கடந்த 10ஆண்டுகளில் சீன நடுவண் அரசும் திபெத் தன்னாட்சிப் பிரதேசமும் திபெத்தின் அடி மட்ட நிலை மீதான பண்பாட்டுக் கட்டுமானத்துக்கான ஒதுக்கீட்டை தொடர்ந்து அதிகரித்ததோடு, பண்பாட்டு வசதிகளின் கட்டுமானத்தை வலுப்படுத்தியுள்ளன.
அனைத்து கிராமங்களிலும் வானொலி மற்றும் தொலைக்காட்சி வசதிகளை வழங்கும் சீன அரசின் திட்டப்பணி, கிராமப்புறங்களில் திரைப்படங்களை காட்டும் திட்டப்பணி, கிராமப்புற நூலகக் கட்டுமான திட்டப்பணி முதலியவற்றின் மூலம், திபெத்தின் அடி மட்ட நிலையில் பண்பாட்டு கட்டுமானத்தின் விரைவான வளர்ச்சி தெளிவாக காணப்பட்டது. 2008ம் ஆண்டு வரை, திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் பல்வேறு வட்டங்களிலும் கிராமங்களிலுமுள்ள வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களின் எண்ணிக்கை 648ஆகும். ஆண்டுதோறும் 1.2லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்கள் திரைப்படங்களைக் கண்டுகளிக்கின்றனர். 90விழுக்காட்டு நிர்வாக கிராமங்களில் திங்கள்தோறும் திரைப்படங்கள் காட்டப்பட்டன.
|