• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-23 10:00:15    
குவாங் சி கோயில் (ஆ)

cri

குவாங் சி கோயிலில், மிங் மற்றும் சிங் வம்சக்காலங்களில் கட்டியமைக்கப்பட்ட பல புத்தர் சிலைகள் காணப்படுகின்றன. இக்கோயிலுக்குள், புத்த மதநூல், பல்வேறு படிவில் செதுக்கப்பட்ட தூபிகள் முதலிய தொல்பொருட்கள் பல இருக்கின்றன.

தா சியோங் பௌ மண்டபத்தில், 1793ம் ஆண்டு கட்டியமைக்கப்பட்ட ஒரு வெண்கல முக்காலி வைக்கப்பட்டுள்ளது. 2 மீட்டருக்கு மேலான அது, மலர் வடிவத்தைக் கொண்ட கற் பலிப்பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தா சியோங் பௌ மண்டபத்தின் பின்புற சுவரில், ஒரு படம் தொங்கவிடப்படுகின்றது. அதன் உயரம் 5 மீட்டராகும். அதன் அகலம் 10 மீட்டராகும். இப்படத்தில், Sakyamuni தாமரை பூ வடிவத்திலான இருக்கையில் உட்கார்ந்து, மத நம்பிக்கையாளரிடம் மறையை போதிக்கின்றார். அவரைச் சுற்றி, நூற்றுக்கணக்கான மத நம்பிக்கையாளர்கள், உணர்வு பூர்வமாக கேட்பது என்ற காட்சி காணப்படுகின்றது.

துவோ பௌ மண்டபம், புத்த மதத் தொல்பொருட்கள் மற்றும் கலைச் செல்வத் தளமாக அழைக்கப்படுகிறது. இம்மண்டபத்தின் நடுவில், மிங் வம்சக்காலத்தில் கட்டியமைக்கப்பட்ட மூன்று வெண்கலச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு அருகிலுள்ள கண்ணாடிப் பெட்டியில், நேபாளம், இந்தியா, வங்காளத்தேசம், ஜப்பான், இலங்கை, மியன்மார், தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளையும், ஹாங்காங், மகௌ, தைவான் ஆகிய பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள் வழங்கிய மதிப்புக்குரிய அன்பளிப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

இக்கோயிலில் அதிகமான மத நூல்கள் இருக்கின்றன. இம்மத நூல்கள், சீனாவின் புத்த மதத்தின் துவக்கம், வளர்ச்சி மற்றும் மாற்றத்தை ஆராய்ந்த முக்கிய வரலாற்று பதிவுகளாகும். அது மட்டுமல்ல, அவை, சீனாவின் பாரம்பரிய பண்பாட்டின் முக்கிய பகுதிகளுமாகும்.