• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-29 15:49:04    
பெய்ஜிங் முரசு மாளிகை

cri

பெய்ஜிங் முரசு மாளிகை, மாநகரின் நடுப்பகுதியில் உள்ளது. பெய்ஜிங்கின் தோங் ச்சேன் பிரதேசத்தில் தி ஆன் மென் செல்லும் பாதையில் இது அமைந்திருக்கிறது. 1420ம் ஆண்டு, கட்டப்பட்டு, 1800ம் ஆண்டு புனரமைக்கப்பட்டது. பெய்ஜிங் முரசு மாளிகை, மணி மாளிகையுடன் இணைந்து, யுவான், மிங், சிங் வம்சக்காலங்களில் முழு பெய்ஜிங்குக்கும் சரியான மணிநேரத்தை அறிவித்தது.

முரசு மாளிகை, மரத்தால் கட்டியமைக்கப்பட்ட பழங்காலக் கட்டிடமாகும். அது, சுமார் 4 மீட்டர் உயரமான கல் மேடையில் அமைந்திருக்கிறது. அதன் மொத்த அகலம் 56 மீட்டராகும். மொத்த ஆழம் 33 மீட்டரையும் கொண்டுள்ளது. மொத்த பரப்பளவு சுமார் 7000 சதுர மீட்டரும், தெற்கு வாயிலுக்கு முன், இரட்டை கற் சிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் உயரம், சுமார் 1.25 மீட்டராகும்.

அங்குள்ள முரசுகள், மாளிகையின் இரண்டாம் மாடியில் வைக்கப்பட்டுள்ளன. பழங்காலத்தில் இங்கு 25 முரசுகள் இருந்ததாகும். ஆனால், இப்போது, இங்கு ஒரே ஒரு முரசு மட்டுமே உள்ளது. இந்த முரசின் அடிப்பகுதி விட்டம், சுமார் 1.5 மீட்டராகும். அது, ஒரு ஆட்டின் தோலால் தயாரிக்கப்பட்டது.

பழங்காலத்தில் முரசு மாளிகையில், அதை அடிப்பதற்கு, விதிகள் இருந்தன. ஒவ்வொரு நாள் இரவு 7 மணி முதல், அடுத்த நாள் 5 மணி வரை, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை 108 தடவை முரசை அடிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தது.