• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-25 09:20:40    
பெய்ஜிங்கின் jasmine என்னும் உணவகம்

cri
jasmine என்னும் உணவகம், பெய்ஜிங் தொழிலாளர் விளையாட்டு அரங்கின் அருகிலுள்ள உயர்நிலை உணவகமாகும். அதன் உணவு வகைகள், சீனப் பாரம்பரிய மூல பொருட்களைக் கொண்டு, மேலை நாட்டு புதிய சமையல் வழிமுறைகளால், சீனத் தனிச்சிறப்பியல்போடு தயாரித்து வழங்கப்படுகின்றன. இத்தகைய சீன உணவு வகைகள், தென்கிழக்காசியாவில் வாழ்கின்ற சீனர்களால் முதலில் தயாரிக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான், சீனச் சந்தையில் நுழைந்து பரவியுள்ளது என்று, jasmine உணவகத்தின் மேலாளர் சுன் லியாங் அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது:

புதிய ரக சீன உணவு வகைகள், சீனாவின் பாரம்பரிய சமையல் வழிமுறைகளை அடிப்படையாக கொண்டு, வெளிநாடுகளின் சமையல் வழிமுறைகள் மற்றும் சாஸ்களைச் சேர்த்து, சீன விருந்தினர்களுக்கு புதிய உணர்வை கொடுக்கவும், வெளிநாட்டு விருந்தினர்கள் ஏற்றுக்கொள்ளும் அளவிலும் உருவாக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
jasmine என்னும் உணவகத்தின் நிர்வாக தலைமை சமையற்காரர் Sun fanjing, பல ஆண்டுகளாக சமையல் துறையில் ஈடுபட்டு, சிங்கப்பூர், ஜப்பான் முதலிய நாடுகளில் கற்றுக்கொண்டுள்ளார். அவர் சமைக்கும் புதிய ரக சீன உணவு வகைகளில், ஆசிய நாடுகளின் சுவைகளையும் மேலை நாடுகளின் சமையல் சிறப்பியல்புகளும் சேர்க்கப்படுகின்றன.

வெளிநாடுகளிலான சீன உணவகங்கள், பாரம்பரிய சீன உணவு வகைகளைப் பரவல் செய்கின்றன. புதிய ரக சீன உணவு வகைகள், சீர்திருத்த மற்றும் அனைவராலும் விரும்பப்படும் வறுவல்களை பரவலாக்குகின்றன. இவ்வகை வறுவல்கள், jasmine என்னும் உணவகத்தின் உணவு வகை பெயர் பட்டியலில் போதியளவில் எடுத்துக்காட்டப்படலாம். சிறப்பு குறு மிளகு துளி மாட்டிறைச்சி என்ற வறுவல், மிகவும் வரவேற்கப்படுகின்றது. இது பற்றி மேலாளர் சுன் லியாங் கூறியதாவது:
இந்த வறுவல், சீனாவின் பாரம்பரிய சமையல் வழிமுறையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டது. ஆனால், இதில் சில வெளிநாட்டு சமையல் முறைகளையும் பயன்படுத்துகின்றோம். முதலில், ஆஸ்திரேலியாவின் மாட்டிறைச்சிகளைத் தேர்ந்தெடுத்து, குறு மிளகு துளியைச் சேர்த்துள்ளோம். சீனாவின் சமையல் முறையில்,

இரு தலைச்சிறப்பியல்புகளை இணைந்து, மேலை உணவு வகைகளின் சுவையை நெருங்கியதாக உருவாக்கியுள்ளோம் என்றார் அவர்.
தவிர, கியோடோ சாஸ் மீன் வறுவல் என்பதும், jasmine உணவகத்தில் மிகவும் புகழ் பெற்றது. சுன் லியாங் அறிமுகப்படுத்தியதாவது:
இந்த வறுவல், தலைமை சமையற்காரர் ஜப்பானில் கற்றுக்கொண்டு சமைக்கும் உணவு ஆகும். மேலை நாடுகள் மற்றும் ஜப்பானின் உணவு வகைகளில், மீன் அடிக்கடி காணப்படலாம். மீன் வறுவல்களை வேறுபட்ட சுவைகளோடு சமைப்பது, அவை வரவேற்பு பெறுவது ஆகியவை, சமையற்காரரின் தயாரிப்பு நுட்பத்தைச் சார்ந்திருக்கின்றன. jasmine உணவகம் தயாரிக்கின்ற கியோடோ சாஸ் மீன் வறுவலில்,

முட்டையின் வெள்ளைப்பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், அதன் சுவை, கூட்டப்படுகின்றது. இதனை உண்ணும் போது, விருந்தினர்கள் சிறப்பான உணர்வு பெறுவர் என்றார் அவர்.
jasmine உணவகத்தின் புதிய ரக சீன உணவு வகைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்களால் வரவேற்கப்படுகின்றன. அமெரிக்க ஒலிம்பிக் குழு, இவ்வுணவகத்துடன் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையொப்பமிட்டுள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்ற போது, அமெரிக்க ஒலிம்பிக் குழுவின் பணியாளர்கள், இங்கு வேலைபுரிந்ததோடு, செய்தியாளர் கூட்டம் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளையும் நடத்தினர்.