• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-24 12:44:23    
இந்திய பாராலிம்பிக் பிரதிநிதிக்குழுவின் பளுதூக்குதல் அணியின் பேட்டி2

cri
பளுதூக்குதல் பியற்சியில் சேர்வதற்கு முன்பு, நான் வேலை செய்து கொண்டிருந்தேன். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த வேலையை இழந்தேன். அதற்கு பின், என் மனைவி பணிபுரிய வேண்டும். அவர் எப்போதும் எனக்கு ஆதரவளித்து வருகிறார். அவர் என்னோடு இணைந்து நின்று, எனது உறுதியான ஊன்றுகோலாயிருக்கிறார் என்றார் அவர்.
அவரது மனைவியை தவிர, Basha அவரது பயிற்சியாளர் Munishwar Vijayக்கும் நன்றி தெரிவித்தார்.

நடப்பு பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி,   Munishwar Vijay கலந்து கொண்ட 4வது பாராலிம்பிக்காகும். 1996ம் ஆண்டு அட்லான்டா மற்றும் 2000ம் ஆண்டு சிட்னி பாராலிம்பிக் விளையாட்டு போட்டியில், அவர் விளையாட்டு வீரராக கலந்து கொண்டார். அப்போட்டிகளில் சிறந்த சாதனை பெறவில்லை. இருந்த போதிலும், அவர் போட்டியிலிருந்து செழுமையான அனுபவங்களைப் பெற்றார். ஓய்வு பெற்ற பிறகு, பயிற்சியாளராக மாறிய அவருது தலைமையிலான இந்திய மாற்று திறனுடையோர் பளுதூக்குதல் அணி, 2004ம் ஆண்டு ஏதென்ஸ் மற்றும் நடப்பு பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றது. பல ஆண்டுகால மாற்று திறனுடையோர் விளையாட்டுப் பணியில் ஈடுபட்ட  Munishwar Vijay, விளையாட்டுக்கள் மாற்று திறனுடையோரின் வாழ்க்கையை மாற்றுவதை பற்றிய தனது கருத்தை தெரிவித்தார். Rajinder Singh எடுத்துக்காட்டாக, அவர் மாற்று திறனுடையோராக வேலை ஏதும்

செய்யவில்லை. அவர் எதையும் செய்ய முடியாது என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், அவர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, ஒரு விளையாட்டு வீரராக மாறியதுடன், அவரது தன்னம்பிக்கை வலுப்பட்டது. வருகிறது. அவர் தாமாகவே எதையும் செய்ய முடியும் என்று அவர் கருதுகிறார். தான் தனது நாட்டின் நாயகர்களில் ஒருவராக மாறியதாக அவர் உணர்கிறார் என்றார் Munishwar Vijay
மாற்று திறனுடையோர் அனைவரும், வாழ்க்கையில் இன்னல்களைச் சமாளித்து வெற்றி பெற்றோரே. இந்திய மாற்று திறனுடையோர் விளையாட்டு வீரர்களைப் பொறுத்த வரை, பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுப்பதே, ஒரு பெரிய விடயமாகும் என்று Vijay Munishwar கருத்து தெரிவித்தார். பங்கெடுப்பதே மிக முக்கியமானது என்பதில் ஐயமில்லை. குறிப்பாக, பாராலிம்பிக் விளையாட்டுப்

போட்டியை பொறுத்த வரை, இது முக்கியமாகும். கடந்த 2 ஆண்டுகளில், பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுக்க தகுதி பெறுவதை எமது இலக்காக கொண்டோம். நாங்கள் எங்களால் இயன்ற அனைத்தையும் செய்துள்ளோம். தற்போது, நாங்கள் மிக தலைசிறந்த நிலையில் இதைச் செயல்படுத்துகின்றோம். நாங்கள் வெற்றியாளர்களே என்றார் அவர்.
பங்கெடுப்பதே ஒரு முன்னேற்றமாகும். போட்டியில் பதக்கம் பெற முடியுமா என்பது, முக்கியத்துவம் குறைந்த நோக்கமாகும். முயற்சியே மிக முக்கியமானது, இது வெற்றி பெறுவதை விட மிக முக்கியமானது என்று நடப்புப் போட்டியின் சாதனை பற்றி குறிப்பிடுகையில் Munishwar Vijay கூறினார்.