• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-16 09:52:48    
முட்டை சத்துள்ள ஒரு உணவு வகை

 


cri


க்ளீட்டஸ் – இன்று வாணி, க்ளீட்டஸ் இருவரும் உங்களுக்குத் தொடர்ந்து சுவையான சீன உணவு வகைகள் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.
வாணி – அனைவரும் அறிந்தவாறு, முட்டை சத்துள்ள ஒரு உணவு வகையாகும். நாள்தோறும் ஒரு முட்டையைச் சாப்பிட்டால், அது உடல் நலத்துக்கு நன்மை பயக்கும்.
க்ளீட்டஸ் – இன்றைய நிகழ்ச்சியில் முட்டையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு புதிய உணவு வகை பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.
வாணி – ஆமாம், சீனத் தனிச்சிறப்பு மிக்க முட்டை தயாரிப்பு முறை இதுவாகும்.
க்ளீட்டஸ் – அப்படியா, இந்தத் தனிச்சிறப்பு பற்றி கூறுங்களேன்.
வாணி – இந்தியாவை போல, சீனாவும் உலகில் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகும். சீன உணவு வகைகளைத் தயாரிப்பதில் சில வேளைகளில் தேயிலை பயன்படுத்தப்படுகின்றது.
க்ளீட்டஸ் – இன்றைய முட்டை உணவு வகை தயாரிப்பில் தேயிலையும் பயன்படுத்தப்படுகின்றது. அப்படிதானே?
வாணி – நீங்கள் சொன்னது சரி. இன்று நாம் தயாரிக்கும் வறுவலின் பெயர் தேயிலை முட்டை. அடுத்து, தேவையான பொருட்கள் பற்றி கூறுகின்றேன்.

முட்டை 6
தேயிலை சிறிதளவு
சமையல் எண்ணெய் 5 மில்லி லிட்டர்
காய்ந்த சிவப்பு மிளகாய் 2
சமையல் மது 10 மில்லி லிட்டர்
சோயா சாஸ் 20 மில்லி லிட்டர்
உப்பு 2 தேக்கரண்டி
சர்க்கரை 5 கிராம்
நல்லெண்ணெய் 3 கிராம்
மிளகுத் தூள் சிறிதளவு
சீன இலவங்கப்பட்டை 1
இஞ்சி 2 துண்டுகள்
பூண்டுப்பல் 3
க்ளீட்டஸ் – ஐயோ, இந்த முட்டையைத் தயாரிப்பதற்கு அதிக பொருட்கள் தேவை. போலிருக்கின்றதே?
வாணி – ஆமாம். இது தான் இன்றைய உணவு வகையின் தனிச்சிறப்பாகும்.


வாணி – முதலில் முட்டைகளை கழுவி சுத்தம் செய்யுங்கள். பிறகு, ஒரு வாணலியில் அவற்றை போடுங்கள். வாணலியில் போதுதியளவு தண்ணீரை ஊற்றவும்.
க்ளீட்டஸ் – இந்த வாணலியில் முறையே, மிளகுத் தூள், காய்ந்த மிளகாய், இஞ்சி, தேயிலை, பூண்டு சீன இலவங்கப்பட்டை ஆகியவற்றை போடுங்கள்.
வாணி – முட்டைகளை வேகவிடுங்கள். இந்தப் போக்கில், சோயா சாஸ், சமையல் மது, உப்பு ஆகியவற்றை வாணலியில் சேர்க்கலாம்.
க்ளீட்டஸ் – வாணலியிலுள்ள நீர் கொதித்த பின், சர்க்கரையை போடலாம். சமையல் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் இதில் ஊற்றலாம்.
வாணி – மேலும் 10 நிமிடங்கள் வேகவிடுங்கள்.
க்ளீட்டஸ் – இப்போது, என்ன செய்ய வேண்டும்?
வாணி – இப்போது, எமது முட்டைகள் வேகவைக்கப்பட்டுள்ளன. அவற்றை நீரிலிருந்து வெளியே எடுக்க வேண்டும். ஒரு பெரிய தேக்கரண்டி மூலம் எடுத்து அவற்றின் தோலை லைசாக விரிசல் விடுவது போல் தட்டிக்கொள்ளுங்கள். ஆனால் தோலைத் தனியே நீக்கக் கூடாது.
க்ளீட்டஸ் – தோலை நீக்க வேண்டாமா?
வாணி – வேண்டாம். பிறகு, அவற்றை மீண்டும் வாணலியின் சூப்பில் மீண்டும் போடுங்கள். தொடர்ந்து கொதிக்க வையுங்கள்.

க்ளீட்டஸ் – எவ்வளவு நேரம் தேவை?
வாணி – மேலும் அரை மணி நேரம் தேவைப்படும்.
க்ளீட்டஸ் – உடனடியாகச் சாப்பிடலாமா?
வாணி – சாப்பிடலாம். ஆனால், அவற்றை சூப்பில் அப்படியே வைத்தால், மறு நாள் இந்த முட்டைகள் மேலும் சுவையாக இருக்கும்.
க்ளீட்டஸ் – என்ன, நேயர்களே, இந்த சுவையான முட்டைகளை நீங்கள் வீட்டில் தயாரிக்கலாம். அல்லவா? சமைத்து ருசிப்பாருங்கள். கோடைகாலத்தில் தயாரிக்கப்பட்ட முட்டைகள் குளர் பெட்டியில் வைத்தப் பின் அதன் சுவை மேலும் அருமை. முயற்சியுங்கள்.
வாணி – இன்னும் ஒரு சிறிய குறிப்பு. முட்டைகளை வேகவைக்கும் போது, குளிர் தண்ணீர் தேவைப்படும். இப்படி செய்தால், வேகவைக்கும் போது, முட்டையின் தோல் எளிதாக உடைந்து போதாது.