• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-26 09:48:58    
Cheng yu என்ற ஒரு ஊனமுற்ற தீப ஏந்தும் நபர்

cri
பெய்ஜிங் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டியின் தொடரோட்ட நடவடிக்கை ஆகஸ்ட் திங்கள் 31ம் நாள் சீனாவின் ஹு பெய் மாநிலத்தின் வூ ஹான் நகரில் நடைபெற்றது. நடவடிக்கையில் Cheng yu என்ற ஒரு ஊனமுற்ற தீப ஏந்தும் நபர் தனது நம்பிக்கையார்வத்தையும் தன்னம்பிக்கையையும் முழுமையாக வெளிப்படுத்தினார். இது மக்களின் மனதில் ஆழப் பதிந்துள்ளது. ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தனக்கு ஊக்கம் அளித்துள்ளது என்று அவர் கூறினார். இன்றைய நிகழ்ச்சியில் Cheng yu என்ற இப்பெண்மணி பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.
Cheng yu அம்மையார் ஹு பெய் மாநிலத்தின் rong jun எனும் மருத்துவமனையின் எலும்பியல் மையத்தின் துணைத் தலைவராவார். 15 வயதான போது அவர் எதிர்பாராத விபத்தில் சிக்கிக்கொண்டார். காயத்தால் ஏற்பட்ட வலியுடன் போராடிய அவர், 8 ஆண்டுகளுக்குப் பின், 23வது வயதில் மருத்துவரின் யோசனையை ஏற்றுக் கொண்டு, காணுக்காலுக்குக் கீழுள்ள பகுதியை வெட்டியெடுக்க வேண்டியிருந்தது. அப்போது அவரைப் பொறுத்த வரை, ஊனமுற்றோராக மாறுவது ஒரு மாபெரும் தாக்கமாகும். அப்போது, அவர் மிகவும் மனம் நொந்தார். அடிக்கடி எரிச்சல் கொண்டார். ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட அனுபவம் தனக்கு ஊக்கம் அளித்தது என்று அவர் தெரிவித்தார்.

உண்மையில், ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்தப் பிறகு தான், படிப்படியாக மகிழ்ச்சி அடைந்தேன். முன்பு, பிறரின் முன்னால் செயற்கை கால்களை அணிய விரும்பவில்லை. மிகவும் தாழ்வாக உணர்ந்தேன். ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட பின், பல ஊனமுற்ற நண்பர்கள், போட்டியில் ஈடுபட்டதைக் கண்டேன். அவர்களில் பலருக்கு எனது நிலைமையை விட மேலும் மோசம். அவர்களது விடாமுயற்சி எனக்குப் பெரிதும் உதவியளித்தது. அவர்களிடமிருந்து பலவற்றைக் கற்றுக்கொண்டேன். திரும்பிய பிறகு, முன்பை விட பெரிதும் தன்னம்பிக்கை கொண்டுள்ளேன் என்றார் அவர்.
சீனாவின் முதலாவது தலைமுறை ஊனமுற்ற விளையாட்டு வீராங்கனையான அவர், புகளிபெற்ற மேசை பந்து பயிற்சியாளர் feng meng ya அம்மையாரிடம் கற்றுக்கொண்டார். 1988 சியோல் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அவர் சக குழுவினருடன் இணைந்து மகளிருக்கான மேசை பந்து போட்டியின் குழு சாம்பியன் பட்டம் பெற்றார். அப்போதைய நிலைமையை நினைவு கூர்ந்த போது, அவர் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கின்றார். போட்டிக்கு முன், குழுத் தலைவரும் பயிற்சியாளரும் போட்டியில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு ஊக்கம் அளித்து,

போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, ஒரு பதக்கத்தை பெறப்பாடுபட வேண்டும் என்று கூறினர். போட்டியில், அவரும் சக குழுவினர்களும் சிறப்பாக விளையாடினர். குழுப் போட்டியில் 5 ஆட்டங்கள் நடைபெற வேண்டும். முதலாவது ஆட்டத்தில் 21க்கு 19 என்ற புள்ளிகள் கணக்கில் சீன அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் 24க்கு 26 என்ற கணக்கில் தோல்வியுற்றது. Cheng yu மூன்றாவது ஆட்டத்தில் ஒரு பிரான்ஸ் வீராங்கனையுடன் விளையாடினார். 22க்கு 20 என்ற புள்ளிகள் கணக்கில் அவர் வெற்றி பெற்று, சீனாவுக்கு இந்த மேசை பந்து குழுப் போட்டியின் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றார். இம்முறை, ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான தீபத் தொடரோட்டத்தின் தீப ஏந்துபவரான அவர், ஊனமுற்றோர் நண்பர்களுடன் இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றார்.
மிகவும் மகிழ்ச்சியாகவும் பதட்டமாக இருக்கின்றேன். எனது சக மாணவர்கள், நண்பர்கள், ஊனமுற்றோர் நண்பர்கள் ஆகியோர் தொலைபேசி மூலம் என்னை அழைத்து, அல்லது குறுந்தகவல்களை அனுப்பி, எனக்கு ஊக்கம் அளிக்கின்றனர். தீபத் தொடரோட்டத்தின் முதல் கட்டத்தை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் என்னிடம் விருப்பம் தெரிவித்தனர் என்றார் அவர்.
கடந்த 20க்கு அதிகமான ஆண்டுகளில், பல சர்வதேச மகளிர் மேசை பந்து போட்டிகளில் அவர் பல பதக்கங்களைப் பெற்றார். தவிர, மகளிருக்கான சீனத் தேசிய மற்றும் ஹு பெய் மாநில ஊனமுற்றோர் மேசை பந்து சாம்பியன் பட்டங்களைப் பெற்றார். விடா முயற்சியுடன் போராடி, தாய்நாட்டுக்கு புகழைத் தட்டிச்சென்ற அவரது

முயற்சி பலரை கவர்ந்துள்ளது. ஹு பெய் மாநில உழைப்பாளரின் முன் மாதிரி, வூ ஹான் நகரின் பெண் உழைப்பாளரின் முன் மாதிரி முதலிய புகழ்களை அவர் பெற்றார். தற்போது, வயது, காயத்தால் ஏற்பட்ட வலி முதலிய காரணங்களால், அவர் அதிகாரப்பூர்வ விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால், தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம், பெய்ஜிங் ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டியைக் கண்டுகளித்து, தனது ஊனமுற்ற நண்பர்களுக்கு ஊக்கம் அளிக்கப் போவதாக அவர் கூறினார்.
கடந்த 4 ஆண்டு கால முயற்சியுடன், அவர்கள் இப்போட்டியில் சிறந்த சாதனை பெற வாழ்த்துகின்றேன். தத்தமது சிறந்த நிலைமையைக்காட்டி தாய்நாட்டுக்கும் ஊனமுற்றோருக்கு அவர்கள் புகழ் சேர்க்க வேண்டும் என்றார் அவர்.
ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டியை அனுபவிக்கும் அதேவேளையில், மென்மே அதிகமான ஊனமுற்ற நண்பர்கள் விளையாட்டுக்களில் பங்கெடுத்து போட்டிகளிலிருந்து மகிழ்ச்சியையும் உடல் நலத்தையும் பெற வேண்டும் என்றும் அவர் விரும்புகின்றார்.
ஊனமுற்றோர் நண்பர்கள் அனைவரும் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். ஏனென்றால், விளையாட்டுக்கள் அனைத்தும், ஊனமுற்றோர்களின் உடல் நலத்துக்கு நன்மை பயக்கும். இது மட்டுமல்ல, அவர்களது உள நலத்துக்கும் துணை புரியும் என்றார் அவர்.