• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-08 08:45:25    
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பிந்திய பெய்ஜிங் பொருளாதார வளர்ச்சியின் மீதான முழு நம்பிக்கை

cri

பெய்ஜிங் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இனிதே முடிவடைந்தன. இவ்விரண்டு விளையாட்டுப் போட்டிகளை நேரில் பார்க்க கடந்த 2 திங்களில் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் சீனா வந்துள்ளனர். அழகான பெய்ஜிங், அன்பான சீன மக்கள் ஆகியவை அவர்களின் மனதில் இனிமையாக பதிந்துள்ளன. தவிர, கடந்த சில ஆண்டுகளில் மென்மேலும் அதிகமான வெளிநாட்டவர்கள் சர்வதேச மயமாக்க பெய்ஜிங் மாநகரில் தனது தொழில்களை வளர்ப்பதென முடிவு செய்துள்ளனர். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, அவர்களும் சீன மக்களும் இணைந்து இம்மாபெரும் விழா கொண்டு வரும் மகிழ்ச்சியையும் செழுமையையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பிந்திய பெய்ஜிங் பொருளாதார வளர்ச்சியின் மீது அவர்கள் முழு நம்பிக்கை கொண்டுள்ளனர். இன்றைய நிகழ்ச்சியில் இது பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம்.

Michel Sutyadi என்பவர் ஜெர்மனியைச் சேர்ந்தவராவார். 5 ஆண்டுகளுக்கு முன் அவர் பெய்ஜிங் வந்தடைந்தார். ஒரு விளம்பர கூட்டு நிறுவனத்தில் அவர் வடிவமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த ஆண்டு ஒரு சிறிய கடையை ஆரம்பித்து நடத்தத் துவங்கினார். இக்கடையில், தான் வடிமைத்த சில பொருட்களை அவர் விற்பனை செய்கின்றார். அவற்றில் பெய்ஜிங் பாரம்பரிய சின்னம் அச்சிடப்பட்ட டி-சர்ட் மிகவும் வரவேற்கப்பட்டது.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் அவரது கடையில் பொருட்களை வாங்கினர். Michel Sutyadi வடிவமைத்த டி-சர்ட் மூலம், பெய்ஜிங் மாநகரம் பற்றி அவர்கள் ஓரளவு அறிந்து கொண்டனர். மேலும், இந்த டி சர்ட்டுகள் பண்பாட்டு மரபுச் செல்வங்களைப் பாதுகாக்கும் கருத்தைப் பிரச்சாரம் செய்கின்றன. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பிந்திய சந்தை மீது Michel Sutyadi முழு நம்பிக்கை கொண்டுள்ளார்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியிலிருந்து நாம் நன்மை பெற்றுள்ளோம். எடுத்துக்காட்டாக, புதிய அடிப்படை வசதிகள், புதிய சுரங்க இருப்புப்பாதை, புதிய விளையாட்டு அரங்குகள் மற்றும் திடல்கள் முதலியவை பெய்ஜிங்கில் வசிக்கும் மக்களுக்கு மேலும் வசதி அளித்துள்ளன. இப்போட்டிக்குப் பின், பெய்ஜிங் மாநகரம் மக்கள் வாழ்க்கைக்கு மேலும் பொருந்திய ஒரு பகுதியாக மாறும். அதேவேளையில், சுற்றுச்சூழல் பிரச்சினையைத் தீர்க்கவும் பெய்ஜிங் மாநகரை சர்வதேச மயமாக்கவும் இங்குள்ள மக்கள் பாடுபட்டு வருகின்றனர். ஆகையால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பின், பெய்ஜிங் மாநகரம் மேலும் சிறப்பாக வளரும் என்று கருதுகின்றேன் என்றார் அவர்.
தயா சங்கர் என்ற இந்தியர் பெய்ஜிங்கில் 10 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றார். சீனா தனது 2வது தாய்நாடாகும் என்று அவர் கூறினார். Michel Sutyadi டி-சர்ட் மூலம் சீனப் பாரம்பரிய பண்பாட்டை பிரச்சாரம் செய்கின்றார். இந்திய உணவகம் மூலம் சீன நண்பர்களுக்கு இந்தியாவின் உணவு வகைகளையும் பண்பாட்டையும் அறிமுகப்படுத்த தயா விரும்புகின்றார்.

