• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-09-29 19:39:34    
எகிப்து செய்தியாளர்களின் பார்வையில் சீனா

cri
பெய்ஜிங் ஒலிம்பிக் மற்றும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைப் பேட்டி காண கடந்த சில நாட்களில் பல்வேறு நாடுகளின் ஆயிரக்கணக்கான செய்தியாளர்கள் சீனாவுக்கு வந்துள்ளனர். சீனாவுடன் பாரம்பரிய நட்பு ஒத்துழைப்புறவைக் கொண்ட எகிப்தின் செய்தி ஊடகங்கள் பல செய்தியாளர் குழுக்களை சீனாவுக்கு அனுப்பின. இன்றைய நிகழ்ச்சியில், எகிப்து செய்தியாளர்களின் பார்வையில் சீனா பற்றி கூறுகின்றோம்.
எகிப்து இளைஞர் விளையாட்டு வானொலியும் Nile விளையாட்டுத் தொலைக்காட்சி நிலையமும் எகிப்து நாட்டில், விளையாட்டுப் போட்டிகள் பற்றி அறிவிக்கும் 2 முக்கிய வாரியங்களாகும். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, இவ்விரண்டு செய்தி ஊடகங்கள் செய்தியாளர் குழுக்களை பெய்ஜிங்கிற்கு அனுப்பின. தமது இயக்குனர்கள் செய்தி அறிவிப்பை ஒருங்கிணைக்க பெய்ஜிங் வருகை தந்தனர்.
எகிப்து இளைஞர் விளையாட்டு வானொலி இயக்குநர் Suhair Pasha அம்மையார் சீனாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். 130 கோடி மக்கள் தொகை கொண்ட சீனாவிலுள்ள போக்குவரத்து மற்றும் செய்தித் தொடர்பு சேவை பற்றி சீனா வருவதற்கு முன் தாம் கவலைப்பட்டதாக அவர் கூறினார். ஆனால், இந்த வளரும் நாட்டில் நவீன சுற்றுச்சூழலை உணர்ந்ததுடன், இந்தக்கவலை விரைவில் நீங்கியது என்று அவர் கூறினார்.

சாலைகள் எங்கும் நிறைய மக்கள் கூட்டத்தைச் சந்திப்பது உறுதி என்று சீனா வருவதற்கு முன் கவலைப்பட்டிருந்தேன். ஆனால், சீனாவில் நான் கண்ட அகலமான பாதைகளும், வசதியான பேக்குவரத்து நிலைமையும் எனது கவலையை நீக்கின. இங்குள்ள நிலைமை முன்பு நினைந்ததை ஒப்பிட்டு பார்க்கையில் முற்றிலும் வேறுபட்டது. தனது சிந்தனை, விவேகம், மக்கள், நாகரீகம், அறிவியல் தொழில் நுட்பம் முதலியவற்றின் மூலம், சீனா உலகில் புதிய வல்லரசாக மாறிவிடும் என்று நம்புகின்றேன் என்றார் அவர்.
Nile விளையாட்டுத் தொலைக்காட்சி நிலையத்தின் இயக்குநர் Abdul-Fattah Hassanஉம் முதன் முறையாக சீனாவுக்கு வந்தார். மூத்த விளையாட்டுச் செய்தியாளரான அவர் பல நாடுகளுக்குச் சென்று, பல முக்கிய விளையாட்டுப் போட்டிகளைப் பேட்டி கண்டு அறிவித்தார். ஆகையால், பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் ஏற்பாட்டுப் பணியில் அவர் மிகவும் கவனம் செலுத்தினர்.
போட்டிக்கான ஏற்பாட்டுப் பணியை சீனா மிகச் சிறப்பாக மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் கவனமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் ஆராயப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீனாவுக்கு வந்த பிறகு, இதுவரை எந்த குறையையும் நான் கண்டுபிடிக்கவில்லை. பெய்ஜிங் போல உயர் தர ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த விரும்பும் நகரங்களைப் பொறுத்த வரை, இவை எல்லாம் வழிகாட்டல் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றார் அவர்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை சிறப்பாக அறிவிக்கும் வகையில், எகிப்து இளைஞர் வானொலி நிலையம், இவ்வாண்டு ஜுலை திங்களில் சீன வானொலி நிலையத்துடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தும் உடன்படிக்கையில் கையொப்பமிட்டது. உடன்படிக்கையின் படி, எகிப்து தரப்பு சீன வானொலி அரபு மொழி பிரிவு தயாரித்த ஒலிம்பிக் நிகழ்ச்சிகளைப் பயன்படுத்தலாம்.
தவிர, இந்தச் செய்தியாளர் குழு சீனத் தரப்பின் பெரும் ஆதரவுடன் பெய்ஜிங்கில் சுமூகமாக பல்வேறு பேட்டி கடமைகளை நிறைவேற்றியுள்ளது. குறிப்பாக உதவி அளித்த சீன மக்களின் புன்னகை Suhair Pasha அம்மையாரின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.
இங்கே எந்த சிக்கலையும் சந்திக்கவில்லை. பெய்ஜிங்கில் பலர் எங்களுக்கு பேருதவி அளித்துள்ளனர். ஒவ்வொருரின் முகத்திலும் அழகான புன்னகை காணப்படுகின்றது. இதிலிருந்து எங்களுக்கான வரவேற்பும் நட்புறவும் உணரப்படலாம். சீன மக்கள் அமைதியாகவும் நம்பத்தக்கவர்களாகவும் உள்ளனர் என்றார் அவர்.
சீனச் செய்தி ஊடகங்களின் வளர்ச்சியிலும் அவர்கள் கவனம் செலுத்தினர். எகிப்தில் அவர்கள் சீனாவின் வெளிநாட்டு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டறிந்துள்ளனர். அதன் மூலம், கடந்த சில ஆண்டுகளாக சீனச் செய்தி ஊடகங்களின் வேகமான வளர்ச்சியை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சீனப் பயணத்தில் அவர்கள் சீன வானொலி நிலையத்தைச் சுற்றிப்பார்த்தனர்.
சீனாவின் செய்தி ஊடக சேவை உலகில் முன்னேறிய நிலையில் உள்ளது. சீனா தயாரித்த விளையாட்டு, சமூகம், குழந்தை உள்ளிட்ட பல வகை நிகழ்ச்சிகளில் நான் கவனம் செலுத்தியுள்ளேன். நிகழ்ச்சிகள் அனைத்தும் தலைச்சிறந்த தரத்தைக் காட்டுகின்றன என்றார் அவர்.

