• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-18 09:39:29    
798 கலை மண்டலம்

cri

798 கலை மண்டலத்தில் அமைந்துள்ள மற்றொரு தனிச்சிறப்பான கலை அகத்தை அறிமுகப்படுத்துகின்றோம். அதன் பெயர், சென்ட் கலை அகமாகும். இதில், வேறுபட்ட பாணியுடைய ஓவியக் கண்காட்சியைப் பார்த்து, இங்குள்ள பல்வேறு வெளியீடுகளின் மூலம், சீன நவீன கலையின் வளர்ச்சி வரலாறு, நவீன கலைஞர்கள், கலைப்படைப்புகள், கலை விமர்சனங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளலாம். இக் கலை அகத்தின் பொறுப்பாளர் GENG QING HUA அம்மையார் கூறியதாவது:

நுண்கலை காட்சியகத்தின் நிலைக்கு நெருங்கிய தரமிக்க கண்காட்சிகளை நடத்துவதுடன், பொது மக்களுக்கு சேவை புரிய வேண்டும். கலை அம்சங்கள் கொண்ட சொற்பொழிவு, நடமாடும் நூலகம் முதலியவை, நாங்கள் செய்ய வேண்டிய நிகழ்ச்சிகளாகும். தவிர, நூல் வெளியீட்டைப் பயன்படுத்தி, நவீன கலையை, புத்தக வெளியீடாக வழங்கி, கலைஞர்களுக்கு மேலும் நல்ல சேவையை வழங்கலாம் என்றார் அவர். 798 கலை மண்டலத்திலுள்ள ஒரு கலை அகம், 2008 மானிட மைய ஒலிம்பிக் என்ற தலைப்பில் கண்காட்சியை நடத்தியுள்ளது. இதில், பல்வேறு படைப்புகளின் மூலம், மானிட மைய ஒலிம்பிக் எழுச்சி வெளிக்கொணரப்பட்டு, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான கலைஞர்களின் எதிர்ப்பார்ப்பும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இக்கலை இடத்தின் பெயர், art key 798 காட்சி மையமாகும். அதன் பொறுப்பாளர் ஹுவாங் மிங்ஹோங் கூறியதாவது:
கடந்த மே திங்கள் முதல், இக்கண்காட்சி நடைபெற துவங்கியது. சீனாவின் பல்வேறு நுண்கலை கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட இளைய கலைஞர்கள், ஒலிம்பிக்கை தலைப்பாக கொண்டு இயற்றிய படைப்புகளைச் சேகரித்துள்ளோம். ஆயிரக்கணக்கான கலைப் படைப்புகளிலிருந்து, சுமார் 400ஐத்

தேர்ந்தெடுத்துள்ளோம். இடப்பரப்பளவு குறைவாக உள்ளதால், 174 கலைப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தற்போது, இளைய கலைஞர்களின் படைப்புகள் முக்கியமாக இடம்பெறுகின்றன என்றார் அவர்.
இந்த கலை அகத்தில், சிறிய ரக சீன பாரம்பரிய தேனீரகம் உள்ளது. பயணிகள், கலைப் படைப்புகளைக் கண்களித்து ரசிக்கும் போது, சீனாவின் தேனீர் பண்பாட்டை உணர்ந்துகொள்ளலாம். ஹுங் மிங் ஹோங் கூறியதாவது:
இந்தத் தேனீர், மிகவும் சிறப்பானது. வெளிநாட்டுப் பயணிகளால் மிகவும்

விரும்பப்படுகிறது. கிழக்கு அழகு என்ற உள்பொருளைப் பயன்படுத்தி, இந்தத் தேனீரின் சின்னத்தை பிரச்சாரம் செய்கின்றோம். நுகர்வோர், ஓவியங்களைக் கண்களிக்கின்ற போது ஓய்வாக உட்கார்ந்து தேனீர் குடித்து சுவைக்கலாம். பலர் இதை விரும்புகின்றனர் என்றார் அவர்.
நேயர்களே, பெய்ஜிங் மாநகரத்திற்கு வரும் வாய்ப்பு இருந்தால், பெய்ஜிங்கின் 798 கலை மண்டலத்தைச் சென்று பார்க்க தவற வேண்டாம்.