• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-07 10:57:58    
நேயர்களின் கருத்துக்கள்

cri

கலை: வணக்கம் நேயர்களே. நேயர் நேரம் நிகழ்ச்சியின் மூலம் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சியடைகிறோம். இன்று சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட நாள், சீனாவின் 59வது தேசிய நாள். சீன மக்களின் எழுச்சியையும், உன்னத லட்சியத்தையும், அடையாளப்படுத்தும் இந்த நாளில் எமது பணிக்கு ஆதராவாய் நிற்கும் நேயர் நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவித்து மகிழ்கிறோம்.
க்ளீட்டஸ்: நாளை அக்டோபர் இரண்டு இந்திய நாட்டின் தேசத்தந்தை என்று போற்றப்படும் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள். அமைதி வழியில் போராட்டத்தை மேற்கொண்டு உலகை திரும்பிப் பார்க்கச் செய்த அந்த மாமனிதரின் பிறந்த நாளில், உலகில் அமைதியும், மனித நேயமும் தழைக்க இறைஞ்சுவோம்.
கடிதப்பகுதி:
கலை: மணச்சநல்லூர் ந. சண்முகம் எழுதிய கடிதம். 160க்கு மேற்பட்ட நாடுகளில், 3150 க்கு மேற்பட்ட வானொலி நேயர் மன்றங்கள், ஆண்டுக்கு 21 லட்சம் கடிதங்கள் என்ற சாதனையை கொண்ட சீன வானொலியில், தமிழ்ப்பிரிவு 132 மன்றங்களையும், ஆண்டுக்கு 5 லட்சம் கடிதங்களையும் பெறுகின்றது என்பதை அறிய பெருமையாக இருக்கிறது. தலைசிறந்த நேயர், தலைசிறந்த பணியாளர் ஆகிய பெருமைகளையும் தமிழ்ப்பிரிவு பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். தமிழ்ப்பிரிவின் சாதனைகள் தொடரட்டும்.

க்ளீட்டஸ்: புதுக்கோட்டை ம. கிருஷ்ணமூர்த்தி எழுதிய கடிதம். இந்திய தொலைக்காட்சியில், புதிதாக தந்துள்ள டி.டி.எச் எனும் நேரடி செயற்கைக்கோள் இணைப்பு வசதியின் மூலமாக சீனாவின் மத்திய தொலைக்காட்சி நிலையம் CCTVயின் ஒளிபரப்பை பார்த்து பல விடயங்களை அறிய முடிகிறது. சீன வானொலி அனுப்பும் பெய்ஜிங் ரெவ்யூவில் இடம்பெறும் படங்கள் மற்றும் செய்திகளை, CCTV தொலைக்காட்சியில் காணமுடிகிறது. வடகொரிய பிரச்சனை தொடர்பாக சீனா மேற்கொள்ளும் முயற்சிகள் பலனடையும் பெருமை சீனாவையே சாரும் என்பது உண்மை.
கலை: இலங்கை காத்தான்குடி ஏ. எஃஃப். ஷிஃப்னா எழுதிய கடிதம். மனதை துள்ளவைக்கும் நிகழ்ச்சிகளை வழங்கும் சீன வானொலியை கேட்டு நான் பயனடைந்து வருகிறேன். உணவு அரங்கம் நிகழ்ச்சியை இல்லதரசிகளுக்கு உதவக்கூடியதய் அமைத்து, உடல் நலத்துக்கு தேவையான நல்ல உணவு வகைகளை பற்றி அறியத்தருவது சிறப்பு.
க்ளீட்டஸ்: கவிநிலா சீன வானொலி நேயர் மன்றத்தினர் அனுப்பிய ஜூலை திங்களில் நடைபெற்ற கூட்டம் பற்றிய அறிக்கை.
1. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவ்ர்களுக்கு ஆறுதல் கூறியும், மீட்பு மற்றும் புனரமைப்புப் பணிகளை விரைவாக மேற்கொண்ட சீன அரசுக்கு பாராட்டு கூறியும் தீர்மான நிறைவேற்றப்பட்டது.
2. பெய்சிங் ஒலிம்பிக் போட்டிக்கும், சீன வானொலி நடத்தும் அழகாஅ குவாங்சி எனும் பொது அறிவுப்போட்டிக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
3. பொது அறிவுப்போட்டிக்கான விடைத்தாள் சேகரித்து அனுப்புவது பற்றி விவாதிக்கப்பட்டது.