பெய்ஜிங்கின் வரலாற்று சின்னங்களின் மீது Suhair Pasha அம்மையார் ஆர்வம் காட்டினார். பெருஞ்சுவர், அரண்மனை அருங்காட்சியகம் முதலியவற்றை அவர் பார்வையிட்டார். இந்த கட்டிடங்கள் சீனாவின் வரலாற்றில் வகிக்கும் முக்கியத்துவம் பற்றி சீனா வருவதற்கு முன் பாட நூல்களிலிருந்து அவர் அறிந்து கொண்டார். ஆனால், அவற்றை நேரில் கண்ட போது, அவற்றின் அற்புதத்தை கண்டுணர்ந்து வியப்பு அடைந்தார்.
இந்த வரலாற்றுச் சின்னங்கள் பற்றி சிறப்பாக குறிப்பிட வேண்டும். பண்டை கால அரசர்கள் வசித்த அரண்மனை அருங்காட்சியகத்தின் வடிவம் மிக அழகானது. மல செடிகள் மற்றும் மரங்களின் அணைப்பில் அவை உள்ளன. நவீன சீனச் சமூகத்தில் அவற்றின் அழகு மேலும் சிறப்பாக வெளிக்காட்டப்படுகின்றது என்றார் அவர்.
பயணத்தில் சீனாவின் அற்புதம், சீன மக்களின் நட்புறவு ஆகியவை எகிப்து விருந்தினர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன. சீனாவையும் சீன மக்களையும் மிகவும் விரும்புவதாக Abdul-Fattah Hassan கூறினார்.
பெய்ஜிங்கின் சுற்றுச்சூழல் சிறப்பானது. சீன மக்கள் எங்களை உள்ளார்ந்த அன்போடு உபசரித்தனர். நான் சீனாவில் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். ஆனால் சீன மக்களையும் சீன மண்ணையு ஆழமாக நேசிக்கின்றேன். ஒளிமயமான எதிர்காலம் மீதான சீன மக்களின் எதிர்பார்ப்பையும் உயர்வாக மதிப்பிடுகின்றேன். அருமையான இந்த உணர்வை எகிப்திலுள்ள எனது சக பணியாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் எடுத்து கூறுவேன் என்றார் அவர்.