இன்றிரவு, சென்ஷோ 7 எனும் 3 விண்வெளி வீரர்களை ஏற்றிச்செல்லும் விண்கலம், வடமேற்கு சீனாவிலுள்ள சியு சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. மனிதரை ஏற்றிச்செல்லும் சீன விண்கலம் விண்வெளியில் பயணம் மேற்கொள்வது இது 3வது முறையாகும்.

சீன விண்வெளி வீரர் விண்கலத்தை விட்டு விண்வெளியில் நடப்பதன் மூலம், விண்வெளியில் செயல்படுவது பற்றிய தொழில் நுட்பத்தைக் கைப்பற்றுவது, சென்ஷோ 7 விண்கலத்தின் முக்கிய கடமையாகும். தவிர, ஒரு செயற்கைக்கோளும் விண்கலத்துடன் விண்ணில் பறக்கும். செயற்கைக்கோள் மூலம் தரைக்கு தரவுகள் அனுப்பப்படும். திட்டப்படி, சென் ஷோ 7 விண்கலம் பூமிக்கு மேலே சுமார் 343 கிலோமீட்டர் உயரத்திலான சுற்றுவட்டப் பாதையில் பறக்கும்.
|