• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-17 19:23:59    
என்றுமே நிலவும் அன்பு

cri

உலக மக்களின் கவனத்தை மிகவும் ஈர்த்த பெய்ஜிங் 2008 பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி 17ம் நாளிரவு நிறைவடைகிறது. இன்று மதியம் சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் அரசு விருந்தினர் மாளிகையில் பிரமாண்டமான விருந்து அளித்தார். சீன அரசு மற்றும் மக்களின் சார்பில் சர்வதேச பாராலிம்க் கமிட்டியின் தலைவர் பிஃலிப் க்ரேவன் உள்ளிட்ட 30 மதிப்புக்குரிய விருந்தினர்களுக்கு அவர் வரவேற்பு தெரிவித்தார். பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஊன்றிநின்ற "விஞ்சுதல், ஒருமைப்பாடு, கூடி பகிர்தல்"என்ற கருத்து உலக மாற்று திறனுடையோர் இலட்சியத்திற்கு அற்புதமான எழுச்சி செல்வத்தை விட்டு சென்றுள்ளது என்று ஹுச்சிந்தாவ் தெரிவித்தார். சீன அரசு மற்றும் மக்கள் முன்னெப்போதும் போல மனிதநேய எழுச்சியை வெளிக்கொணர்ந்து உலக மாற்று திறனுடையோர் விளையாட்டு துறையையும் அவர்களின் இலட்சியத்தையும் முன்னேற்றுவர் என்று அவர் தெரிவித்தார்.

இன்றிரவு பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி நிறைவடையும். அதன் நிறைவு விழாவில் கலந்து கொள்கின்ற தாங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வரவேற்பு தெரிவிக்கின்றேன். பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பங்கு ஆற்றிய நண்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி தெரிவிக்கின்றேன். போட்டிகளில் சாதனை பெற்ற பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களின் மாற்று திறனுடைய விளையாட்டு வீரர்களுக்கு இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றேன் என்றார் ஹுச்சிந்தாவ். "விஞ்சுதல், ஒருமைப்பாடு, கூடி பகிர்தல்"என்ற கருத்து கொண்ட பெய்ஜிங் பாராலிம்பிக் விளைட்டுப் போட்டி செப்டம்பர் திங்கள் 6ம் நாள் துவங்கியது. 147 நாடுகள் மற்றும் பிரதேசங்களை சேர்ந்த 4000க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் 472 போட்டிகளில் பங்கு எடுத்தனர். இந்த அசாதாரணமான பாராலிம்பிக் வரலாற்றை நினைவு கூறும் போது ஹுச்சிந்தாவ் கூறியதாவது.

 

கடந்த 12 நாட்களில் பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களின் மாற்று திறனுடைய விளையாட்டு வீரர்கள் உற்சாகத்துடன் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பல்வேறு நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர். அவர்கள் காட்டிய தங்கள் தொடர் போராட்டம், தன்னம்பிக்கையுடனான முன்னேற்றம் என்ற எழுச்சி பிரமாண்டமான உயிராற்றலை இசைத்தது. சீன மக்கள் உலகின் பல்வேறு நாடுகளின் மக்களுடன் பெய்ஜிங் பாராலிம்பிக் கொண்ட வெற்றியையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஊன்றி நின்றுள்ள"விஞ்சுதல், ஒருமைப்பாடு, கூடி பகிர்தல்"என்ற கருத்து பல்வேறு நாட்டு மக்களின் அருமையான ஆர்வத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளது. உலக மாற்று திறனுடையோர் இலட்சியத்திற்கு மதிப்புக்குரிய எழுச்சி செல்வத்தை விட்டு சென்றுள்ளது என்று அவர் கூறினார். விருந்தில் கலந்து கொள்வதற்கு முன் சர்வதேச பாராலிம்பிக் கமிட்டித் தலைவர் பிஃலிப் க்ரேவன் செய்தியாளர் கூட்டம் நடத்தினார். பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மிகவும் வெற்றிகரமானது என்று பாராட்டினார். நடப்பு பாராலிம்பிகின் வெற்றியையும் சீன அரசு மாற்று திறனுடையோர் இலட்சியத்தின் வளர்ச்சியை முன்னேற்றும் வகையில் அர்பணித்த முயற்சியையும் அவர் உயர்வாக மதிப்பிட்டார். இது பற்றி அவர் கூறியதாவது.

பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி மக்கள் தம் வாழ்க்கையில் மாற்று திறனுடையோருக்கு பங்காற்றிய சிறந்த முதலாவது போட்டியாக திகழ்கின்றது. அதன் உயர்வான போட்டி நுட்பம், மகத்தான விளையாட்டு எழுச்சி, சிறந்த கல்வியறிவு, சீன மக்கள் அனைவரையும் இதில் பங்கெடுக்கச் செய்தது போன்ற அனுபவங்கள் மக்கள் அனைவரும் பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட போது உணரப்பட்டன. மாற்று திறனுடையோர் இலட்சியத்தில் சீனா மேற்கொண்ட முயற்சிகள் அனைத்திற்கு நான் வாழ்த்து தெரிவிக்கின்றேன். பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பின் இந்த முயற்சிகள் மேலும் விரைவாக வளரும் என்று நான் நம்புகின்றேன் என்றார் க்ரேவன். சீனாவில் 8 கோடிக்கும் அதிகமான மாற்று திறனுடையோர் வாழ்கின்றனர். பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீனாவுக்கு விட்டுச் செல்லும் எழுச்சி மிக்க செல்வம் மேலும் முக்கியமானது. அதன் செல்வாக்கும் மேலும் ஆழமானது. சீன அரசும் மக்களும் பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வாய்பாக பயன்படுத்தி பன்னாட்டு அரசுகள் மற்றும் மக்களுடன் இணைந்து உலகின் மாற்று திறனுடையோர் இலட்சியத்தையும் கூட்டாக விரைவுப்படுத்த பாடுபடுவோம் என்று ஹுச்சிந்தாவ் தெரிவித்துள்ளார்.