சீனப் பொது மக்களுக்கு சேவை புரிந்து அவர்களுக்கு இந்திய உணவு வகைகளைத் தயாரித்து அளிப்பதன் மூலம், இந்திய உணவு வகைகளை அவர்கள் ருசிப்பார்க்க வைக்க வேண்டுமென்பது எனது நோக்கமாகும். ஆகையால், எனது உணவகம் CBD போன்ற வணிக மையத்துக்கு அப்பாலுள்ள குடியிருப்புப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டது. நாள்தோறும் எனது விருந்தினர்களுக்கு இந்திய உணவு வகைகளையும் இந்தியப் பண்பாட்டையும் அறிமுகப்படுத்துகின்றேன் என்றார் அவர்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பின், மக்களின் பார்வை மேலும் விரிவாக்கி, மேலும் அதிக வகையான பண்பாடுகளை ஏற்றுக்கொள்வர் என்று தயா சங்கர்நம்பிக்கை தெரிவித்தார். நீண்டகாலமாக தனது கருத்தில் தயா ஊன்றி நிற்கின்றார். மசாலாவின் சுவை என்ற தனது உணவகம் பெய்ஜிங்கில் மென்மேலும் புகழ் பெற்றுள்ளது. சீனாவிலுள்ள சந்தை மீது அவர் நம்பிக்கை கொண்டு, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பின் மேலும் வளர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
எனது உணவகத்தை விரிவாக்க விரும்புகின்றேன். எனக்குப் போதிய ஆற்றல் மற்றும் மனித வளம் உண்டு. திட்டப்படி செயல்படுவேன் என்றார் அவர்.
ஹாங்காங்கில் பிறந்து வளர்ந்த zhou jing tai என்பவர் தென் கொரியாவைச் சேர்ந்த மனைவியுடன் பெய்ஜிங்கில் ஒரு கொரிய உணவகத்தை நடத்துகின்றார். இவ்வுணவகம் பாரம்பரிய ஹு துங் என்ற குறுவீதியில் அமைந்துள்ளது. சிறுவயதிலேயே மேலை நாட்டு நாகரிகக் கல்வி பெற்ற zhou jing tai, பெய்ஜிங் மாநகரத்தை மிகவும் விரும்புகின்றார். ஆகையால், இங்கே தொழில் நடத்த அவர் முடிவு செய்தார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தியது என்பது நாங்கள் இந்நகரைத் தேர்ந்தெடுக்கும் காரணங்களில் ஒன்றாகும். இது மட்டுமல்ல, பெய்ஜிங் மாநகரை மிகவும் விரும்புகின்றோம். இந்த மாநகரில் சீனப் பண்பாட்டை அறிந்து கொண்டுள்ளோம். தவிர, இங்கே பல வளர்ச்சி வாய்ப்புகள் கிடைக்கலாம். என்னைப் பொறுத்த வரை, இவை எல்லாம் மகிழ்ச்சி தரும் விடயங்களாகும் என்றார் அவர்.
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, zhou jing taiஇன் உணவகம் நாள்தோறும் அதிக விருந்தினர்களை வரவேற்றது. இப்போட்டிக்குப் பிந்திய நிலைமை மீது அவரும் நம்பிக்கை கொண்டுள்ளார்.
பலர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மூலம் பெய்ஜிங் பற்றி அறிந்து கொண்டுள்ளனர். சீனா அவர்களில் பெரும்பாலானோரின் மனதில் சிறப்பாகப் பதிந்துள்ளது. மீண்டும் சீனா வர வேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவித்தனர். தவிர, அவர்கள் வீடு திரும்பிய பின், அவர்களது நண்பர்கள், குடும்பத்தினர்கள் முதலியோரிடம் சீனா பற்றியும் சீனாவிலான அனுபவம் பற்றியும் எடுத்து கூறுவர். ஆகையால், தொலைநோக்கு பார்வையில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எனது உணவகத்துக்கு மட்டுமல்ல, முழு நாட்டுக்கும் ஆக்கப்பூர்வ செல்வாக்குக் கொண்டு வரும் என்று கருதுகின்றேன் என்றார் அவர்.