கலை: இலங்கை காத்தான்குடி ஏ. ஆர். தஸ்பீனா எழுதிய கடிதம். சீன வானொலியின் நேயராக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சீனாவை பற்றி அதிகம் தெரிந்துகொள்ளாதவர்களுக்கு சீன வரலாற்றை தொகுத்து அளிக்கும் சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சியும், சீனாவில் இன்பப்பயணம், சீனப் பண்பாடு ஆகிய நிகழ்ச்சிகளும் பெரிதும் உதவுகின்றன. அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வுப் பாதுகாப்பு சிறப்பான தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது. வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சியிலான தகவல்கள் மறு ஒலிபரப்பு செய்யப்படத்தக்கவை.
க்ளீட்டஸ்: நட்புப்பாலம் நிகழ்ச்சி குறித்து கீழ்குந்தா கே. கே. போஜன் எழுதிய கடிதம். ராணி வார இதழின் ஆசிரியாராக இருந்து ஓய்வு பெற்ற திரு. மாரிசாமி அவரது மனைவியாருடன் சீனப் பயணம் மேற்கொண்டது பற்றி கலையரசி மற்றும் தமிழன்பன் அவர்களுடனான பேட்டியில் தெரிவித்தார். சீன மொழி தெரியாத நிலையிலும் ஆங்கிலம் தெரிந்த ஒருவரின் துணையோடு சீனாவை சுற்றிப்பார்த்தை குறிப்பிட்டார். மேலும் சிறியதா பெரியதா என்று பார்க்காமல் உணவருந்த எல்லா ஹோட்டல்களுக்கும் செல்லும் பழக்கம் கொண்டுள்ளதை ஒரு ஆலோசனையாக கூறி, நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த வழி கூறினார். எந்த நாட்டிற்கு சென்றாலும் அந்த நாட்டு மக்களையும், பண்பாட்டையும், உணவு வகைகளையும் அறிந்துகொள்ள அவரது இந்த யோசனை உதவும். சீனாவில் சிறிய ஹோட்டலோ, குறுவீதியோ எதுவாக இருப்பினும் சுத்தமாக வைத்திருப்பதை அவர் குறிப்பிட்டார். நேயர்களாகிய நாம் கூட, நம்மை சுற்றியுள்ள இடங்களை அப்படி சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். யார் இதை செய்தவர்கள் என்று கேட்கும்போது சீன வானொலி நேயர்கள் என்று மற்றவர் கூறும்படி நாம் செய்யவேண்டும்.

மின்னஞ்சல் பகுதி:
......மதுரை-9 S. பாண்டியராஜன்......
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பற்றிய செய்திகளை சீன வானொலி தமிழ்ப்பிரிவுக்கு விரிவாக நழங்கியது. சீன அணி பதக்கப்பட்டியலில் முதலிடம் பெற்றதற்கு எமது பாராட்டுக்கள். செய்திகளை, விரிவாக வழங்கிய தமிழ்ப்பிரிவின் பணியாளர்கள் அனைவருக்கும் நேயர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்
……வளவனுர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்……
செப்டம்பர் திங்கள் 23 ஆம் நாள் இடம்பெற்ற •செய்தித் தொகுப்பு• நிகழ்ச்சியில், •சீனாவின் நின்ஷியா ஹுய் பிரதேசம் நிறுவப்பட்டதன் பொன்விழா• என்ற கட்டுரையைக் கேட்டேன். கடந்த 50 ஆண்டுகளில் இப்பிரதேசம், பல்வேறு முயற்சிகளின் காரணமாக எத்தகைய மாபெரும் மாற்றத்தை அடைந்துள்ளது என்பதை இக்கட்டுரையின் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. ஒருகாலத்தில் பின்தங்கியிருந்த இப்பிரதேசத்தின் அனைத்து கிராமங்களிலும் தற்போது அனைத்து நவீன வசதிகளும் அமைப்பட்டதிலிருந்து, இதன் வளர்ச்சியை, செழிப்பை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஐம்பதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நின்ஷியா ஹுய் இன தன்னாட்சிப் பிரதேசத்திற்கு என் அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

。。காளியப்பம் பாளையம் க.ராகம் பழனியப்பன்。。。
ஆகஸ்ட் 19ம் நாளன்று வடகிழக்கு சீனாவின் ஏ ரக சுரங்க தொடர் வண்டி சேவை பற்றி கூறப்பட்டது. 2500 பேர் பயணம் செய்யக்கூடிய இந்தத் தொடர்வண்டி சேவை உலகின் முன்னோடி திட்டம் ஆகும் பாராட்டுக்கள்.
சர்வதேச தமிழ்ப்பணி மன்றம், பொன் ஏழிசை வல்லபி
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுச் செய்திகள் பகுதியை தொடர்ந்து கேட்டு வருகின்றேன். இப்போட்டியில் பங்கு கொண்டு விளையாட்டு வீரர்கள், தீபத் தொடரோட்டத்தில் பங்கெடுத்தவர்கள், வெளிநாட்டு செய்தியாளர்கள் என பல்வேறு தகவல்களை இந்த நிகழ்ச்சி மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. இதன் மூலம் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றிய ஒரு சிறந்த கண்ணோட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. ஒலிம்பிக் போட்டிக்காக மட்டுமே துவக்கப்பட்ட நிகழ்ச்சி என்ற போதிலும் இந்த நிகழ்ச்சியை நான் பெரிதும் விரும்புகின்றேன். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நிறைவடைந்தபின்னர், இந்நிகழ்ச்சி நிறுத்தப்பட்டாலும், நீண்ட நாட்களுக்கு இந்நிகழ்ச்சியின் சிறப்பு என் நினைவில் தங்கியிருக்கும்.

