Lu Ye அம்மையார் பல்கலைக்கழகப் படிப்பை முடித்த பின், Jiang Su மாநிலத்திலுள்ள Guan Yun மாவட்ட Dou Gou வட்டத்தின் Cao Zhao கிராமத்தின் கட்சிக் கமிட்டியின் துணைச் செயலாளராக வேலை செய்யத் துவங்கினார். அது முதல், அவர் பொது மக்களுக்கு சேவை புரிந்து வருகின்றார். தற்போது, ஓய்வு நேரத்தில் அவர் சுமார் 40 குழந்தைகளுக்கு ஆங்கில மொழி கற்பித்து வருகிறார். Lu Ye அம்மையார், Xu Zhou ஆசிரியர் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றார். பல்கலைக்கழகத்தில் அவர் தலைசிறந்த மதிப்பெண்ணைப் பெற்றிருந்ததால், பெரிய நகரங்களில் வேலைவாய்ப்பை நாடியிருக்க முடியும். ஆனால், படிப்பு முடிந்தவுடன், Jiang Su மாநிலக் கட்சி கமிட்டியின் அமைப்புத்துறை, பல்கலைக்கழக மாணவர்களை கிராம அதிகாரிகளாக தேர்ந்தெடுப்பதை அவர் அறிய வந்தார். அதில் தனது பெயரை அவர் பதிவு செய்தார். பணிக்கு தேர்வு செய்யப்பட்டு, Cao Zhao கிராமத்தின் கட்சிக் கமிட்டியின் துணைச் செயலாளராக நியமிக்கப்ட்டார். இக்கிராமத்தில் சுமார் 5000 மக்கள் வாழ்கின்றனர். மக்களின் வாழ்க்கை நிலை பின்தங்கி உள்ளது. நடைமுறை ஆய்வு மூலம் பார்த்தால், இங்கு நபர்வாரி விளை நிலம் அதிகமில்லை. இளைஞர்களில் பெரும்பாலோர் வெளியூருக்குச் சென்று வேலை செய்கின்றனர். முதியவர்களும், குழந்தைகளும் மட்டுமே கிராமத்தில் தங்கியிருக்கின்றனர் என்று Lu Ye கண்டறிந்தார். கிராமவாசிகளுடன் மேலும் அதிக தொடர்பு கொண்ட போது, தொழில் துறையை வளர்த்தால்தான், அக்கிராமவாசிகள் செல்வமடைய முடியும் என்று அவர் கண்டறிந்தார். தனது கணினி மற்றும் ஆங்கில மொழித் திறனைக் கொண்டு, சுய முயற்சிகள் மேற்கொண்டு, Zhen Jiangயிலிருந்து மரப் பெட்டிகளை உற்பத்தி செய்யும் திட்டப்பணியை அவர் புகுத்தினார். கிராமத்தில் 20க்கு அதிகமான வேலையில்லாமலிருந்த உழைப்பாளர் மரப் பெட்டி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு பெற்று பணி புரிய துவங்கினர். வணிகர்களின் முதலீட்டை உட்புகுத்துவது, நலிந்த குழுவினர்களுக்கு அக்கறை காட்டுவது முதலியவற்றில் Lu Ye அம்மையார் முயற்சி மேற்கொண்டுள்ளார். கிராமக் கல்வியின் பின்தங்கிய நிலையும், கிராமத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றது என்றும், கிராமக் கல்வியில் ஆங்கில மொழி கல்வி தரம் மிகவும் தாழ்வாக இருப்பதையும் ஆய்வு மூலம் அவர் அறிந்தார். ஆங்கில மொழி, மாணவர்கள் வெளி உலகத்தைப் புரிந்து கொள்வதற்கான முக்கிய கருவியாகும். துவக்க பள்ளிக் கல்வி, அடிப்படை கல்வி கட்டத்தில் இருக்கின்றது. மாணவர்கள் ஆங்கில மொழி கல்வியைப் படிப்படியாகக் கைவிட்டு, அதன் மீது வெறுப்புக் கொள்வது, பிற விடயங்களை எதிர்ப்பதற்கு நேரடியாக வழிகாட்டும் என்று அவர் கருதுகின்றார். Xu Zhou ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி துறையிலிருந்து தான் அவர் பட்டம் பெற்றிருக்கிறார். எனவே கிராமப் பள்ளியில் இலவச பாடம் சொல்லிக்கொடுக்கும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அவரது இந்த எண்ணம், அமைப்புத்துறையின் ஆதரவையும் பெற்றது. அவர் Cao Zhao கிராமத்தின் துவக்க பள்ளியின் தன்னார்வ முறையில் பயிற்றுவிக்கும் ஆசிரியராக மாறியுள்ளார். கல்வி, ஒரு கதவு. அந்த கதவைத் திறந்தால்தான், அறிவு என்ற சூரிய ஒளியும் அதன் கனிகள் போன்ற மலர்களும் எங்கும் பரவியுள்ளதை காண முடியும். கல்வி, குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியையும் தர முடியும் என்று Lu Ye அம்மையார் கருதுகின்றார். தனது நகைச்சுவை திறன் வகுப்பில் மாணவர்கள் பாடங்களை மிக எளிதாக புரிந்து கொள்ள செய்கிறார். மாணவர்கள் ஆங்கில மொழியை துணிச்சலுடன் பேசுவதற்கு ஊக்குவிப்பதோடு, அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் அவர் உதவி செய்கிறார். அவரது அயரா முயற்சிகளால் சில நாட்களுக்கு பின், மாணவர்களின் ஆங்கில மொழி பாடத்தின் மதிப்பெண்கள் வெகுவாக உயர்ந்துள்ளன. வகுப்பில் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர் வெளியூரில் வேலை செய்கின்றனர். இந்த மாணவர்கள், தத்தமது தாத்தா பாட்டியுடன் வாழ்கின்றனர். நகர குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அவர்கள் வாழ்க்கையிலான துன்பங்களை ஆழமாக உணர்ந்து கொண்டுள்ளனர். இம்மாணவர்களின் குழந்தைக்குரிய முகங்கள், அறிவை அதிகரிக்க எதிர்பார்க்கும் ஆர்வம் ஆகியவற்றைக் கண்டு, Lu Ye அம்மையாருக்கு ஆழமான பொறுப்பு உணர்வு ஏற்பட்டது. வகுப்புக்கு பின்பு, வாழ்க்கை மற்றும் படிப்பில் அவர் மாணவர்களுக்கு அடிக்கடி உதவி செய்கின்றார். ஒரு குழந்தை, ஒரு விதை போல் வளர்கின்றார். உரிய மண், ஈரப்பதம், தேவையான வெப்பம் ஆகியவற்றை ஆசிரியர்கள் வழங்கினால்தான், அவர்கள் சீராக வளரக்கூடும் என்று Lu Ye அம்மையார் கூறுகின்றார். இப்பள்ளியின் மாணவர் Cao Xiao Yan கூறியதாவது: "ஆசிரியர் Lu கற்பிக்கும் பாடத்தை மாணவர்கள் விரும்பி படிக்கின்றனர். அவர் சொல்லிக்கொடுக்கும் பாடங்களை எளிதில் புரிந்து கொள்கின்றனர். அவர் எங்கள் மீது மிகுந்த அக்கறை செலுத்துகின்றார். எங்கள் மனதில் அவர் சிறந்த ஆசிரியராக திகழ்கின்றார்" என்றார், அவர்.
|