• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-22 14:15:18    
பெய்ஜிங் சர்வதேச நூல் பொருட்காட்சி

cri

செப்டெம்பர் திங்கள் முதல் நாள் தொடக்கம் 4ம் நாள் வரை, 15வது பெய்ஜிங் சர்வதேச புத்தாகக் கண்காட்சி, சீனாவின் துறைமுக நகரான தியான் சின்னில் நடைபெற்றது. 1986ம் ஆண்டில் துவங்கிய இந்த கண்காட்சி, உலகின் நான்கு முன்னணி சர்வதேச புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றாகும். கடந்த 22 ஆண்டுகாலத்தில், சீன நூல் வெளியீட்டக தொழில் துறையின் சுய வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு வரலாற்றை இந்த கண்காட்சி வெளிப்படுத்தியுள்ளது.


இவ்வாண்டு செப்டெம்பர் திங்கள் துவக்கத்தின் போது, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டி பெய்ஜிங்கில் நடைபெற்றதால், 2008ம் பெய்ஜிங் சர்வதேச புத்தகக் கண்காட்சி, பெய்ஜிங் மாநகருக்கு அருகிலான தியான் சின் மாநகரில் நடைபெற்றது.
51 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 1300 வெளிநாட்டு வெளியீட்டகங்களும் சர்வதேச வெளியீட்டகத் தலைவர்களும் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டனர். பதிப்புரிமை வர்த்தக மற்றும் ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தைகள் இதில் இடம்பெற்றன.


சீன வெளியீட்டக குழுமத்தின் துணைத் தலைவர் lipengyi, பிரதிநிதிக் குழுவுடன் சேர்ந்து இப்பொருட்காட்சியில் பங்காற்றினார். இக்குழுமம், சீனாவின் பெரிய வெளியீட்டக நிறுவனங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும், இதன் 29 வெளியீட்டகங்கள், வெளிநாட்டிலுள்ள 23 புத்தகக் கடைகள் மற்றும் அலுவலகங்கள், ஆயிரக்கணக்கான வெளியீடுகளை செய்தன. உலகின் நூற்றுக்கு மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் அதன் பதிப்புரிமை வர்த்தக வலைப்பின்னல்கள் உள்ளன. 2006ம் ஆண்டு, இக்குழுமத்தின் சீன நூல் பணியகத்தால் வெளியிடப்பட்ட 'கன்ஃபியூசியஸின் திரட்டு பற்றிய yundan அம்மையாரின் விளக்கம் எனும் நூல் நல்ல முறையில் விற்பனையாகியுள்ளது.


நண்பர்களே, பெய்ஜிங் சர்வதேச புத்தகக் கண்ட்காட்சி என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.