• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-10-09 13:47:47    
பெய்ஜிங்கின் zi yun xuan என்னும் தேனீர் விடுதி

cri
முதல் முறையாக சீனாவுக்கு வரும் வெளிநாட்டவர்களைப் பொறுத்தவரை, பாரம்பரிய சீன உணவு வகைகளை ஏற்றுக்கொள்வதற்கு, சற்று கால அவகாசம் தேவைப்படுகிறது. பாரம்பரிய சீன உணவுவகைகள் அவர்களுக்கு முழுமையாக பொருந்துவதில்லை.

ஆனால், சீன உணவு வகைகளின் மீது நல்லுணர்வு கொள்ளும் வெளிநாட்டு நண்பர்கள், புதிய ரக சீன உணவு வகைகளைச் சுவைப்பார்க்கலாம். இவை, சீன வறுவல்களை அடிப்படையாக கொண்டு, மேலை நாட்டு உணவு வகைகளின் தயாரிப்பு வழிமுறைகளைப் பயன்படுத்தி சமைக்கும் உணவு வகைகளாகும். பெய்ஜிங்கில் இத்தகைய உணவகங்கள் மிகவும் அதிகம். இதில், jasmine என்னும் உணவகம், zi yun xuan என்னும் தேனீர் விடுதி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

புதிய ரக சீன உணவு வகைகளை நன்றாக தயாரிக்கும் மற்றொரு உணவகம், Zi yun xuan ஆகும். அதன் உரிமையாளர் Jin er என்பவர், நாட்டுப்புற இசைக்கருவி இசைக்கும் கலைஞர். வெளிநாடுகளில் பல முறை இசை விழாக்கள் நடத்தினார். அவருக்கு சீனாவின் பாரம்பரிய பண்பாடு மிகவும் பிடிக்கிறது. புதிய ரக சீன உணவு வகைகள் பற்றிய கருத்தில், அவர் பாரம்பரிய பண்பாட்டின் உள்ளடகங்களை முக்கியமாக வலியுறுத்தினார். பச்சை தேயிலை தாம்புலின் என்னும்

வறுவல், கலை உணர்வு நிறைந்த உணவு வகையாகும். அவர் கூறியதாவது:
தாம்புலின் என்பது, சீனாவில் பாரம்பரிய மிக்க உணவு பொருளாகும். எனக்கு மிகவும் பிடிக்கும். இதை, குடும்பத்தின் ஒற்றுமையை அடையாளப்படுத்தி, அனைத்து சீனப்பண்பாட்டையும் சேர்த்து வைக்கும் ஒரு உணவு பொருளாக கருதுகின்றேன். நாங்கள் இந்தத் தாம்புலினின் உள்ளே பச்சை தேயிலையை சேர்த்துள்ளோம் என்றார் அவர்.

Zi yun xuan என்னும் உணவகம், தொடக்கத்தில் ஒரு தேனீர் விடுதியாகும். இதனால், தேனீர் இங்கு மிக முக்கியமாக வழங்கப்படுகிறது. ஒரு வகை கைவினை தொழில் மூலம் தயாரிக்கப்படும் தேயிலை கலந்த சிறப்பு தேனீர், அதன் தனிச்சிறப்பியல்பு ஆகும். இது பற்றி, உரிமையாளர் Jin er கூறியதாவது:
வசந்த நாட்காட்டியின் படி, சிங்மிங் பண்டிகைக்கு முன் விளைந்த தேயிலை பயன்படுத்தி, இந்த சிறப்பு தேனீர் தயாரிக்கின்றோம். பசுமையான மூங்கில் இலை,

ரோஜா மலர், எலும்பிச்சை இலை முதலியவற்றை தேனீரில் சேர்க்கப்படுகின்றன என்றார் அவர்.
Zi yun xuanனில், ஒவ்வொரு வறுவலும் தனிச்சிறப்பான பெயரால் அழைக்கப்படுகின்றன. இந்த தலைச்சிறந்த சுவையான உணவு வகைகளை உண்ணும் போது, சீனாவின் பாரம்பரிய பண்பாடு மற்றும் கலையின் ஈர்ப்பு ஆற்றலை உணர்ந்து கொள்ளலாம்.