• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-17 09:53:14    
கிரோவேஷிய பாராலிம்பிக் கமிட்டியின் தலைவரின் பேட்டி

cri
கிரோவேஷியா சுதந்திரமான நாடாக முதன்முறையாக கலந்து கொண்ட ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, 1992ம் ஆண்டு பார்சலோனா ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாகும். அந்த போட்டியின் மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் , கிரோவேஷியா வெண்கலப் பதக்கம் பெற்றது. கடந்த ஏதென்ஸ் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், கிரோவேஷியாவைச் சேர்ந்த 17 விளையாட்டு வீரர்கள் 5

விளையாட்டுக்களில் கலந்து கொண்டனர். தட கள விளையாட்டுக்கள் மற்றும் நீச்சல் விளையாட்டுகளில் அவர்கள் 4 பதக்கங்களை பெற்றனர். பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், கிரோவேஷியப் பிரதிநிதிக் குழுவின் 25 விளையாட்டு வீரர்கள் 6 விளையாட்டுகளில் பங்கெடுக்கின்றனர். இப்போட்டியில், கிரோவேஷியாவின் இலக்கு என்ன? கிரோவேஷியாவில் ஊனமுற்றோர் விளையாட்டின் வளர்ச்சி நிலைமை எப்படி இருக்கிறது? இவை குறித்து, கிரோவேஷிய பாராலிம்பிக் கமிட்டியின் தலைவர் ராட்கோ கோவாசிச் அண்மையில் எமது செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். இப்பிரதிநிதிக் குழு, கிரோவேஷியா அனுப்பிய மிக வலுவான போட்டி ஆற்றல் கொண்ட அணியாகும் என்று அவர் கூறினார். இப்போட்டிக்கான தமது இலக்கு, ஏதென்ஸ் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பெற்றதை குறைந்தபட்சம் சமன் செய்வதாகும் என்று ராட்கோ கோவாசிச் விருப்பம் தெரிவித்தார்.

உண்மையில்,கிரோவேஷியாவில் பல தலைசிறந்த ஊனமுற்றோர் விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.பெய்சிங் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையும், அவர்கள் பங்கெடுக்கும் விளையாட்டுகளின் எண்ணிக்கையும் கிரோவேஷிய வரலாற்றில் மிக அதிகமாகும். அதே வேளையில், இது வரை மிக வலுவான ஆற்றலைக் கொண்ட பிரதிநிதிக்குழு தற்போதைய குழுவாகும். தற்போது, ஏதென்ஸ் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டியில் 4 வெண்கல பதக்கங்களைப் பெற்றமை, கிரோவேஷிய வரலாற்றில் மிகச் சிறந்த சாதனையாகவுள்ளது. நடப்புப் போட்டியில் பங்கேற்று இப்போட்டியில் பெறும் பதக்கங்கள், கடந்த விளையாட்டுப் போட்டியில் பெற்ற பதக்கங்களை குறைந்தபட்சம் சமன் செய்வது மெகு இலக்காகும் என்று அவர் கூறினார்.

ராட்கோ கோவாசிச் ஒரு தலைசிறந்த விளையாட்டு வீரராக இருந்தார். அவர் கிரோவேஷிய பிரதிநிதிக் குழுவின் சார்பில் 2000ம் ஆண்டு சிட்னி மற்றும் 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டார். தற்போது, அவர் ஓய்வு நேரம் இருந்தால், மேசைப் பந்து விளையாடுகிறார். சொந்த அனுபவங்கள் மூலம், விளையாட்டுகள் உடலளவில் சவால் விடுக்கப்பட்ட தன் போன்றவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கோவாசிச் புரிந்துக கொண்டார். ஊனமுற்றோருக்கு, விளையாட்டுக்கள் உடற்பயிற்சியாகவும், இயல்பாக செயல்படுவதற்கான பயிற்சாகவும் அமைகின்றன. இது மட்டுமல்ல, விளையாட்டுக்கள் அவர்களுக்கு மேலும் உயர் நிலை வாழ்க்கை மற்றும் மனவுறுதியை ஏற்படுத்தும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.