• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-12-23 21:57:31    
சீனாவின் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பது

cri
சீனச் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு பணியை மேற்கொண்டு வருவதுடன் பல்கலைக்கழகங்களில் பயில மென்மேலும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் சீனாவுக்கு வந்துள்ளனர். 1997ம் ஆண்டு முதல் சீன அரசின் புலமை பரிசு பெற்ற வெளிநாட்டு மாணவர்களுக்கான தேர்வு, சேர்க்கை மற்றும் நிர்வாகப் பணிக்கு சீன கல்வி உதவி அவை அதிகாரப்பூர்வமாக பொறுப்பு ஏற்றது. வெளிநாட்டினர் சீனாவில் பயில்வது பற்றிய கொள்கையை அறிவிக்கும் நிறுவனமும், வெளிநாட்டு மாணவர்கள் சீனாவில் தொடர்பு கொள்ள கூடிய முதலாவது சீன அரசின் நிறுவனமுமாக இது திகழ்கின்றது. சீன கல்வி உதவி அவையின் முக்கிய பணி பற்றி இந்நிறுவனத்தின் துணைத் தலைமை செயலாளர் li jian min கூறியதாவது,


சீனாவில் வெளிநாட்டு மாணவர்கள் பயில்வது பற்றிய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் தேர்வு, சேர்த்தல் மற்றும் நிர்வாகப் பணிக்கும் சீன கல்வி உதவி அவை முக்கியமாக பொறுப்பு ஏற்கிறது. வெளிநாட்டு அரசு, நிறுவனங்கள், குழுக்கள் ஆகியவை செய்யும் பரிந்துரைகளையும், சீன அரசின் புலமை பரிசு பெறுவதற்கான விண்ணப்பங்களையும் கையாள்கின்றோம் என்றார் அவர்.
தற்போது சீனாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் நிலைமை பற்றி அவர் கூறியதாவது
2006ம் ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின் படி, 184 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 695 மாணவர்கள் சீனாவில் பயின்றனர். அவர்கள், சீனாவின் 31 மாநிலங்கள், தன்னாட்சி பிரதேசங்கள் மற்றும் மாநகர்களிலுள்ள 519 பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி ஆய்வகங்களில் பயில்கின்றனர். அவர்களில் 74.33 விழுக்காட்டினர் அதாவது ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர் ஆசியாவையும், 20 ஆயிரம் பேர் ஐரோப்பாவையும் 15 ஆயிரம் பேர் அமெரிக்காவையும் சேர்ந்தவராவர் என்றார் அவர்.
தெற்கு ஆசிய நாடான பாகிஸ்தானில், சீனாவில் பயில மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், அந்நாட்டு அரசு புலமை பரிசை ஏற்படுத்தியுள்ளது. சீன வளர்ச்சியை பார்த்தால், ஆசிய பசிபிக் பிரதேசத்திலுள்ள அண்டைநாடுகளுடன் சீனா இணக்கமாக வாழ வேண்டும். ஆகையால், இந் நாடுகளுக்கு சீனா எப்போதும் உயர் கவனம் செலுத்துகின்றது.


முன்பு, வெளிநாடுகளுக்கு சீனா உதவி அளிக்கும் நடவடிக்கைகளில், திட்டப்பணிகள் முக்கிய இடம் வகிக்கின்றது. ஆனால், இந்த நாடுகளுக்கு குறிப்பாக வளரும் நாடுகளுக்கென திறமைசாலிகளுக்கு பயிற்சி அளிப்பது மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சீனா உணர்ந்துள்ளதாக li jian min கூறினார்.
சீனாவில் கல்வி பயிலை ஈக்கப்படும் காரணங்கள் பற்றி அவர் கூறியதாவது
சீனாவில் கற்றுக்கொண்டால், சிறப்புத் தொழில் பற்றிய கல்வியைத் தவிர, சீனாவிலான வாழ்க்கை, சீனாவின் வளர்ச்சி, குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி துறையில் சீனா பெற்றுள்ள அனுபவம் ஆகியவை அவர்களுக்கு பயன் தரும். தவிர, சீனாவில் பயில்வதற்கு தேவையான கட்டணம் வளர்ந்த நாடுகளில் செலவிட்டதை விட குறைவு என்பது காரணங்களில் ஒன்றாகும் என்றார் அவர்.
சீனாவில் பயில வரும் மாணவர்களுக்கு ஒரு இன்னல் உண்டு. அதாவது மொழி பிரச்சினை. அனைவரும் அறிந்தவாறு, சீன மொழியைக் கற்றுக்கொள்வது மிகவும் கடினம். இந்தப் பிரச்சினை பற்றி துணைத் தலைமை செயலாளர் li jian min தனது கருத்து தெரிவித்தார்


