• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-07 11:00:56    
வான் சோங் லௌ ழென் கோபுரம்

cri

வான் சோங் லௌ ழென் கோபுரம், பெய்ஜிங் மாநகரின் சீ ச்சேங் பிரதேசத்தின் சீ ஸின் தென் பாதையில் அமைந்திருக்கிறது.

15.9 மீட்டர் உயரமுள்ள அது, பெய்ஜிங் மாநகரில் கற்களால் கட்டியமைக்கப்பட்ட ஒரே ஒரு கோபுரமாகும். அதன் கிழக்குப் புறத்திலிருந்து மேற்குப் புறம் வரையான நீளம், 14 மீட்டராகும். அதன் தெற்குப் புறத்திலிருந்து வடக்குப் புறம் வரையான அகலம் 7 மீட்டராகும். 99.3 சதுர மீட்டர் மொத்தப் பரப்பளவு கொண்ட இதில் கட்டிடங்களின் பரப்பளவு 22.5 சதுர மீட்டராகும்.

வான் சோங் முதியோர், வான் சோங் சிங் சியோ புத்தத் துறவி எனவும் அழைக்கப்படுகின்றார். அவர், சின் வம்சக்காலத்தில் ஹெ நை நகரவாசி ஆவார். அவர், சின் மற்றும் யுவான் வம்சக்காலங்களில், புத்த மத பெரியாராவார். தவிர, அவர் ழூ என்ற சீனாவின் பழங்காலக் கல்வியில் தேர்ச்சி பெற்று, பல புகழ்பெற்ற நூல்களை இயற்றியிருக்கிறார்.

81 வயதில், அவர் யியன் சிங்கின் மேற்கு புறநகரிலுள்ள ச்சி யின் கோயிலில் மரணமடைந்தார். அதற்குப் பின், அவரது கல்லறையாக, இக்கோபுரம் கட்டியமைக்கப்பட்டது. முதலில், அது 7 மாடிகளைக் கொண்டிருந்தது. 1753ம் ஆண்டு, அதைச் செப்பனிட்ட போது, 2 மாடிகளைக் கூடுதலாக அதிகரித்து 9 மாடிகளுடைய கோபுரமாக கட்டப்பட்டு தற்போது எழில் மிகு காட்சியளிக்கின்றது.

பிற கோபுரங்களை விட, வேறுபடுகிறது. அது பெய்ஜிங் மாநகரின் பாதையில் ஒரு எழில் மிகு காட்சியாகவும் திகழ்கிறது.