• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-30 19:59:44    
அடி மட்ட பிரதிநிதிகளின் முன்மொழிவுகள்

cri

பெய்ஜிங்கில் நடைபெற்ற 11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடர் துவங்கிய இடத்தில், வட மேற்கு சீனாவின் சின் ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்திலிருந்து வந்த பெண் பிரதிநிதி Maria Marti அம்மையார், மகிழ்ச்சி மிகுந்த மக்களில் ஒருவராவார். ஏனென்றால், 2006ஆம் ஆண்டில் அவர் நேரடியாக சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் அவர்களிடம் முன்வைத்த ஒரு முன்மொழிவு, கடந்த ஆண்டுக்கான சீன அரசு பணியறிக்கையில் எழுதப்பட்டுள்ளது. அப்போதைய காட்சிகளை நினைத்த அவர் உணர்ச்சி வசப்பட்டு கூறியதாவது—


"தொலை தூரத்திலிருந்து வந்து மத்திய அரசின் உயர் நிலை தலைவர்களுடன் நேரடியாக பேசுவது பெரும் மகிழ்ச்சி தரக் கூடியது என நான் அப்போது உணர்ந்தேன். அவ்வாய்ப்பைப் பயன்படுத்தி விவசாயிகள் மற்றும் ஆயர்களின் விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும் என கருதினேன். இன்னல் மிகுந்த மற்றும் ஏழை பிரதேசங்களிலுள்ள விவசாயிகள் மற்றும் ஆயர்கள் வாழ்க்கைக்கான குறைந்தபட்ச உத்தரவாதத்தை அனுபவிக்கச் செய்ய வேண்டும் என நான் தலைமை அமைச்சரிடம் முன்மொழிந்தேன்" என்றார் அவர்.
அந்த முன்மொழிவு தான் ஓராண்டுக்குப் பின் அரசு பணியறிக்கையில் எழுதப்பட்டது.
இவ்வாண்டு 32 வயதான Maria Marti அம்மையாரின் சொந்த ஊரில் பெரும்பாலான பகுதிகள் மலைப் பிரதேசங்களாகும். அங்குள்ள இயற்கை நிலை மோசமானது. ஆண்டு முழுவதும் பாடுபட்டு உழைத்து வரும் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் ஆண்டு வருமானம் மிகக் குறைவு. இந்நிலைமையை மாற்றி, சிறுபான்மை தேசிய இனப் பகுதிகளின் வளர்ச்சியை விரைவுபடுத்த, மக்கள் பேரவைப் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தில், அவர் 50க்கு மேற்பட்ட முன்மொழிவுகளை வழங்கியுள்ளார். நாட்டின் தலைவர்களிடம் அவர் நேரடியாக முன்வைத்த 7 முன்மொழிவுகளில் 4 முன்மொழிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. சொந்த ஊர் பற்றி மீண்டும் குறிப்பிடுக்கையில் அவர் மகிழ்ச்சியுடன் கூறியதாவது—


"தற்போது எமது ஊரில் தலைகீழான மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாணவரின் உணவுக்கான உதவித் தொகை திங்களுக்கு 130 யுவானாக அதிகரித்துள்ளது. ஜியாங் சு மாநிலத்தின் உதவியுடன், நிலநடுக்கத் தடுப்பு திட்டப்பணியைத் தடையின்றி நிறைவேற்றியுள்ளோம். மக்கள் வாழ்க்கை தொடர்பான பிரச்சினை பூர்வாங்க ரீதியில் தீர்க்கப்பட்டுள்ளது" என்றார் அவர்.
2006ஆம் ஆண்டு சீனத் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடரில், மக்கள் பேரவைப் பிரதிநிதியும் ஜியாங் சு மாநிலத்து தை சாங் நகரின் பாலர் பள்ளித் தலைவருமான CHEN JING YI அம்மையார் முன்மொழிவு ஒன்றை வழங்கினார். அதாவது, ஆசிரியர் பயிற்சி அளிக்கும் உயர் கல்வி நிலையங்களுக்கு விண்ணப்பம் செய்ய, உயர் நிலை பள்ளியிலிருந்து படிப்பை முடித்த தலைசிறந்த மாணவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். கடந்த ஆண்டு, சீனத் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் அரசு பணியறிக்கை வழங்கிய போது, 2007ஆம் ஆண்டிலிருந்து கல்வி அமைச்சகத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள 6 ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பயற்சி பெற்ற மாணவர்களுக்கான இலவச கல்வி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
ஆசிரியர் பயிற்சி பெற்ற மாணவர்கள், அடிப்படை கல்விக்கான முக்கிய வளமாக இருக்கின்றனர் என்று CHEN JING YI அம்மையார் கருதுகிறார். அடிப்படை கல்வி வெற்றி பெறுமா இல்லையா என்பது, ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த மாணவர்களின் தரத்தை பெருமளவில் பொறுத்திறுக்கிறது. சீனாவின் சில பகுதிகளில், இடைநிலை மற்றும் துவக்கப் பள்ளி ஆசிரியர்களின் சிறப்புத் தொழில் முறை தாழ்ந்த தர நிலையில் உள்ளது. அவர்களின் எளிதான கல்வி முறை, திறமைசாலி வளர்ப்புக்குப் பாதகமானது. எனவே அந்த முன்மொழிவை அளித்ததாக அவர் செய்தியாளரிடம் கூறினார்.


நடப்பு தேசிய மக்கள் பேரவையின் கூட்டத் தொடர் காலத்தில், பொது மக்கள் சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சியின் கனிகளைப் பகிர்ந்து கொள்ளச் செய்யும் வகையில், பாலருக்கான கட்டாய கல்வியைப் பரவலாக்க வேண்டும் என்று தாம் முன்மொழிய உள்ளதாக அவர் செய்தியாளிடம் தெரிவித்தார்.
57 வயதான MA WEN FANG இவ்வாண்டில் மக்கள் பேரவைப் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006ஆம் ஆண்டு பிப்ரவரி பெய்ஜிங்கில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போது, சிகிச்சை பெறுவதிலான விவசாயிகளின் இன்னல்களை தலைமை அமைச்சர் வென் சியாபாவ் அவர்களிடம் அவர் வெளிப்படுத்தினார். புதிய ரக கிராமப்புற கூட்டுறவு மருத்துவ சேவை முறைமையை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்தார். 2006ஆம் ஆண்டில் தலைமை அமைச்சர் வென் சியாபாவ் அரசு பணியறிக்கை வழங்கிய போது, 2008ஆம் ஆண்டுக்குள் புதிய ரக கிராமப்புற கூட்டுறவு மருத்துவ சேவை முறைமை நாடு முழுவதிலுள்ள கிராமங்களில் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.