலம் எங்களுக்கு அறியத் தந்தமைக்கு நன்றி.
க்ளீட்டஸ்: அடியக்கமங்கலம் எம். ஜே. நூருல் ஆஃப்ரித் கவிதையாக பெய்ஜிங் ஒலிம்பிக் பற்றி கூறிய கருத்து. நவசீனாவின் மணிமகுடத்தில் ஒளிரும் வைரம் பெய்ஜிங் ஒலிம்பிக்
ஓர் உலகம் ஒரு கனவு என்ற முழக்கத்தில் உலக நாடுகளுடன் செஞ்சீன அமைத்த நட்புப்பாலம் பெய்ஜிங் ஒலிம்பிக்
பறவைக்கூட்டில் வீரர்கள் சாதனைகள் நிகழ்த்திய விழா உலகின் எட்டாவது அதிசயம் பெய்ஜிங் ஒலிம்பிக்
சீன உழைக்கும் கரங்களின் வெற்றிக்கனிகளை உலகமே சுவைக்க கூடியது பெய்ஜிங் ஒலிம்பிக்.

கலை: நல்ல கவிதை. அடுத்து நட்புப்பாலம் நிகழ்ச்சி குறித்து மணமேடு எம். தேவராஜா எழுதிய கடிதம். பெய்ஜிங், நான் ஜிங் ஆகிய நகரங்களில் இந்திய கலைக்குழு, அதிலும் சிறப்பாக தமிழக கலைக்குழு நடத்திய நிகழ்ச்சிகளை பற்றி கேட்டேன். அரசு சாரா இந்திய மற்றும் சீன நிறுவனங்களின் முயற்சியோடு நடத்தப்பட்ட இந்த கலை நிகழ்ச்சிகள், இரு நாட்டு நட்புறவின் ஒளிமயமான எதிர்காலத்தை காட்டுகிறது. எதிர்காலத்தில், சிறுவர் சிறுமியரைக் கொண்ட சீனக் கலைக்குழுவின் தமிழக வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
க்ளீட்டஸ்: தென்பொன்முடி தெ. நா. மணிகண்டன் எழுதிய கடிதம். 2000ம் ஆண்டில் இடம்பெற்ற சிட்னி ஒலிம்பிக் பற்றி ஒலிம்பிக் விளையாட்டுச் செய்திகளில் கேட்டேன். அதன் துவக்க மற்றும் நிறைவு விழாவில் பங்காற்றிய ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினர் தனது அனுபவத்தை மீளாய்வு செய்தபோது, சிட்னி ஒலிம்பிக்கில் நிகழ்ந்த வியப்பான சாதனைகளை அறிந்துகொள்ள முடிந்தது.
கலை: அடுத்து, புதிய காத்தான்குடி ஏ. சி. ஏ. மின்ஹால் எழுதிய கடிதம். 65 ஆண்டுகளுக்கும் மேலாக உலகில் புகழ்பெற்று விளங்கும் சீன வானொலி, பல்வேறு நாடுகளிடையிலான புரிந்துணர்வையும், நட்புறவையும் வளர்க்க உதவி வருகிறது. தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சமூகத்துக்கும் தனி நபருக்கும் உதவும் வகையில் நல்ல நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது சீன வானொலி. என்னை போன்ற நேயர்களுக்கு பயனுள்ளதாய் அமையும் நிகழ்ச்சிகள் தொடரவேண்டும், உங்கள் பணி சிறக்கவேண்டும்.

க்ளீட்டஸ்: ஆண்டரசன்பட்டி கே. எம். ராஜு எழுதிய கடிதம். தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி ஆசிரியர் மாணவரின் அருகிலிருந்து கற்பிப்பது போல் அமைந்து, நன்றாக புரிந்துகொள்ள வைக்கிறது. அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் பாம்புகளை பற்றி கூறினார் தமிழன்பன். பாம்புகளை பற்றி இதுவரை அறியாத பல தகவல்களை வழங்கியமைக்கு பாராட்டுக்கள்.
மின்னஞ்சல் பகுதி
வளவனூர் புதுப்பாளையம், எஸ்.செல்வம்
ஆகஸ்டு திங்கள் 30 ஆம் நாள் இடம்பெற்ற நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழ்ந்தேன். இசை நிகழ்ச்சியில் முத்தான மூன்று பாடல்களை வழங்கினார் திலகவதி. நமது கனவு, நாம் எல்லோரும் ஒரு குடும்பமாகும் மற்றும் தொடர்ந்து வரும் வாழ்க்கைக்காக ஆரவாரம் செய்யுங்கள் ஆகிய மூன்று பாடல்களில், இரண்டாவதாக ஒலித்த •மனித குலம் ஒரு குடும்பமாகும்• என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 2008 ஆம் ஆண்டில் சீன வானொலியில் ஒலித்த சீனப் பாடல்களில் இந்தப் பாடலுக்கு நான் முதலிடத்தை வழங்குகின்றேன். இந்தப் பாடலில் பாடகர், பாடகி ஆகியோரின் குரல், ராகம், இசை என எல்லாமே நன்றாக இருந்தது. என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பாண்டிச்சேரி, ஜி.ராஜகோபால்

பெய்ஜிங் விளையாட்டுப்போட்டி துவங்கிய பின், பெய்ஜிங் ஒலிம்பிக் கிராமத்திற்கு மிக அதிகமான பாராட்டுக்கள் குவிந்த செய்திகளை சீன வானொலியில் கேட்டு ரசித்தேன். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கிய பின், பல்வேறு பணிகள் தங்கு தடையின்றி நடைபெற்று வருவதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளின் தலைவர்களும், வீரர்களும் , அதிகாரிகளும் பாராட்டி வருவது மிகவும் மகிழ்ச்சிக்குறியது. உன்னதமான அதேவேளையில் மிகவும் கடினமான சாதனைளை புரிந்துள்ள சீன அரசுக்கும், சீன மக்களுக்கும், நேயர்களுக்கு உடனுக்குடன் தினமும் வானொலியின் மூலமாக தகவல்களை பரிமாற்றம் செய்து வருகின்ற சீன வானொலி பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்களையும் நன்றிகளையும் கூறிக்கொள்கிறேன்.