தற்போது, இளங்கலை அல்லது முதுகலை மாணவர்களுக்கு நாங்கள் ஆங்கிலத்தில் பாடம் வழங்கலாம். 15 உயர் கல்வி நிலையங்களில் 20 துறைகளில் ஆங்கிலம் மூலம் முதுகலை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கின்றோம். சர்வதேச அரசியல், பொருளாதார இயல், தொழில் மற்றும் வணிக நிர்வாகம், கணிணி, செய்தித் தொடர்பு முதலிய துறைகள் இவற்றில் அடங்குகின்றன. இத்துறைகளில் பெரும்பாலானவற்றில் வெளிநாட்டு மாணவர்கள் சீன மொழி மூலம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே , சீன மொழி மூலம் கற்றுக்கொள்வது, அவர்களின் எதிர்கால பணி மற்றும் வளர்ச்சிக்கு நன்மை பயக்கும் என்றார் அவர்.
பல வெளிநாட்டு மாணவர்கள் சீன உயர் கல்வி நிலையங்களின் நிலைமை பற்றி தெளிவாக அறிந்து கொள்ளவில்லை. பல்கலைக்கழகங்களை அல்லது துறைகளைத் தேர்வு செய்வது பற்றி li jian min சில யோசனைகளை வழங்கினார்.


1, நாங்கள் வழங்கும் எழுத்து மூல அல்லது இணையத்தள தகவல்கள் மூலம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் நிலைமை பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், சீனாவில் பயின்ற நண்பர்கள் அவர்களுக்கு இது பற்றி பரிந்துரை செய்யலாம். 2, சீனாவுக்கு வந்த பிறகு, ஓராண்டு கால சீன மொழி பயிற்சி மாணவர்களுக்கு வழங்குகின்றோம். இதற்கிடைல், நாங்கள் அவர்களுக்கு பல்கலைக்கழகங்களை பற்றி அறிமுகம் செய்கின்றோம், அவர்களும் தானேபல்கலைக்கழகங்களைப் பார்வையிடலாம் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியைக் கேட்கும் நேயர்களுக்கு li jian min அழைப்பு விடுத்தார். அவர் கூறியதாவது

சொந்த செலவில் அல்லது சீன அரசின் புலமை பரிசு பெற விண்ணப்பம் செய்த பல்வேறு நாடுகளின் மாணவர்களை வரவேற்கின்றோம். சீனாவின் உயர் கல்வியின் தரம் ஏற்கனவே கண்டறிந்த உண்மையே. எடுத்துக்காட்டாக, சி ஆன் jiao tong பல்கலைக்கழகத்தில் மருத்துவ துறை பட்டம் பெற்ற 36 நேபாள மாணவர்கள் நாட்டுக்குத் திரும்பிய பிறகு, உள்ளூர் மருத்துவர் தகுதிக்கான தேர்வில் கலந்துக்கொண்ட போது இவர்களில் 34 பேர் எளிதாக வெற்றி பெற்றனர். இது சீனாவின் உயர் கல்வியின் தரத்தை நிரூபிக்கின்றது. எமது இணையத்தளத்தின் முகவரி, www.csc.edu.cn, வெளிநாட்டுக்கு திறக்கப்பட்ட சீனா உங்களை வரவேற்கின்றது என்றார் அவர்.