2004ஆம் ஆண்டு, Ao Xing Qinவின் கேட்கும் திறன் மிகவும் மோசமாகி விட்டது. 2006ஆம் ஆண்டு செப்டம்பரில், அவர் Rong Chang மாவட்டத்தின் சிறப்பு கல்வி பள்ளியில் ஆசிரியராக வேலை செய்யத் துவங்கினார். அவர் இப்பள்ளியில், கூட Chong Qing மாநகரில் பணி புரியும் ஒரே ஒரு காது கேளாத ஆசிரியராக திகழ்கின்றார். இப்பள்ளியில் செய்தியாளர் Ao Xing Qinஐச் சந்தித்தார். மற்றவர்களுடன் உரையாடுகின்ற போது, மற்றவர்களின் உதட்டுகளின் அசைவை அவர் உன்னிப்பாக கவனிக்கின்றார். ஒருவர் பேசியவுடன், Ao Xing Qin உடனடியாக அவருடன் உரையாட முடிகிறது. எனவே இந்த இளம் பெண், காது கேட்கும் திறன் அற்றவர் என்று மக்கள் கற்பனை கூட செய்ய முடியாது. Ao Xing Qin கூறியதாவது: "இதர ஆசிரியர்களிலிருந்து வேறுபட்ட மனப்பான்மையுடன் இப்பள்ளிக்கு வந்தேன். மனதில் ஏதோ ஒருவகை உணர்வு ஏற்பட்டது. முதலில், இப்பள்ளியின் சூழலுக்குப் பொருத்தமற்றவளாக இருந்தேன். தவிர, எனது கற்பனையில் இருந்ததை விட, ஊனமுற்ற குழந்தைகளின் மதிப்பெண் மேலும் குறைவாக இருந்தது. அவர்களின் நிலைமை மேலும் மோசமாக இருந்தது. அதனால், மனவருத்தம் அடைந்தேன். கவலைபட்டேன். அவர்களுக்கு எவ்வாறு உதவி செய்யலாம் என்று எண்ண தொடங்கினேன்" என்றார், அவர். காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுடன் தொடர்பு கொள்ளும் வகையில், Ao Xing Qin விரைவில் சைகை மொழியை புரிந்து, கிரகித்துக் கொண்டார். அதற்கு பின், உளமார்ந்த அன்புடன், அவர் அக்குழந்தைகளுடன் நெருக்கமாக பழகி வருகின்றார். குழந்தைகள் பலர், கேட்கும் திறனை முழுமையாக இழக்கவில்லை என்று Ao Xing Qin கூறினார். இனிமேல், இந்த குழந்தைகள் அவர்களுக்கே உரித்தான ஒலியில்லாத அமைதியான உலகில் வாழவிட அவர் விரும்பவில்லை. மற்றவர்கள் பேசுவதை இயன்றளவு கேட்டு, உதட்டைப் பார்த்து, உன்னிப்பாக கேட்டு வாய் மொழியில் பேசுமாறு மாணவர்களுக்கு அவர் ஊக்கமளிக்கின்றார். ஒலியில்லாத அமைதியான உலகில் வாழ்கின்ற இக்குழந்தைகள் இன்னும், எதிர்கால வாழ்க்கை மீது அருமையான எதிர்பார்ப்பு கொள்கின்றனர். Ao Xing Qin மற்றும் அவரது சக பணியாளர்களின் ஊக்கத்துடன், பல மாணவர்கள் நுண் கலையை நேசிக்கின்றனர். எழில் மிக்க படங்களை அவர்களால் வரைய முடிகிறது. Ao Xing Qin கூறியதாவது: "அவர்கள் கேட்கும் திறனை இழந்த போதிலும், அவர்களின் கண்பார்வை மிகவும் நல்லது. அழகு பற்றிய அவர்களின் உணர்வு மிக வலுவானது" என்றார், அவர். Luo Xiu Hua என்னும் மாணவர் சைகை மொழி மூலம் செய்தியாளரிடம் கூறியதாவது: "கூடைப்பந்தாட்டம் மற்றும் நுண்கலையை மிகவும் நேசிக்கின்றேன். இனி, இவ்விரு துறைகளில் மேலதிக வளர்ச்சி வாய்ப்பு பெற வேண்டுமென விரும்புகின்றேன்" என்றார், அவர்.
