• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-18 09:40:35    
பல வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களின் பாராட்டு

cri

பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் வெளிநாட்டுச் செய்தி ஊடகங்கள் வெகுவாக கவனம் செலுத்தியுள்ளன. சிறந்த கலை நிகழ்ச்சிகளுடன் இப்போட்டி, வெற்றிகரமாக முடிவடைந்தது.

அமெரிக்க NBC தொலைக்காட்சி நிறுவனத்தின் இணைய தளங்கள், இப்போட்டியின் நிறைவு விழாவை நேரடி ஒளிபரப்பு செய்தன. இதற்கு பிறகு, சிறந்த பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை தவிர, வரலாற்றில் இது, மிகச் சிறந்த பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியாகும் என்று NBCஇன் விமர்சகர்கள் கூறினர்.

BBC நிறுவனத்தின் இரு நிலையங்களும், இப்போட்டியின் நிறைவு விழாவை நேரடி ஒளிபரப்பு செய்தன. அருமையான கலை நிகழ்ச்சிகள், நீண்டகாலம் ரசிகர்களின் மனங்களி்ல் பதிந்திருக்கும் என்று அந்த நிலையத்தின் விமர்சகர்கள் கூறினர்.

அப்போட்டியின் நிறைவு விழாவின் கலை நிகழ்ச்சி, சிறப்பாக இருந்தது என்று ஜப்பானிய kyodo செய்தி நிறுவனம் கூறியுள்ளது.சிங்கப்பூர், இத்தாலி, ஸ்பெயின் முதலிய நாட்டு செய்தி ஊடகங்கள், இப்போட்டியின் நிறைவு விழாவை நேரடி ஒளிபரப்பு செய்து, வெகுவாக பாராட்டியுள்ளன.