• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-23 09:33:30    
நேயர்களின் கருத்துக்கள்

cri

மின்னஞ்சல் பகுதி
யாழ்பாணம் பாலா ஈசன்
சீனா தங்கப் பதக்கப்பட்டியலில் முன்னிலையில் இருக்கின்றனர். சீன வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் எனது பாராட்டுக்கள். சீனாவில் நடைபெறும் இந்த ஒலிம்பிக் போட்டியில், தொடர்ந்தும் சீனா முன்னிலை வகிக்க, எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
வளவனுர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்
ஆகஸ்டு திங்கள் 12 ஆம் நாள் இடம்பெற்ற •நேர்மையான ஒலிம்பிக்• என்ற கட்டுரையைக் கேட்டேன். குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி முன்னேற்றம் பெறவிரும்பும் போக்கு, தற்காலத்தில் பரவி வருகிறது. இதனால், விளையாட்டுத் துறையும் பாதிக்கப்பட்டு வருகிறது. உலகின் சில முக்கிய விளையாட்டு நட்சத்திரங்கள், ஊக்க மருந்து சோதனையில் சிக்கி அவமானப்பட்டதை நாம் கண்டிருக்கின்றோம். ஊக்க மருந்தின் மூலம் பெறப்படும் வெற்றியைத் தடுப்பதுடன், ஊக்கமருந்தின் பயன்பாட்டினால் விளையாட்டு வீரர்களின் உடல்நலன் கெடுவதை தடுப்பதும் ஒரு சிறந்த வழிமுறையாகும். எனவே, பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஊக்க மருந்து சோதனைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதை நான் பெரிதும் வரவேற்கின்றேன்.
இலங்கை M.S.M. இர்ஷாத்
சீனத் தலைநகர் பெய்சிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவை கண்டுகளித்தேன். துவக்க விழா கலைநிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக இருந்தன. தொடர்ந்து போட்டிகளில் சீன வீரர்கள் பதக்கங்களை பெற்று முன்னிலை வகித்து வருகின்றனர். அனைத்து போட்டிகளிலும் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.


சிறுநாயக்கன்பட்டி, கே.வேலுச்சாமி
பெய்ஜிங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 29-வது கோடைக்கால ஒலிம்பிக் போட்டி பற்றி தமிழ்ப்பிரிவு வழங்கும் சிறப்புச் செய்திகளை தொடர்ந்து கேட்டு வருகின்றேன் சீன ஒலிம்பிக் அணி தொடர்ந்து தங்கப் பதக்கங்களை குவித்து பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்று வருவதை அறிந்து நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன். சீனா, பொருளாதார வளர்ச்சியில் மட்டுமின்றி விளையாட்டுத்துறையிலும் உலகில் எந்த நாடும் அசைக்க முடியாத சாம்பியன் என்பதை இந்த தங்க வேட்டை உலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டியிருக்கின்றது என்றால் மிகையாகது பாராட்டுக்கள்.
ஊட்டி, S.K.சுரேந்திரன்
செய்தியில் நாள்தோறும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெரும் வீரர்களைப் பற்றியும் அவர்கள் எந்த போட்டிகளில் பரிசுகள் பெற்றார்கள் என்பதை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது தொலைக்காட்சியை விடவும்,செய்தித் தாள்களை விடவும் சீன வானொலியில் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளைப் பற்றி நாள்தோறும் கேட்பதையே நான் விரும்புகிறேன். மேலும் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் சீனா அதிக பதக்கங்களைப் பெற்றுவருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சீனாவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டி பல அறிய சாதனைகள் படைத்து வரலாற்றில் நிலைத்து நிற்கும் என்பதில் அய்யம் இல்லை.


