• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-19 20:54:02    
தென் கொரிய ஊனமுற்றோர் ஒலிம்பிக் பிரதிநிதிக் குழு

cri
1968ம் ஆண்டு Tel Aviv ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, தென் கொரிய ஊனமுற்றோர் ஒலிம்பிக் பிரதிநிதிக் குழு முதல் முறையாகக் கலந்து கொண்ட ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாகும். 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, அவர்களது 11வது ஒலிம்பிக் பயணமாகும். அண்மையில், தென் கொரிய ஊனமுற்றோர் ஒலிம்பிக் பிரதிநிதிக் குழுவின் தலைவர் kim sung il, எமது செய்தியாளருக்குச் சிறப்புப் பேட்டியளித்தார்.

இது, நான் பெய்ஜிங்குக்கு வருகின்ற 4வது முறையாகும். பெய்ஜிங்கின் காற்று, முன்பு இருந்ததை விட, சிறந்ததாக மாறியுள்ளது. தற்போது, போக்குவரத்து மிகவும் வசதியாக இருக்கிறது. பல்வேறு கடைகளின் பெயர் அட்டைகள் தூய்மையாக இருக்கின்றன. பெய்ஜிங், ஒரு அழகான நவீன மாநகரமாக முற்றிலும் மாறியுள்ளது என்றார் அவர்.

செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது, அவர், கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுள்ள பெய்ஜிங்கின் மாற்றங்களை வெகுவாகப் பாராட்டினார்.

1968 முதல் 2008ம் ஆண்டு வரை, தென் கொரியப் பிரதிநிதிக் குழு, ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வது, 40 ஆண்டுகளாகியுள்ளன. 1988ம் ஆண்டு சியோல் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், தென் கொரியப் பிரதிநிதிக் குழு, 40 தங்கப் பதக்கங்களைப் பெற்று, 7வது இடம் வகித்தது. இதுவே, அவர்களது தலைசிறந்த சாதனையாகும். பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலான குறிக்கோள் பற்றி குறிப்பிட்ட போது, தலைவர் kim sung il கூறியதாவது,

13 தங்கப் பதக்கங்களைப் பெற்று, பதக்க வரிசையில் 14வது இடம் வகிப்பது, எமது குறிக்கோளாகும். என்றாலும், நாங்கள் வேறு சில போட்டிகளில் ஆற்றலைக் கொண்டுள்ளோம். அதனால், மேலும் சிறந்த சாதனைகளைப் பெற முடியும் என்றார் அவர்.

தென் கொரிய ஊனமுற்றோர் விளையாட்டு வளர்ச்சியைப் பொறுத்த வரை, 2008ம் ஆண்டு, மைல் கல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்தது. முதலில், இவ்வாண்டு, தென் கொரிய ஊனமுற்றோர் குழு அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, தென் கொரிய ஊனமுற்றோர் குழு நிறுவப்பட்ட பின், முதல் முறையாகக் கலந்து கொள்ளும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியாகும். இரண்டாவதாக, இதற்கு முன், தென் கொரிய ஊனமுற்றோர் விளையாட்டுச் சங்கம், தென் கொரிய உடல் நலத் துறையைச் சேர்ந்திருந்தது. இவ்வாண்டு தான், அது, தென் கொரியப் பண்பாட்டு மற்றும் விளையாட்டுத் துறையை அதிகாரப்பூர்வமாகச் சேர்ந்தது. அது முதல், அது, தென் கொரிய விளையாட்டுச் சங்கத்தைப் போன்ற அணுகு முறையைப் பெற்றுள்ளது என்று தலைவர் kim sung il கூறினார்.

ஊனமுற்ற நண்பர்களின் விளையாட்டை பொறுத்த வரை, விளையாட்டு நோக்கம், வாழ்க்கையிலான இன்னலைச் சமாளிப்பது மட்டுமல்ல, வாழ்க்கையை அவர்கள் அனுபவிக்கும் நிலைக்கும் அது உயர்த்தியுள்ளது. தென் கொரிய ஊனமுற்றோர் விளையாட்டுச் சங்கம், தென் கொரிய விளையாட்டுச் சங்கத்துடன் பண்பாட்டு மற்றும் விளையாட்டுத் துறையோடு இணைந்திருப்பது, தென் கொரிய ஊனமுற்றோர் விளையாட்டு இலட்சியத்தின் வளர்ச்சிக்கு மேலதிகத் துணை புரியும். இம்முறை, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஊக்கக் கொள்கையைப் போன்ற கொள்கையை நாங்களும் வகுத்துள்ளோம். அவர்களும் ஒரே ஊக்கத் தொகையை தான் பெறுவர். தங்கப் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு, 40 ஆயிரம் அமெரிக்க டாலரும் வெள்ளிப் பதக்கம் பெறுவோருக்கு, 20 ஆயிரம் அமெரிக்க டாலரும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றார் அவர்.

அடுத்த ஆண்டு, தென் கொரிய ஊனமுற்றோர் விளையாட்டு இலட்சியம், தரத்தில் முன்னேற்றப் பாய்ச்சலை பெறும் என்றும் அவர் அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது,

இது வரை, தென் கொரியாவில் ஊனமுற்றோர் விளையாட்டு வீரர்களுக்கு திட்டமிடப்பட்ட ஒட்டுமொத்த விளையாட்டு வசதிகள் இல்லை. அதனால், இந்த விளையாட்டு வீரர்கள் தென் கொரியாவின் பல்வேறு இடங்களில் பயற்சிகள் மேற்கொள்கின்றனர். ஆனால், அடுத்த ஆண்டு செப்டம்பர் திங்களுக்குள், நாங்கள் kyung gi doவில் சிறப்பு ஊனமுற்றோர் விளையாட்டு மையத்தைக் கட்டியமைப்போம். அப்போது, இந்த விளையாட்டு வீரர்கள் அனைவரும் ஒன்றுகூடி, முறையாக பயிற்சி மேற்கொள்ளலாம். இது, தென் கொரிய ஊனமுற்றோர் விளையாட்டு இலட்சியத்தின் வளர்ச்சியை மேலும் முன்னேற்றுவதற்கு, முக்கியமான பங்காற்றும் என்றார் அவர்.

சீனாவில் ஊனமுற்றோர் இலட்சியத்தின் வளர்ச்சியை, அவர் வெகுவாகப் பாராட்டினார். அவர் கூறியதாவது,

பெய்ஜிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மூலம், சீனாவின் பெரும் உள்ளார்ந்த ஆற்றலை நான் மீண்டும் உணர்ந்து கொண்டேன். சீனா, ஊனமுற்றோருக்கு வழங்கிய கவனிப்பு மற்றும் முழுமையான வசதிகள், எனது மனதில் ஆழமாக பதிந்துள்ளன. இந்த ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான பல்வேறு பணிகள் எனக்கு மனநிறைவு தந்தன. சீனாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார் அவர்.