• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-25 09:17:05    
விலை உயர்வு எதிர்ப்பில் சிறுமிகள்

cri
விலை உயர்வு எதிர்ப்பில் சிறுமிகள்

எண்ணெய் விலையேற்றத்தை கட்டுப்படுத்த பல தரப்புகளிடமிருந்து அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் நெருக்கடிகளை சந்தித்து கொண்டிருக்கின்றன. இதனால் அதிகமாக பாதிக்கப்படுவோரை பட்டியலிட சொன்னால் வாகனம் வைத்திருப்பவர்களை முதலாவதாகவும், பொருட்களின் விலையேற்றம் மூலம் துன்பப்படும் மக்களையும் தான் குறிப்பிடுவோம். ஆனால் மனிதரில் ஏழை பணக்காரார், சிறுவர் பெரியோர் என்ற பாகுபாடின்றி அனைவரும் பாதிக்கப்படுவர் என்பதை அமெரிக்க யூட்டா மாநிலத்தில் இரண்டு சிறுமிகள் நடத்திய போராட்டம் வெளிப்படுத்தியது. 9 வயதான சேடி மற்றும் 7 வயதான பைப்பர் வேன்ஸ் என்ற இரு சிறுமிகள் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த போராட்ட முழக்க அட்டைகளை ஏந்தி பல்வேறு முழக்கங்களை இட்டபடி, சால்ட் லேக் நகர வீதியில் நடைபோட தொடங்கினர். "அம்மாவின் பணமெல்லாம் வாகனத்திற்கு செல்கிறது" என்றும், "ஓட்டுனர்களே! எரியாற்றலின் விலையை குறைக்க குரல் கொடுங்கள்" என்றும் அவர்களின் முழக்க அட்டைகளில் எழுதப்பட்டிருந்தது. இந்த அளவுக்கு சிறுமிகள் வீறுகொண்டெழ காரணம் என்ன தொரியுமா? பெட்ரோல் போன்ற எரிப்பொருட்களின் விலையேற்றத்தால் எல்லா குடும்பங்களும் தங்கள் வரவு செலவு திட்டத்தில் சில கட்டுப்பாடுகளை மேற்கொண்டு, செலவுகளை குறைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அவ்வாறு சேடி மற்றும் பைப்பர் வேன்ஸ் குடும்பத்தில் மேற்கொள்ளப்பட்ட சிக்கன நடவடிக்கையில் இந்த சிறுமிகள் மிகவும் விரும்பி பார்க்கும் காட்டூன் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான கட்டண தொகை கட்டப்படாமல் சேமிக்கப்பட்டது. இவ்வாறு காட்டூன் அலைவரிசையை கண்டுகளிக்க முடியாமல் போகவே வீதிகளில் போராட்டம் நடத்தும் அளவுக்கு துணிந்துள்ளனர். அதற்கு மக்கள் ஓரளவு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

இராட்சத நண்டு

கடல் மற்றும் வயல் நண்டுகளை பார்த்திருப்போம். உணவாகவும் உண்டு மகிழ்ந்திருப்போம். அவை மிகவும் சிறியதாக இருக்கும். பிரிட்டனில் Dorset கடலில் 63.82 கிலோ எடையுள்ள இராட்சத நண்டு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது. அதனுடைய மேல் தோட்டின் நீளம் 30.48 சென்டிமீட்டர்கள் அதாவது ஒரு அடிக்கு மேலேயே. அதனுடைய இடுக்குகின்ற கால் மனிதனின் கை அளவுக்கு சமமாம்.