திருச்சி மு. பரத்வாஜ்
"2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் நல்லபடி நடைபெறவேண்டும் எனபதே எங்கள் அனைவரது விருப்பமும், இறைமன்றாட்டும். இதில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களும் சிறப்பான சாதனைகள் புரிய வாழ்த்துகிறோம்.
வளவனூர் முத்துசிவக்குமரன்
(1.8.2008) பிற்பகல் ஒலிம்பிக் கிராமத்தில் அமைதி மற்றும் நட்புறவை அடையாளப்படுத்தும் சுவர் எழுப்பப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஈராக் ஒலிம்பிக் பிரதிநிதிக்குழுவையும் பீஜிங் ஒலிம்பிக்கில் பங்கு கொள்ள அனுமதி அளித்திருப்பது வரவேற்கத் தக்கதாகும். அனைத்து நாட்டு விளையாட்டு வீரர்களும் போர் எதிர்ப்பு முழக்கங்களை இந்த சுவற்றில் பதிவு செய்து உலக நாடுகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் வருவதற்கான முன்னோடிகளாய் செயல்படவேண்டும்.
ஐந்து கண்டங்களின் நண்பர்களும் ஒலிம்பிக் மூலம் புரிந்துணர்வை வலுப்படுத்தி நட்பை ஆழமாக்க வேண்டும் என்று திரு. ஹூ சிந்தாவ் அவர்கள் வலியுறுத்தியிருப்பது மிகவும் நன்று.
திருச்சி அண்ணா நகர், V. T. இரவிச்சந்திரன்
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் போதான தலைசிறந்த கலை நிகழ்ச்சிகள் பற்றி கேட்டேன். சாதாரண நிகழ்வுகளுக்கே சீனர்களின் கலை நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு மிகவும் சிறப்பாக இருக்கும்..
உலக விளையாட்டுப் போட்டியான ஒலிம்பிக்கிற்கு, பெய்ஜிங் நகரின் பல்வேறு முக்கிய இடங்களில் கலை நிகழ்ச்சிகள் என்றால் சொல்லவும் வேண்டுமா? இரவு பகலாக வரும் வெளிநாட்டவரை மனமகிழச்செய்யும் சீனக் கலைநிகழ்ச்சிகள், உறங்குவதற்கு கூட செல்ல விருப்பமில்லாமல் மூழ்கிவிடச்செய்யும். கலைகளுக்கு பெயர் எடுத்த சீனக் கலை நிகழ்ச்சிகளை ஒரே இடத்தில் கண்டுகளிக்க நல்லதொரு பெரிய வாய்ப்பு இது.


காளியப்பம்பாளையம், க ராகம் பழனியப்பன்
ஒலிம்பிக் செய்தியில் ஜூலை 27 அன்று, கியூபாவிலிருந்து அதிக வீரர்கள் கலந்துகொள்கின்றனர் என்றும் இந்தியாவில் இருந்து 40 வீரர்கள் கலந்து கொள்கின்றனர் என்றும் அறிந்து கொண்டேன். இரு நாட்டு வீரர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
பாண்டிச்சேரி ஜி. ராஜகோபால்
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், மானுட வள ஒலிம்பிக் என்னும் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள சீன அரசின் கருத்து மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. சீனாவின் பண்டைய பண்பாட்டின் மைய அம்சத்துடன் மானுட வள ஒலிம்பிக் நெருக்கமாக இணைவது மட்டுமல்லாமல், உலகிற்கு, இணக்கம், பரிமாற்றம் மற்றும் வளர்ச்சியை வெளிப்படுத்த ஒலிம்பிக் வாய்ப்பாக அமையும் என்பது என் நம்பிக்கை.
திருப்பூர், இரா. சின்னப்பன்
சீன வானொலியின் இணைய தளத்தில் தற்போது 2008 ஒலிம்பிக் பற்றிய செய்திகளும், நிழற்படங்களும் பார்ப்பதற்கு பரவசமாக உள்ளன. "உலகம் ஒரு பறவைக்கூடு! அதை பெய்சிங் ஒலிம்பிக்கில் காண்பது கண்கூடு!!! இதுவே என் வாழ்த்து.