• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-14 08:41:23    
வான் ஷோ கோயில் (அ)

cri

வான் ஷோ கோயில், பெய்ஜிங் மாநகரின் ஹெய் தியன் பிரதேசத்தில் இருக்கிறது. முன்பு, சூ சே கோயில் என அழைக்கப்பட்ட அது, தாங் வம்சக்காலத்தில் கட்டியமைக்கப்பட்டது. 1577ம் ஆண்டு முதல், வான் ஷோ கோயில் என அழைக்கப்படத் துவங்கியது. அது, முக்கியமாக திருமறை நூல்கள் வைக்க பயன்படுத்தப்படுகின்றது. சிங் வம்சக்காலத்தில் ச்சியன் லோ மற்றும் குவாங் சூ பேரரசர்கள் ஆளும் போது, அது புனரமைக்கப்பட்டது.

1985ம் ஆண்டு, பெய்ஜிங் கலை அருங்காட்சியகமாக இது உறுதிப்படுத்தப்பட்டது. மிங் மற்றும் சிங் வம்சக்காலங்களிலான கலைப் பொருட்களால் அது தனிச்சிறப்பை பெற்றுள்ளது.

இதன் பரப்பளவு, 30 ஆயிரம் சதுர மீட்டராகும். இக்கோயில், கிழக்கு, மத்தியம், மேற்கு ஆகிய மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது.

மத்தியப் பகுதியில், பல முக்கியமான கட்டிடங்கள் இருக்கின்றன. முக்கிய வாயிலுக்குள், தியான் வாங் தியன் மண்டபம், தா சியோங் பௌ தியன் மண்டபம், வான் ஷோ கே, தா ச்சான் மண்டபம், வான் ஷோ லோ மாளிகை முதலியவை காணப்படுகின்றன. பல்வேறு மண்டபங்களின் இரு பக்கங்களில், மண்டபங்களும் துணை வீடுகளும் அமைந்திருக்கின்றன.

கிழக்குப் பகுதியில், மடாதிபதி முற்றம் உள்ளிட்ட கட்டிடங்கள், துறவிகள் தங்கியிருக்கும் பிரதேசமாகும்.

மேற்குப் பகுதியிலுள்ள கட்டிடங்கள், சிங் வம்சக்காலத்தில் ஆட்சி புரிந்த ச்சியான் லோ பேரரசர், தங்கியிருந்த இடமாகும்.