• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-22 14:13:32    
வான் ஷோ கோயில் (ஆ)

cri

வான் ஷோ கோயிலின் முக்கிய வாயிலின் இரு பக்கங்களிலுள்ள சுவர்களில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய கற் சிற்பங்கள், காணப்படுகின்றன. அவை, அரிதாக பெறப்பட்ட கலைப் பொருட்களாகும்.

முக்கிய வாயிலில் நுழைந்தவுடன் நமது கண்களின் முன்னால் இருப்பது, தியான் வாங் தியன் மண்டபமாகும். மண்டபத்தின் முன்னால், இடது பக்கத்தில், மணி மாளிகையும், வலது பக்கத்தில் முரசு மாளிகையும் இருக்கின்றன. மணிகளின் மன்னன் என அழைக்கப்படும் யோங் லே மணி, இங்கு தொங்கவிடப்பட்டுள்ளது.

வான் ஷோ கே, கடந்த சில ஆண்டுகளில் புனரமைக்கப்பட்டது.

அதன் பின்புறத்திலுள்ள தா ச்சேன் மண்டபம், மதமறையைக் கற்பிக்கும் இடமாகும்.

அதன் பின்புறத்தில், பொய் மலை தொடர்பு காணப்படுகின்ற கல்லால் ஆன கட்டமைப்புகளும், தேவதாரு மரங்களும், நூறு ஆண்டுக்கு மேலான வருலாறு பெற்றுள்ளன.

இவற்றுக்குப் பின்னால் இருப்பது, வூ லியாங் ஷோ புத்த மண்டபமாகும். அதன் இரு பக்கங்களிலும், baroque கலைகளுடன் கூடிய கதவுகள் காணப்படுகின்றன. அவை, சிங் வம்சக்காலத்தில் சியான் லோ பேரரசர் ஆளும் காலத்தில் கட்டியமைக்கப்பட்டன. அவை, அரசக் குடும்பக் கோயில்களில், தனிச்சிறப்பு வாய்ந்தவை.

2006ம் ஆண்டு மே 25ம் நாள், சிங் வம்சக்கால கட்டிடமான, வான் ஷோ கோயில், சீன அரசவையால் சீனாவின் 6வது தொகுதி முக்கிய பாதுகாப்புப் பிரிவான தொல்பொருட்களுக்குள் சேர்க்கப்பட்டுள்ளது.