• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-26 09:53:14    
ஒலிம்பிக் பரிசளிப்பு நடைமுறைகளுக்கான அழகான தொண்டர்

cri

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், பரிசளிப்பு விழா, பதக்கம் வென்ற வீரர்களை பெருமை அடையச் செய்து, ரசிகர்களுக்கு உற்சாகமளித்து, விளையாட்டுப் போட்டியின் பேரெழுச்சியை முன்னேற்றும். அத்துடன், பரிசளிப்பு விழா, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் நாடு, தனது தேசிய பண்பாடு, தேசிய இன ஆடை, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நாகரிகம் மற்றும் இங்கிதங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் முக்கிய அரங்காகவும் திகழ்கிறது. அதற்கு சேவை புரியும் இளம் பெண்கள் ரசிகர்களின் பார்வையை ஈர்க்கும் வகையில் கண்கவர காட்சியளிப்பது இயல்பே.
அண்மையில், பெய்ஜிங்கிலுள்ள ஒரு தொழில்முறை பள்ளியில், ஒலிம்பிக் பரிசளிப்பு நடைமுறைகளுக்கான 300க்கு மேற்பட்ட தொண்டர்கள் ஒன்று கூடி பயிற்சி பெற்றனர். அவர்கள், நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு நேரடியாக சேவை புரியும் 70 ஆயிரம் தொண்டர்களில் 4 முறை தெரிவுகளுக்குப் பின் உறுதிப்படுத்தப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் "நூறு பேரில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைசிறந்த ஒருவர்" என கூறலாம்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 300க்கு அதிகமான பரிசளிப்பு விழாக்களும், ஊனமுற்றோர் விளையாட்டுப் போட்டியில் 400க்கு மேற்பட்ட பரிசளிப்பு விழாக்களும் நடைபெறும். அந்த விழாக்களில், பரிசளிக்கும் மதிப்புக்குரிய விருந்தினருக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் வழிகாட்டுவது, பதக்கம் மற்றும் மலர் கொத்துகளை வழங்குவது ஆகிய பணிகளுக்கு அழகான இந்த இளம் பெண்கள் பொறுப்பேற்கின்றனர். அப்போது அவர்கள் சீனப் பண்பாடுடைய ஆடையை அணிந்து, நல்ல உடல் தோற்றம் மற்றும் இனிமையான புன்னகையுடன், கீழை நாட்டு பெண்களின் இயல்பான மனப்பாங்கையும் நளினமான நடத்தையையும் வெளிப்படுத்துகின்றனர்.

கீழை நாட்டு அழகு வரையறைக்குப் பொருந்திய அவர்கள் முழுமையான பயிற்சிகளைப் பெற வேண்டும். அவர்களின் உடல் நிலை மற்றும் சகிப்புத் தன்மை பற்றிய கண்டிப்பான சோதனை இதுவாகும்.
பரிசளிப்பு நடைமுறைகளுக்கான தொண்டர்கள் அடிப்படை நுட்பங்களிலிருந்து பயிற்சி பெற வேண்டும். எதிர்பாராதவாறு, பட்டு காலுறைகள் எளிதில் பாழடைந்த பொருட்களாக மாறின. தொண்டர் பெங் ஸ் லூ கூறியதாவது—
"உயர் குதிகால் காலணி அணிந்து பல மணி நேரம் நிற்க வேண்டும். இடையில் ஓய்வு பெற 3 நிமிடங்கள் மட்டுமே கிடைக்கும். பயிற்சி பெற்ற போது பட்டு காலுறைகளை அணிந்து, இடைவிடாமல் நடந்து செல்வதால், சில பைகளில் காலுறைகளைக் கொண்டு வர வேண்டும். ஒரு நாள் மட்டும் இரண்டு அல்லது மூன்று ஜோடி காலுறைகள் பாழடையும்" என்றார் அவர்.

இவ்விளம் பெண்கள் வார நாட்களில் சோர்வு அடையாமல் தங்களுடைய பயிற்சியை அதிகரிக்கின்றனர். தொண்டர் சியு சுயெ லுன் செய்தியாளரிடம் பேசுகையில், மிக அழகான புன்னகையைக் கண்டறியும் வகையில், பயிற்சியின் போது இரண்டு பேர் ஒரு குழுவாக மாறி, ஒருவர் முகத்துக்கு நேரே மற்றவர் முகம் பார்த்தபடி புன்னகை புரிய பயிற்சி செய்கின்றனர் என்று கூறினார். எப்போது உங்கள் புன்னகை அழகாக இருக்கிறது, எத்தகைய செயல்களைத் தவிர்க்க வேண்டும் என இருவரில் ஒருவர் மற்றவருக்கு கூறுவார். இப்படி ஒன்று கூடி பயிற்சி பெறும் வாழ்க்கை கடினமாக இருந்த போதிலும், தொண்டர்கள் உருவாக்கிய நட்புறவு அருமையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்விளம் பெண்கள் கண்டிப்பான பயிற்சியில் நட்புறவை உணர்ந்து, விளையாட்டுத் திடலில் அழகை வெளிப்படுத்துகின்றனர். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு முன் நடைபெற்ற பல சோதனைப் போட்டிகளில் அவர்களின் செயல்பாடு பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சர்வதேச நீச்சல் கூட்டமைப்பின் துணைத் தலைவர் Dale Neuburger கூறியதாவது—
"அவர்கள், தங்களையும், அவர்களின் குடும்பங்கள் மற்றும் நாட்டையும் செவ்வனே வெளிப்படுத்தியுள்ளனர்" என்றார் அவர்.