கடந்த சில ஆண்டுகளில் சீனாவின் மாற்று திறனுடையோர் இலட்சியம் விரைவாக வளர்ந்துள்ளது. பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி மூலம் இவ்லட்சியத்தின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பல வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் சுட்டிக்காட்டின.
பாராலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்தும் வகையில் பெய்ஜிங் மாநகரில் தடையில்லாத வசதிகளை பொருத்துவதற்காக கோடிக்கணக்கான நிதி தொகை செலவிடப்பட்டுள்ளது என்று தி அப்சர்வர் என்னும் பிரிட்டன் செய்தியேடு அறிவித்தது. மாற்று திறனுடையோர் இலட்சியத்தை வளர்க்கும் வகையில் சீனா மேற்கொண்ட முயற்சி சர்வதேச சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் 8 கோடியே 30 இலட்சம் மாற்று திறனுடையோர் வாழ்கின்ற வளரும் நாடான சீனா தொடர்ந்து அவர்களின் வாழ்க்கை சூழ்நிலையை சீர்செய்ய பாடுபட வேண்டும் என்று சர்வதேச செய்தி ஊடகங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
|