• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-22 09:54:37    
இந்திய பாராலிம்பிக் பிரதிநிதிக்குழுவின் பளுதூக்குதல் அணியின் பேட்டி1

cri
பெய்சிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட இந்திய பிரதிநிதிக்குழுவில், 13 பேர் இடம்பெறுகின்றனர். அவர்களில் 5 விளையாட்டு வீரர்கள் பளுதூக்குதல், துப்பாக்கிச்சுடுதல், நீச்சல் ஆகிய போட்டிகளில் பங்கேற்றனர். பளுதூக்குதல் போட்டியில் இந்திய பிரதிநிதிக்குழு பதக்கம் பெறுவதில் மிக அதிக சாத்தியக்கூறு உள்ளது. இந்திய பாராலிம்பிக் பிரதிநிதிக்குழுவின் பளுதூக்குதல் அணியில் பயிற்சியாளர் Vijay Munishwar, விளையாட்டு வீரர்கள் Basha Farman, Rajinder Singh ஆகியோர் உள்ளனர். அவர்கள் அண்மையில் எமது செய்தியாளருக்கு சிறப்புப் பேட்டி அளித்தனர்.

வறுமையான ஒரு குடும்பத்தில் பிறந்த Rajinder Singh, ஏதென்ஸ் பாராலிம்பிக் போட்டியின் 60 கிலோ எடைக்கு குறைவானோர் ஆடவர் பளுதூக்குதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றார். நடப்புப் போட்டி, அவர் 2வது முறையாக பங்கேற்கும் பாராலிம்பிக் போட்டியாகும். இப்போட்டியில் மேலும் சிறந்த சாதனையை பெற்று, தனது கடந்த சாதனையைத் தாண்ட வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். அவருக்கும் மற்றும் பளுதூக்குதலுக்குமிடையிலான முதல் தொடர்பு பற்றி, அவர் கூறியதாவது
1996ம் ஆண்டு எனது நண்பர் ஒருவர் பளுதூக்குதல் பயிற்சி செய்ததைக் கண்ட போது, நான் அதை முயற்சி செய்ய முடியுமா என்று நான் கேட்டேன். அதற்கு பின், நான் பளுதூக்குதலை பயிற்சியை மேற்கொள்ளத் துவங்கினேன் என்றார் அவர்.
1996ம் ஆண்டு, Rajinder Singh பளுதூக்குதலுக்கான சிறப்புப் பயிற்சியை பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அவர் தனது தலைசிறந்த ஆற்றல் மூலம் இந்திய பளுதூக்குதல்

அணியில் சேர்ந்தார். 1998ம் ஆண்டு அவர், இந்திய மாற்று திறனுடையோர் பளுதூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார். 2004ம் ஆண்டு ஏதென்ஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 60 கிலோ எடைக்கு குறைவானோர் ஆடவர் பளுதூக்குதல் போட்டியில், அவர் வெண்கல பதக்கம் பெற்றார்.
பளுதூக்குதல் பயிற்சி, மிகக் கடினமான விடயமாகும். இயல்பான உடல் கொண்ட பொது மக்களை பொறுத்த வரை, அதிக இன்னல்களை அவர்கள் எதிர்நோக்குகின்றனர். மாற்று திறனுடையோருக்கு இது மேலும் கடினமான இன்னல் நிறைந்த செயலாகும். ஆனால், Rajinder Singh பதட்டமில்லா மன நிலையில் இதைக் கையாண்டார். அவர் மிகவும் நம்பிக்கை ஆர்வத்துடன் வாழ்விலான பல்வேறு இன்னல்களை அணுகி கையாண்டார்.
நான் ஒரு மாற்று திறனுடையோர். ஒரு விளையாட்டு வீரராக மாறுவேன் என்றோ பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கலாம் என்றோ நான்

நினைக்கவில்லை. ஆனால், அவை உண்மையாக மாறியுள்ளன. 1998ம் ஆண்டு இந்தியத் தேசிய விளையாட்டுப் போட்டியில் முதன்முறையாக தங்கப் பதக்கம் பெற்ற பின், நான் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று மக்கள் கருத்து தெரிவித்தனர். மற்றவர்கள் சாதனை பெற்றதைக் கண்ட பின், நானும் அதனால் ஊக்கப்படுத்தப்பட்டு, அதற்காக இயன்ற அனைத்தையும் செய்ய முடிவு செய்தேன். 2004ம் ஆண்டு ஏதென்ஸ் பாராலிம்பிக்கில் வெண்கல பதக்கம் பெற்றேன். மேலும் வலுவான ஆற்றலைக் கொண்டு, மேலதிக முயற்சி செய்தால், மேலும் கடுமையான இன்னல்களைச் சமாளிக்கலாம். இறுதியில் என் இலக்கை நனவாக்கலாம் என்று நான் நம்பிக்கை கொண்டேன் என்றார் அவர்.