• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-19 09:34:27    
கிரோவேஷிய பாராலிம்பிக் கமிட்டியின் தலைவரின் பேட்டி2

cri
எமது ஒவ்வொரு விளையாட்டு வீரரும், சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றார். எமது வாழ்க்கையிலான பல்வேறு இன்னல்களை நாங்கள் சமாளித்துள்ளோம். விளையாட்டுக்கள், இதற்கு பெரும் உதவியாக பங்காற்றியுள்ளன. விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட போது, வாழ்க்கையையும் சமூகத்தையும் எப்படி எதர்நோக்குவது, உறுதியான பண்பை வளர்த்துக்கொள்வது என்பனவற்றை ஊனமுற்றோர் கற்றுக்கொண்டதோடு, சமூகப் பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்கிறோம். ஏனென்றால், விளையாட்டு வீரர்கள் சிறந்த சாதனைப் பெற்ற போது, இதர வீரர்களும் பெருமையடைகின்றனர் என்று கோவாசிச் குறிப்பிட்டார்.

கிரோவேஷிய பாராலிம்பிக் கமிட்டியின் தலைவராக பதவியேற்ற பின், கிரோவேஷியா முழுவதிலும் ஊனமுற்றோர் விளையாட்டுகளைப் பரவல் செய்ய அவர் மேலதிக முயற்சிகளை மேற்கொண்டார். ஒரு நாட்டின் மக்கள் உடல்நலத்துடன் வளர்வதை முன்னேற்றும் வேளையில், ஊனமுற்றோர் விளையாட்டுக்களின் வளர்ச்சி, ஒரு நாட்டின் ஒட்டுமொத்த ஆற்றலைக் காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார். அவர் மற்றும் கிரோவேஷிய பாராலிம்பிக் கமிட்டியின் தூண்டுதலில், 2008ம் ஆண்டு கிரோவேஷியாவின் தலைநகரான சாக்ரெபில் முதன்முறையாக ஊனமுற்றோர் நாள் நிறுவப்பட்டது. ஊனமுற்றோர் மீதான முழுச் சமூகத்தின் கவனத்தை, இது வெளிப்படுத்துகிறது.
ஊனமுற்றோரைப் பொறுத்த வரை, மேலும் அதிகமாக விளையாட்டு பயிற்சி செய்வது, அவர்கள் உறுதியான பண்புகளை வளர்த்துக் கொள்ள உதவும். அவர்களுக்கு அதிக விளையாட்டுப் பயிற்சி வாய்ப்பை வழங்குவது என்பது, சமூக நீதி, நிதிச் செலவு முதலிய துறைகளில் நாடு வழங்கிய உதவியைக் காட்டுகிறது.

அத்துடன், ஊனமுற்றோர் தன் ஆற்றலை நம்பி வாழ்வதற்கு இவை நன்மை பயக்கும். ஏனென்றால், அவர்கள் உறுதியான பண்பைக் கொண்டால், மேலும் எளிதாக வேலை வாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்பைப் பெறலாம். அதே வேளையில், அவர்கள் சமூகத்தின் முன்னேற்றத்தைத் தூண்டவும் உதவுகின்றனர். விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளாத ஊனமுற்றோரைப் பொறுத்த வரை, அவற்றைச் செய்வது கொஞ்சம் கடினமே என்று கோவாசிச் கூறினார்.
உடலில் குறைபாடு இருக்கின்ற காரணத்தால், விளையாட்டுப் பயிற்சி செய்யும் போது பொது மக்களை விட ஊனமுற்றோர் அதிக இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். ஆனால், பல விளையாட்டு வீரர்கள் தங்களது கனவில் ஊன்றி நிற்க பாடுபடுகின்றனர். எத்தகைய சாதனை பெறுகிறோம் என்பது, மிக முக்கியமல்ல. பங்கெடுப்பதே மிக முக்கியமானது என்ற எழுச்சி, அவர்கள் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் அனுபவம் ஆகியவை, மிக முக்கிய விடயங்களாகும் என்று கோவாசிச் தெரிவித்தார்.

விளையாட்டுப் போட்டியில் ஈடுபடும் உடல் அளவில் சவால் விடுக்கப்பட்ட வீரர்களைப் பொறுத்த வரை, அவர்கள் எதிர்நோக்கிய இன்னல்கள், மற்ற இயல்பான உடல் கொண்ட விளையாட்டு வீரர்களோடு ஒப்பிடுகையில் மிக அதிகமாகும். எனவே, அதற்காக அவர்கள் தங்களால் இயன்றதை நிச்சயம் செய்ய வேண்டும். இத்தகையப் பணியைப் பரவல் செய்ய, பாராலிம்பிக் கமிட்டி, இயன்ற அனைத்தையும் செய்துள்ளது. அதற்கு பின், நாம் பெரும் வெற்றியையும் சிறந்த சாதனையையும் பெற்றோம். ஆனால், அவை மிக முக்கியமல்ல. ஊனற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட உச்சி போட்டிகளில் அவர்கள் கலந்து கொள்வது மிக முக்கியமானது. அவர்களுக்காக, சிறப்பாக நடத்தும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், அவர்கள் போட்டியிட வேண்டும். எமது பல விளையாட்டு வீரர்களைப் பொறுத்த வரை, இது அவர்களது வாழ்வில் ஒரு முக்கிய நேரமாகும். இப்போட்டியில் மிகச் சிறந்த சாதனையை பெறுவது, அவர்களது மிகப் பெரிய விருப்பமாகும் என்று கோவாசிச் கூறினார்.