வளவனூர், முத்துசிவக்குமரன்
ஒலிம்பிக் போட்டியினை வெற்றிகரமாக நடத்திய பிறகு சீனப் பொருளாதாரம் தொடர்ந்து முன்னேறிய நிலையிலேயே உள்ளது என்ற செய்தி சீன அரசின் கவனமான முன்னேற்பாடுகளுக்கும், தொலை நோக்குப் பார்வையின் திறனுக்கும் நல்ல எடுத்துக்காட்டாகும். அனைவரின் ஒத்துழைப்பாலும் இது சாத்தியப்பட்டது.
அறிவியல் உலகம் பகுதியில் "ஓடியாடி வேலை செய்பவர்களுக்கு புற்று நோய் பாதிப்பு அதிகம் ஏற்படுவதில்லை, உட்கார்ந்து கொண்டு வேலை செய்பவர்களை பாதிப்பது சற்றுக் கூடுதலாக இருப்பது என்பது காலையிலிருந்து மாலை வரை ஓரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களுக்கு கவலை அளிக்கக் கூடியது தான். இதனை நிவர்த்தி செய்ய அவர்கள் தனியான உடற்பயிற்சிகள் செய்தால் சமன்பாடு அடையலாம்.
......முனுகப்பட்டு.பி.கண்ணன்சேகர்......
" இந்தியாவின் கொல்கத்தாவில் சீனத் துணைத் தூதரகம், தொடங்கப்பட்டதை அறிந்து கொண்டேன். இந்த தொடக்க விழாவில் சீன வெளியுறவு அமைச்சர் யாங் ச்சியே ச்சு, இந்திய மேற்கு வங்க மாநில ஆளுநர் கோபாலகிருஷ்ணகாந்தி, மற்றும் உள்ளூரிலுள்ள பல்வேறு துறையினர், அங்கு வாழ்கின்ற சீனர்களின் பிரதிநிதிகள் ஆகியோர்,கலந்து கொண்டது சிற‌ப்புகுறிய‌தாகும்.
இது சீன-இந்திய உறவுக்கு புதிய வேகம் தரும் என்று யாங் ச்சே ச்சி தமது உரையில் கூறிய‌து ம‌கிழ்ச்சியான‌ செய்தியாகும்.
……தென்பொன்முடி தெ.நா.மணிகண்டன்……
நமது நிகழ்ச்சிகளில் அழகான குவாங்சி எனும் பொது அறிவுப் போட்டிக்கான இரண்டாவது கட்டுரையை கேட்டேன். இந்த கட்டுரைகள் மூலம் குவாங்சி மாநிலத்தின் அழகை பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.

.....பாண்டிச்சேரி ஜி. ராஜகோபால்......
செவிப்புலன்ற்ற சிங் குயின் அம்மையார் பற்றிய சீன மகளிர் நிகழ்ச்சியை கேட்டு ரசித்தேன். செவித்திறனற்ற ஆசிரியராக பணியில் இணைந்து, செவிப்புலனற்ற, வாய் பேசமுடியாத குழந்தைகளிடம் அன்பு செலுத்தி, அவர்களுக்கு தன்னம்பிகையை ஊட்டி கல்விப்பணி செய்து வரும் அவர் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர். உன்னதமான, புதிய செய்தித் தகவல்கள் அனைத்தையும் நேயர்களான எங்களுக்கு அளித்து வரும் சீன வானொலிக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்!
......ஊட்டி; எஸ்.கே.சுரேந்திரன்......
செய்தித்தொகுப்பு நிகழ்ச்சியில் பெய்சிங் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றி கேட்டேன். உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர், பெய்சிங் பாராலிம்பிக் போட்டியின் அமைப்புப் பணியை வெகுவாக பாராட்டியதை அறிந்து மகிழ்ந்தேன்.
நடப்புப் போட்டியில் மொத்தம் 6000ற்கும் அதிகமான சீன மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்கள் இப்போட்டியை பற்றி அறிவிப்பதையும், இவ்வெண்ணிக்கை பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் வரலாற்றில் மிக அதிகமானது என்பதையும், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியுடன் ஒப்பிடும் போது பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மீதான‌ மக்களின் ஆர்வம் சம நிலையில் காணப்படுகிறது என்பதையும் இந்த நிக‌ழ்ச்சியின் மூலம் அறிந்து கொண்டேன்.