குழந்தைகளின் ஆர்வம், வளர்ச்சி குறிக்கோள் ஆகியவற்றுக்கு Ao Xing Qin ஆதரவு அளிக்கின்றார். காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் சமூக நடவடிக்கைகளில் மேலும் பங்கெடுத்து, வாழ்க்கை அனுபவத்தை அதிகரித்து, வண்ணமயமான உலகத்தை அனுபவிக்க தொடங்கிவிட்டால், அவர்களின் வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்று Ao Xing Qin கூறினார். மற்றவர்களின் புரிந்துணர்வைப் பெற்று, மற்றவர்களுடன் பரிமாற்றம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். ஏனெனில், அவர்களுடன் உரையாடக் கூடியவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. மேலதிக அறிவுகளை கற்றுக்கொண்டு, மற்றவரைச் சார்ந்திராமல் தனித்துச் செயல்பட வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர் என்று Ao Xing Qin அம்மையார் கூறினார். இவ்வாண்டின் துவக்கத்தில், Chong Qing மாநகரவாசிகளால், "2007ஆம் ஆண்டு Chong Qing நகரவாசிகளை மனமுருகச்செய்த பத்து பேரில் ஒருவர்" என அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்மையில், Chong Qing மாநகர காது கேளாதவர் சங்கத்தின் துணைத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊனமுற்றோருக்கு சேவை புரியும் பாதையில் தொடர்ந்து முன்னேறுவது என்பது, தமது மிக பெரிய விருப்பம் என்று Ao Xing Qin அம்மையார் கூறினார். அவர் கூறியதாவது: "எனது மனம், குழந்தைகளின் மனதுடன் இயல்பிலேயே இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் என் மீது பெரும் நம்பிக்கை கொள்கின்றனர். இதர ஆசிரியர்களை விட, நான் குழந்தைகளின் ஆசையை மேலும் நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்பது இதற்கு காரணமாகும்" என்றார், அவர். Ao Xing Qin அம்மையார் 2004ஆம் ஆண்டு, Ao Xing Qinவின் கேட்கும் திறன் மிகவும் மோசமாகி விட்டது. 2006ஆம் ஆண்டு செப்டம்பரில், அவர் Rong Chang மாவட்டத்தின் சிறப்பு கல்வி பள்ளியில் ஆசிரியராக வேலை செய்யத் துவங்கினார். அவர் இப்பள்ளியில், கூட Chong Qing மாநகரில் பணி புரியும் ஒரே ஒரு காது கேளாத ஆசிரியராக திகழ்கின்றார். இப்பள்ளியில் செய்தியாளர் Ao Xing Qinஐச் சந்தித்தார். மற்றவர்களுடன் உரையாடுகின்ற போது, மற்றவர்களின் உதட்டுகளின் அசைவை அவர் உன்னிப்பாக கவனிக்கின்றார். ஒருவர் பேசியவுடன், Ao Xing Qin உடனடியாக அவருடன் உரையாட முடிகிறது. எனவே இந்த இளம் பெண், காது கேட்கும் திறன் அற்றவர் என்று மக்கள் கற்பனை கூட செய்ய முடியாது. Ao Xing Qin கூறியதாவது:
"இதர ஆசிரியர்களிலிருந்து வேறுபட்ட மனப்பான்மையுடன் இப்பள்ளிக்கு வந்தேன். மனதில் ஏதோ ஒருவகை உணர்வு ஏற்பட்டது. முதலில், இப்பள்ளியின் சூழலுக்குப் பொருத்தமற்றவளாக இருந்தேன். தவிர, எனது கற்பனையில் இருந்ததை விட, ஊனமுற்ற குழந்தைகளின் மதிப்பெண் மேலும் குறைவாக இருந்தது. அவர்களின் நிலைமை மேலும் மோசமாக இருந்தது. அதனால், மனவருத்தம் அடைந்தேன். கவலைபட்டேன். அவர்களுக்கு எவ்வாறு உதவி செய்யலாம் என்று எண்ண தொடங்கினேன்" என்றார், அவர். காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுடன் தொடர்பு