அமெரிக்க தலைவர் தொலைபேசி மூலம் தலாய் லாமாவுடன் தொடர்புகொண்டது உள்ளிட்டவை குறித்து, சீனா அமைரிக்காவிடம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
அண்மையில், அமெரிக்க அரசுத் தலைவர் புஷ் தொலைபேசி மூலம் தலாய் லாமாவுடன் தொடர்புகொண்ட பின், கூறப்படும் அமெரிக்காவிலுள்ள தலாய் லாமாவின் பிரதிநிதியை சந்தித்துரையாடினார். இன்று பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் Liu Jianchao இது பற்றி குறிப்பிடும் போது, சீனாவின் எதிர்ப்பை தெரிவித்தார்.
சர்வதேச உறவுக் கோட்பாட்டை பின்பற்றி, திபெத் சீனாவிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதி, திபெத் சுதந்திரத்தை ஆதரிக்காது ஆகியவை பற்றிய வாக்குறுதிகளை அமெரிக்கா உண்மையாக கடைபிடித்து, சீன உள் விவகாரத்திலான தலையீட்டை நிறுத்த வேண்டுமென சீனா கோரியுள்ளது என்று Liu Jianchao கூறினார்.
|