
பிரபல காட்சித் தலமான சான்சான் மலையின் அடிவாரத்தில் பளிங்கு நீரைக் கொண்ட ழஹய் ஏரி அமைந்துள்ளது. இவ்வேரியின் காரணமாக, da liயில் தூய்மையான ஈரமான காற்று வீசுகின்றது. ழஹய் ஏரியும் சான்சான் மலையும் எழில் மிக்க da li காட்சியை உருவாக்கியுள்ளன.
 ழஹய் ஏரி பீடபூமியிலான முத்து என்றும் அழைக்கப்படுகின்றது. அது, யுன்னான் மாநிலத்தின் நீர்ப்பரப்பளவில் 2வது இடம் வகிக்கும் நன்னீர் ஏரியாகும். யுன்னான் மாநிலம், கடலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளது. அங்குள்ள மக்கள் கடலை மிகவும் விரும்புகின்றனர். இதனால், பல ஏரிகளுக்குக் கடல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ழஹய் ஏரி, பீடபூமியில் அமைந்துள்ள ஏரி என்றாலும், அதன் பரப்பளவு 240 சதுர கிலோமீட்டராகும். மலைகள் சூழ்ந்துள்ள இப்பீடபூமியில் பரந்துபட்ட கடல் போல் அது காணப்படுகின்றது.

|