பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தலைப்புப் பாடலான, கனவுடன் பறப்பது என்ற பாடலைக் கேட்டு ரசியுங்கள். செப்டம்பர் ஆறாம் நாளிரவு, துவக்க விழாவில், சீன ஹாங்காங்கின் பாடகர் Andy Lau, பெருநிலப்பகுதியின் பாடகி Hanhong இருவர் இப்பாடலைப் பாடினர். இனிமையான அவர்களது குரல், ரசிகர்களுக்கு, ரம்மியமான அன்பான உணர்ச்சியை ஏறபடுத்தியது. அன்றிரவு, பெய்ஜிங்கின் வானம் வண்ண வானவேடிக்கைகளால் ஒளியூட்டப்பட்டது. பெய்ஜிங் மாநகர் இரவில்லாத மகிழ்ச்சியான நகராகியது.
நட்சத்திர வானத்தைத் தொலைவிலிருந்து பார்த்து
எனக்குக் காத்திருங்கள் என்று நட்சத்திரங்களுக்கு சொல்கின்றேன்
ஒளிமயமான உங்களது கண்களில் முத்தமிட விரும்புகின்றேன்
உங்களுடன் பறக்க விரும்புகின்றேன
நிலவின் அருகில் பறந்து செல்வோம்
அனைவரின் உள்ளங்களுக்கு ஒளியை அனுப்புவோம்
கனவுடன் பறப்போம்.
விடியற்காலையின் வானத்திரையைத் திறத்து
தலை காட்டும் வானைப் பார்த்து
எனக்குக் காத்திருங்கள் என்று மேகங்களுக்கு சொல்கின்றேன
வெண்மையான உங்களது உடம்பை முத்தமிட விரும்புகின்றேன்
உங்களுடன் பறக்க விரும்புகின்றேன்
சூரியனின் ஒளியை ஊடுருவிச் செல்கின்றோம்
அனைவரும் நெஞ்சையும் சூடாக்குவோம்
கனவுடன் பறப்போம் என்று இப்பாடல் ஒலிக்கிறது.
இப்பாடல், உண்மையான உணர்ச்சி மூலம், மிஞ்சுவது, ஒன்றிணைப்பது, பகிர்ந்துகொள்வது என்ற 2008 பெய்ஜிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் எழுச்சியை வெளிப்படுத்துகின்றது.
|