கொள்ளும் வகையில், Ao Xing Qin விரைவில் சைகை மொழியை புரிந்து, கிரகித்துக் கொண்டார். அதற்கு பின், உளமார்ந்த அன்புடன், அவர் அக்குழந்தைகளுடன் நெருக்கமாக பழகி வருகின்றார். குழந்தைகள் பலர், கேட்கும் திறனை முழுமையாக இழக்கவில்லை என்று Ao Xing Qin கூறினார். இனிமேல், இந்த குழந்தைகள் அவர்களுக்கே உரித்தான ஒலியில்லாத அமைதியான உலகில் வாழவிட அவர் விரும்பவில்லை. மற்றவர்கள் பேசுவதை இயன்றளவு கேட்டு, உதட்டைப் பார்த்து, உன்னிப்பாக கேட்டு வாய் மொழியில் பேசுமாறு மாணவர்களுக்கு அவர் ஊக்கமளிக்கின்றார். ஒலியில்லாத அமைதியான உலகில் வாழ்கின்ற இக்குழந்தைகள் இன்னும், எதிர்கால வாழ்க்கை மீது அருமையான எதிர்பார்ப்பு கொள்கின்றனர். Ao Xing Qin மற்றும் அவரது சக பணியாளர்களின் ஊக்கத்துடன், பல மாணவர்கள் நுண் கலையை நேசிக்கின்றனர். எழில் மிக்க படங்களை அவர்களால் வரைய முடிகிறது. Ao Xing Qin கூறியதாவது: "அவர்கள் கேட்கும் திறனை இழந்த போதிலும், அவர்களின் கண்பார்வை மிகவும் நல்லது. அழகு பற்றிய அவர்களின் உணர்வு மிக வலுவானது" என்றார், அவர். Luo Xiu Hua என்னும் மாணவர் சைகை மொழி மூலம் செய்தியாளரிடம் கூறியதாவது: "கூடைப்பந்தாட்டம் மற்றும் நுண்கலையை மிகவும் நேசிக்கின்றேன். இனி, இவ்விரு துறைகளில் மேலதிக வளர்ச்சி வாய்ப்பு பெற வேண்டுமென விரும்புகின்றேன்" என்றார், அவர்.
குழந்தைகளின் ஆர்வம், வளர்ச்சி குறிக்கோள் ஆகியவற்றுக்கு Ao Xing Qin ஆதரவு அளிக்கின்றார். காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் சமூக நடவடிக்கைகளில் மேலும் பங்கெடுத்து, வாழ்க்கை அனுபவத்தை அதிகரித்து, வண்ணமயமான உலகத்தை அனுபவிக்க தொடங்கிவிட்டால், அவர்களின் வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்று Ao Xing Qin கூறினார். மற்றவர்களின் புரிந்துணர்வைப் பெற்று, மற்றவர்களுடன் பரிமாற்றம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். ஏனெனில், அவர்களுடன் உரையாடக் கூடியவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. மேலதிக அறிவுகளை கற்றுக்கொண்டு, மற்றவரைச் சார்ந்திராமல் தனித்துச் செயல்பட வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர் என்று Ao Xing Qin அம்மையார் கூறினார். இவ்வாண்டின் துவக்கத்தில், Chong Qing மாநகரவாசிகளால், "2007ஆம் ஆண்டு Chong Qing நகரவாசிகளை மனமுருகச்செய்த பத்து பேரில் ஒருவர்" என அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்மையில், Chong Qing மாநகர காது கேளாதவர் சங்கத்தின் துணைத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஊனமுற்றோருக்கு சேவை புரியும் பாதையில் தொடர்ந்து முன்னேறுவது என்பது, தமது மிக பெரிய விருப்பம் என்று Ao Xing Qin அம்மையார் கூறினார். அவர் கூறியதாவது: "எனது மனம், குழந்தைகளின் மனதுடன் இயல்பிலேயே இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் என் மீது பெரும் நம்பிக்கை கொள்கின்றனர். இதர ஆசிரியர்களை விட, நான் குழந்தைகளின் ஆசையை மேலும் நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்பது இதற்கு காரணமாகும்" என்றார், அவர்.
|